GP Muthu: மகள் எடுத்த 10th மார்க்கை சொல்லி பெருமைப்பட்ட ஜி.பி முத்து... காரணம் கேட்டா கலங்கிடுவீங்க!


  • சென்னை: சமூக வலைதளங்கள் மூலம் பிரபலமாகி, பின்னர் சின்னத்திரை மற்றும் சினிமாவிலும் தனக்கென இடம்பிடித்த ஜி.பி முத்து, தற்போது தனது மகள் குறித்து வெளியிட்டுள்ள உருக்கமான வீடியோ ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மகளின் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவை மிகுந்த பெருமையோடு பகிர்ந்துள்ள அவரது வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    Advertisement

    ஜிபி முத்து மகள் மதிப்பெண்

    அந்த வீடியோவில் பேசிய ஜி.பி முத்து, "என்னோட மகள் பத்தாம் வகுப்பு பரீட்சை எழுதி இருக்காங்கன்னு எல்லாருக்கும் தெரியும். எவ்வளவு மார்க் எடுத்திருக்காங்கன்னு நிறைய பேர் கேட்டுட்டே இருந்தீங்க. நல்ல மார்க் எடுத்திருக்கிறாளா என்று கேட்டு இருந்தீங்க. என் மகளே சொல்லட்டும்," என்று அருகில் இருந்த மகளிடம் கேட்கிறார். அதற்கு அவரது மகள், 331 மதிப்பெண் எடுத்திருப்பதாக கூறுகிறார்.

    Advertisement

    ஜிபி முத்து உருக்கம்

    இதைத்தொடர்ந்து மிகவும் உணர்ச்சிவசப்பட்ட ஜி.பி முத்து, "இது எல்லாருக்கும் பெரிய மார்க் மாதிரி தெரியாமல் இருக்கலாம். ஆனா என்னைப் பொறுத்தவரைக்கும் இது ரொம்ப பெரிய விஷயம். ஏன்னா, அவ எக்ஸாம் எழுதுற நேரத்துல நாங்க குடும்பமாக பெரிய பிரச்சனையில இருந்தோம்.

    எங்க ஊர்ல நடந்த வழி பிரச்சனை காரணமாக என்னையும் என் குடும்பத்தையும் தாக்கினாங்க. ஹாஸ்பிடல், பிரச்சனைன்னு நாங்க அலைஞ்சுக்கிட்டு இருந்தோம். அந்த மனநிலையிலேயே என் மகள் பரீட்சை எழுதி இந்த மார்க் எடுத்திருக்கா. அதனால இது எனக்கு ரொம்ப பெருமை," என்று கூறியுள்ளார்.

    Advertisement

    மகள் மீது நம்பிக்கை

    மேலும், "இது ஆரம்பம் தான். 12ம் வகுப்புல இன்னும் நல்ல மார்க் எடுப்பா என்ற நம்பிக்கை இருக்கு. இப்போவே என் மகள் எடுத்த மார்க் எனக்கு சந்தோஷம்தான்," என்று மகளுக்கு ஊக்கமும் அளித்தார்.

    டிக்டாக் வீடியோக்கள் மூலம் மக்களின் கவனத்தை ஈர்த்த ஜி.பி முத்து, தனது தனித்துவமான பேச்சு பாணியால் சமூக வலைதளங்களில் பெரும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்று இன்னும் அதிக பிரபலமானார். அதன் பிறகு திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், யூடியூப் வீடியோக்கள் என தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வருகிறார்.

    Advertisement

    வாழ்த்துக்கள் ஜிபி முத்து

    பெரும்பாலும் கலகலப்பாக ரசிகர்களை சிரிக்க வைக்கும் ஜி.பி முத்து, இந்த முறை ஒரு தந்தையாக பேசிய விதம் பலரையும் நெகிழ வைத்துள்ளது. "மார்க் குறைவு இல்லை... சூழ்நிலையை தாண்டி எடுத்த வெற்றி இது," என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து அவருடைய மகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

    English Summary

    Social media personality and actor GP Muthu has touched fans with an emotional video about his daughter’s 10th standard exam results. In the viral clip, he proudly revealed that his daughter scored 331 marks. While some may see it as an average score, GP Muthu explained why it means so much to him. He said his family was going through an extremely stressful period during her exams due to a serious local dispute that allegedly led to attacks and hospital visits. Despite those emotional challenges, his daughter managed to complete her exams and secure the score, making it a proud achievement for him as a father. He also expressed confidence that she would perform even better in her 12th standard exams. Fans have been praising his heartfelt words and congratulating his daughter for overcoming difficult circumstances.