Heart Beat 3 Release Date: கோமாவில் இருந்த ரீனா உயிர் பிழைப்பாரா? ஹார்ட் பீட் 3 எப்போ ஒளிபரப்பு? வெளியான தகவல்


  • சென்னை: தமிழ் ஓடிடி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற மருத்துவ பின்னணியிலான வெப் சீரியஸ் ஆன 'ஹார்ட் பீட்' மூன்றாவது சீசனின் வெளியீடு குறித்து புதிய தகவல் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    Advertisement

    மருத்துவமனை வாழ்க்கை, இளம் மருத்துவர்களின் போராட்டங்கள், காதல், நட்பு, உணர்ச்சிகள் மற்றும் பரபரப்பான மருத்துவ சம்பவங்களை மையமாக வைத்து உருவான இந்த தொடர், முதல் சீசன் வெளியான நாளிலிருந்தே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

    Advertisement

    இரண்டு சீசன்களும் சூப்பர் ஹிட்

    இயக்குநர் தீபக் சுந்தர்ராஜன் இயக்கத்தில், டெலி ஃபேக்ட்ரி நிறுவனம் தயாரித்த ஹார்ட் பீட் தொடரின் முதல் சீசன் ஓடிடியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. குறிப்பாக மருத்துவமனை சூழலை யதார்த்தமாக காட்சிப்படுத்திய விதம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

    இதன் வெற்றியைத் தொடர்ந்து வெளியான இரண்டாவது சீசனும் அதே அளவுக்கு வரவேற்பைப் பெற்றது. கதாபாத்திரங்களின் உணர்ச்சிகரமான பயணம், எதிர்பாராத திருப்பங்கள் மற்றும் மருத்துவ அவசர நிலைகள் தொடரின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தன.

    ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய கிளைமாக்ஸ்

    ஹார்ட் பீட் 2 சீசனின் இறுதி எபிசோட் ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முக்கிய கதாபாத்திரமான ரீனா (தீபா பாலு) கோமா நிலைக்கு செல்வதுடன் சீசன் முடிவடைந்தது.

    Advertisement

    அதனால், "ரீனா உயிர் பிழைப்பாரா?", "அவரது வாழ்க்கையில் அடுத்து என்ன நடக்கும்?", "மருத்துவமனையில் நடக்கும் புதிய பிரச்சனைகள் என்ன?" போன்ற பல கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்தன.

    மீண்டும் களமிறங்கும் பழைய நட்சத்திரங்கள்

    மூன்றாவது சீசனிலும் ரசிகர்களின் விருப்பமான பல நடிகர்கள் மீண்டும் நடிக்க உள்ளனர். நடிகை அனுமோள், கார்த்திக் குமார், தீபா பாலு, யோகலட்சுமி, தாபா, சாருகேஷ், ராம், சபரிஷ், சர்வா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் மீண்டும் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பழைய கதைக்களம் தொடரும் அதே நேரத்தில் புதிய திருப்பங்களும் இடம்பெறும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

    Advertisement

    வெளியீடு எப்போது?

    சமீபத்தில் ஹார்ட் பீட் 3 குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது. இதனால் தொடரின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. ஆனாலும் அப்போது அதில் எப்போ இருந்து ஒளிபரப்பாகும் என்று கூறப்படவில்லை. தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி, ஹார்ட் பீட் 3 இணையத் தொடர் வரும் ஜூன் 25 ஆம் தேதி ஓடிடியில் வெளியாகும் என கூறப்படுகிறது. இருப்பினும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

    சூர்யாவின் 'கருப்பு’ முதல் அக்‌ஷய் குமாரின் படம் வரை... இந்த வாரம் OTT-யை கலக்க வரும் 5 பெரிய ரிலீஸ்கள்
    Advertisement

    ரசிகர்கள் எதிர்பார்ப்பது என்ன?

    மூன்றாவது சீசனில் ரீனாவின் உடல்நிலை என்ன ஆகும்? மருத்துவமனையில் புதிய டாக்டர்கள் வருவார்களா? பழைய காதல் கதைகள் தொடருமா? புதிய வில்லன் கதாபாத்திரம் அறிமுகமாகுமா? போன்ற பல கேள்விகளுக்கு பதில் கிடைக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் இந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில் இந்த சீரிஸில் நடிக்கும் கார்த்திக் நான் விரைவில் உங்களை வந்து சந்திக்க போகிறேன் என்று போஸ்ட் போட்டு இருக்கிறார்.

    மருத்துவம், காதல், நட்பு, குடும்ப உணர்வுகள் என அனைத்து அம்சங்களையும் கலந்த ஹார்ட் பீட் தொடரின் மூன்றாவது சீசன், முந்தைய சீசன்களை விட இன்னும் பெரிய வெற்றியை பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

    English Summary

    The popular Tamil medical drama Heart Beat is gearing up for its much-awaited third season, creating huge excitement among OTT viewers. Directed by Deepak Sundarrajan and produced by Tele Factory, the series has earned a loyal fan following through its realistic portrayal of hospital life, young doctors, emotional relationships, and intense medical emergencies. Both previous seasons received strong appreciation from audiences for their engaging storytelling and emotional depth.The second season concluded with a shocking cliffhanger as Reena, played by Deepa Balu, slipped into a coma, leaving viewers with numerous unanswered questions. Fans are now eagerly waiting to learn whether Reena survives, how her condition impacts the hospital, and what new challenges await the doctors. The suspense-filled ending has made Season 3 one of the most anticipated Tamil web series releases of the year.According to reports, familiar faces including Anumol, Karthik Kumar, Deepa Balu, Yogalakshmi, Thapa, Charukesh, Ram, Sabarish, and Sarva are expected to return for the new season. While an official release date has not yet been confirmed, industry buzz suggests that Heart Beat Season 3 could premiere on June 25. Recent promotional updates and social media posts from cast members have further increased expectations, with fans hoping for bigger emotional moments, fresh medical cases, new character arcs, and answers to the mystery surrounding Reena’s fate.