சென்னை: ஓடிடி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தமிழ் வெப் சீரிஸ்களில் ஒன்றான 'ஹார்ட் பீட்' குறித்து தற்போது வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. பல மாதங்களாக காத்திருந்த ரசிகர்கள், ஜூன் 25-ம் தேதி சீசன் 3 வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில், தற்போது அதில் பெரிய சந்தேகம் எழுந்துள்ளது.
கொரோனா காலத்திற்கு பிறகு தமிழ் ரசிகர்கள் மத்தியில் வெப் சீரிஸ்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. அந்த வரிசையில் ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியான ஹார்ட் பீட் ரசிகர்களின் மனதை வென்ற தொடர்களில் ஒன்றாக மாறியது. மருத்துவமனை பின்னணியில் உருவான இந்த தொடர், காதல், நட்பு, குடும்ப உறவுகள், மருத்துவர்களின் வாழ்க்கை போராட்டம், நோயாளிகளின் உணர்வுகள் என பல விஷயங்களை ஒன்றாக கலந்து சொன்னதால் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. தீபக் சுந்தர்ராஜன் இயக்கிய இந்த தொடரில் அனுமோள், கார்த்திக் குமார், தீபா பாலு, யோகலட்சுமி, சர்வேஷ், சபரீஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். முதல் சீசன் வெற்றிக்கு பிறகு வெளியான இரண்டாவது சீசன் 100 எபிசோடுகளை கடந்தும் ரசிகர்களின் ஆதரவை பெற்றது. குறிப்பாக கடைசி சில எபிசோடுகள் சமூக வலைதளங்களில் அதிகமாக பேசப்பட்டன. அதில் இடம்பெற்ற எமோஷனலான காட்சிகள், மருத்துவர்களின் வாழ்க்கையை காட்டிய விதம் மற்றும் கதாபாத்திரங்களின் வளர்ச்சி ரசிகர்களை சீரிஸ் மீது மேலும் ஈர்த்தது. சமீப வாரங்களாக சமூக வலைதளங்களில் ஹார்ட் பீட் சீசன் 3 ஜூன் 25-ம் தேதி வெளியாகும் என்ற தகவல் பரவியது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்தனர். பலரும் சமூக வலைதளங்களில் கவுண்ட்டவுன் போட்டு காத்திருக்க ஆரம்பித்தனர். ஆனால் தற்போது வெளியாகியுள்ள தகவல் அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக ஹார்ட் பீட் போன்ற பெரிய வெப் சீரிஸ்களுக்கு வெளியீட்டுக்கு முன்பே டீசர், போஸ்டர் அல்லது புரோமோ வெளியாகும். ஆனால் ஜூன் 25 நெருங்கியும் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இதனால் ஜூன் 25 ரிலீஸ் தகவல் உண்மையா என்ற சந்தேகம் ரசிகர்களிடையே உருவாகியுள்ளது. ஓடிடி வட்டாரங்களில் பரவும் தகவலின்படி, ஹார்ட் பீட் சீசன் 3-ன் வெளியீடு ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மற்றும் இறுதி கட்ட பணிகள் காரணமாக வெளியீடு தாமதமாகலாம் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் இதுகுறித்து ஜியோ ஹாட்ஸ்டார் அல்லது படக்குழு தரப்பில் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. ஹார்ட் பீட் வெறும் மருத்துவமனை கதையாக மட்டும் இல்லை. ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் தனி ரசிகர் பட்டாளம் உருவாகியிருக்கிறது. கடைசி சீசனில் பதிலில்லாமல் விடப்பட்ட பல கேள்விகளுக்கும், சில கதாபாத்திரங்களின் எதிர்காலத்திற்கும் சீசன் 3-ல் பதில் கிடைக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அதனால் தான் ஒவ்வொரு நாளும் சமூக வலைதளங்களில், "ஹார்ட் பீட் சீசன் 3 எப்போது? ரிலீஸ் தேதி அறிவிங்க!" என்ற பதிவுகள் தொடர்ந்து வைரலாகி வருகின்றன.ஓடிடியில் செம ஹிட் அடித்த ஹார்ட் பீட்
இரண்டாவது சீசனுக்கு அதிக வரவேற்பு
காத்திருந்த ரசிகர்கள்
Blast OTT release: ஓடிடியில் வரும்
ஏமாற்றம்
ஜூலைக்கு தள்ளிப்போகிறதா?
எதிர்பார்ப்பின் காரணம்