விஜய் முதல்வராவார்னு நானே நம்பல.. ஆனா 3மணி நேரம் திரையில் பார்த்து நம்பி CM ஆக்கிட்டாங்க.. ஹெச் வினோத் ஓபன்

  • சென்னை: ஜனநாயகன் படம் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் பேசப்பட்டு கொண்டிருக்கும் நேரத்தில் இயக்குனர் ஹெச் வினோத் சில நாட்களுக்கு முன்பு கொடுத்த பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த பேட்டியில் அவர் விஜய்யின் அரசியல் வெற்றி குறித்து பேசிய விதம் ஒரு பக்கம் ரசிகர்களை கவர்ந்திருக்க, மற்றொரு பக்கம் நெட்டிசன்கள் அதை வைத்து கேள்விகளையும் எழுப்பி விஜய்யை கலாய்த்து வருகின்றனர்.

    Advertisement

    ஹெச் வினோத் பேசும்போது, விஜய் தேர்தலில் வெற்றி பெறுவார் என்று நானே எதிர்பார்க்கவே இல்லை. முன்னணி ஊடகங்களில் அவருக்கு 5 முதல் 10% வாக்குகள் தான் கிடைக்கும் என்று சொன்னார்கள். நானும் அதைத்தான் நம்பினேன். ஆனால் மக்கள் அவரை மிகப் பெரிய வெற்றியுடன் முதல்வர் ஆக்கினார்கள். அது எனக்கே ஆச்சரியமாக இருந்தது.

    Advertisement

    இயக்குனர் ஹெச் வினோத் பேச்சு

    அரசியலுக்கு வருவதற்கு முன்பே விஜய் என்ன செய்ய வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறார். ஆனால் நாம் தான் அவரை சரியாக எடை போடவில்லை என்றும் அவர் சொல்லி இருக்கிறார். அதோடு 1000 கோடி சொத்து வைத்திருக்கும் ஒருவர் நான் கஷ்டப்படுகிறேன் என்று சொன்னாலும் மக்கள் அதை நம்பி அவருக்காக வருத்தம் தெரிவிக்கிறார்கள். மக்கள் இவ்வளவு நல்லவங்களா? இருக்காங்களான்னு எனக்கு ஆச்சரியமா இருக்கு.

    நமக்கு ஒருவரை பிடித்து இருந்துச்சுன்னா அவர் பக்கம் எப்போதும் நிற்க மக்கள் நினைக்கிறார்கள், அது எனக்கு பெரிய ஆச்சரியம் என்று அவர் வெளிப்படையாக பேசியிருக்கிறார். மேலும் நானும் விஜய் சாருடன் பல மாதங்களாக வேலை பார்த்து இருக்கிறேன் ஆனால் அவரைப் பற்றி எனக்கு புரிந்தது வேறு, ஆனால் மக்கள் அவரை 2 1/2 மணி நேரம் திரையில் பார்த்து நம்புறாங்க. அவரை நம்பி அவரிடம் ஆட்சியை அதிகாரத்தை ஒப்படைத்து இருக்கிறார்கள் என்றால் அவர்களுக்கு இடையில் ஏதோ ஒரு நம்பிக்கை இருக்கிறது. அதை என்பதை நான் பிறகு புரிந்து கொண்டேன் என்று அவர் சொல்லி இருக்கிறார்.

    Advertisement

    ரசிகர்களின் பாராட்டு

    இந்த வீடியோவை விஜய் ரசிகர்கள் அதிகமாக பகிர்ந்து வருகிறார்கள். மேலும் பக்கத்தில் இருந்தவர்களுக்கே விஜய்யின் செல்வாக்கு புரியவில்லை என்று விஜய் ரசிகர்கள் சொல்லி வருகிறார்கள். ஆனால் இதை நெட்டிசன்கள் வேறு விதமாக கலாய்க்கிறார்கள். அதாவது மக்கள் நம்பியது ஆச்சரியம்தான், மக்கள் தவறு செய்து விட்டார்கள் என்று வினோத் சொல்ல வருகிறாரா? மக்கள் எமோஷனலாக முடிவெடுத்து விட்டார்கள் என்று வினோத் மறைமுகமாக சொல்கிறாரா? என்று சிலர் கேள்விகளை எழுப்புகிறார்கள்.

    விமர்சனங்கள்

    ஒரு இயக்குனர் பேசிய வேண்டிய விஷயத்தை தாண்டி அரசியல் விளக்கம் கொடுக்க முயற்சிக்கிறாரா? என்ற விமர்சனங்களும் அவர் மீது வருகிறது. ஆனால் வினோத் மனதில் பட்டதை வெளிப்படையாக சொன்னாலும் அது இப்போ சோசியல் மீடியாவில் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. விஜயின கடைசி படத்தை இயக்கி அவருக்கு ஒரு பெரிய ஃபேர்வெல் கொடுத்து இருக்கும் வினோத் விஜய்யை பற்றி தவறாக பேச வேண்டிய அவசியம் இல்லை என்று அவருக்கு சப்போர்ட்டாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

    English Summary

    H. Vinoth: A few days ago director H Vinoth interview is going viral on the internet while the release of Jana nayagan is being talked about at the box office. In that interview, the way he talked about Vijay's political success attracted the fans on one hand, on the other hand netizens are raising questions and making Vijay angry.