ஹார்ட் பிட் சீசன் 3-ல் என்ன நடக்கப்போகிறது? ரீனா அவ்வளவுதானா? தீபா பாலு வெளியிட்ட ஷாக் பதிவு


  • சென்னை: ஹாட்ஸ்டாரில் வெளியான ஹார்ட் பீட் வெப் சீரிஸ், தமிழ் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ஹாஸ்பிடல் பின்னணியிலான தொடர்களில் ஒன்றாக மாறியது. முதல் சீசன் வெற்றியைத் தொடர்ந்து வெளியான இரண்டாவது சீசனும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

    Advertisement

    மருத்துவமனையில் நடக்கும் பரபரப்பான சம்பவங்கள், மருத்துவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை, காதல், நட்பு, தியாகம், உணர்ச்சிப்பூர்வமான காட்சிகள் என ஒவ்வொரு எபிசோடும் ரசிகர்களை அடுத்த பகுதியை எதிர்பார்க்க வைத்தது. குறிப்பாக ரீனா கதாபாத்திரம் ரசிகர்களின் மனதில் தனி இடத்தை பிடித்ததால், தற்போது அனைவரும் "ஹார்ட் பீட் சீசன் 3 எப்போது வெளியாகும்?" என்ற கேள்வியுடன் காத்திருக்கின்றனர்.

    Advertisement

    இப்படிப்பட்ட நேரத்தில், ரீனா கதாபாத்திரத்தில் நடித்த நடிகை தீபா பாலு தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவு ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

    தீபா பாலு பதிவு

    அவர் தனது பதிவில், "சில இடங்களை... சில மனிதர்களை விட்டு போவது எளிதல்ல. ஆனால் சில நேரங்களில் குட்பை சொல்ல வேண்டிய சூழ்நிலை வரும். எப்போதும் நன்றியுடன் இருக்கிறேன். மிக்க நன்றி ரீனா..." என்று குறிப்பிட்டுள்ளார்.

    ஹார்ட் பீட் சீசன் 2 கதை

    இந்த ஒரு பதிவு வெளியான சில நிமிடங்களிலேயே ரசிகர்கள் கமெண்ட் பகுதியில் கேள்விகளை குவிக்கத் தொடங்கிவிட்டனர். ஏற்கனவே இரண்டாவது சீசனின் இறுதியில் ரீனா உயிருக்கு போராடும் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது போல காட்சிகள் இடம்பெற்றிருந்தன. அந்த காட்சிக்குப் பிறகு மூன்றாவது சீசனில் அவரது கதாபாத்திரம் எப்படி தொடரும் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில், தற்போது தீபா பாலுவின் "குட்பை ரீனா" பதிவு ரசிகர்களை இன்னும் அதிகமாக குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

    Advertisement

    குழப்பத்தில் ரசிகர்கள்

    ஒரு தரப்பு ரசிகர்கள், "மூன்றாவது சீசனில் ரீனா இறந்துவிடுகிறாரா? அதைத்தான் இப்படி மறைமுகமாக சொல்கிறாரா?" என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். இன்னொரு தரப்பு ரசிகர்கள், "இது சீசன் 3 படப்பிடிப்பு முடிந்ததற்கான உணர்ச்சிப்பூர்வமான பதிவு மட்டும்தான். அதற்கு மேல் எதுவும் இருக்காது" என்று கூறி வருகிறார்கள். அதே சமயம், "தீபா பாலு இந்த தொடரிலிருந்தே விலகிவிட்டாரா? இல்லை ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்க இப்படிப்பட்ட பதிவு போட்டாரா?" என்ற சந்தேகங்களும் சமூக வலைதளங்களில் அதிகமாக பேசப்பட்டு வருகின்றன.

    Heartbeat 2 climax: உயிர் பிழைத்த ரீனா அப்பாவுடன் இணைந்த மறுநிமிடம்! ஹார்ட் பீட் 2 கிளைமாக்ஸில் அதிர்ச்சி ட்விஸ்ட்
    Advertisement

    தீபா பாலுவின் பதிவுக்கு கீழ் ரசிகர்கள் பதிவிட்டு வரும் கருத்துகளும் தற்போது வைரலாகி வருகின்றன. "என்னம்மா இப்படி பண்றீங்களே... எங்களுக்கு ஹார்ட் அட்டாக் வர வைக்கிறீங்களே", "ரீனா இல்லாமல் ஹார்ட் பீட் எப்படி இருக்கும்?", "தயவுசெய்து தெளிவாக சொல்லுங்கள்... சீசன் 3-ல் நீங்க இருக்கீங்களா இல்லையா?", "இந்த போஸ்டை பார்த்ததிலிருந்து மனசே பதறிக்கிட்டு இருக்கு" என்று பலரும் தங்களுடைய கவலையை வெளிப்படுத்தி வருகின்றனர்.

    குழப்பத்தில் ரசிகர்கள்

    இதுவரை ஹார்ட் பீட் சீசன் 3 குறித்து தயாரிப்பு நிறுவனம் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. அதேபோல் தீபா பாலுவும் தனது பதிவுக்கு விளக்கம் அளிக்கவில்லை. இதனால், இது உண்மையிலேயே ரீனா கதாபாத்திரத்துக்கான விடைபெறலா, இல்லை ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டும் ஒரு புரமோஷன் யுக்தியா, அல்லது மூன்றாவது சீசனில் மிகப்பெரிய ட்விஸ்ட் காத்திருக்கிறதா என்ற கேள்விகளுடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

    Advertisement
    “ஹார்ட்பீட் 3 பற்றி மவுனம் உடைத்த தீபா பாலு… ரீனா சொன்ன தகவலால் ரசிகர்கள் எக்சைட்மென்ட்!”

    ஒரே ஒரு "Thank You Reena" பதிவு, ஹார்ட் பீட் சீசன் 3 மீது இருந்த எதிர்பார்ப்பை இன்னும் பல மடங்கு உயர்த்தியிருக்கிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை இந்த சஸ்பென்ஸ் நீடிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ரசிகர்களோ, "ரீனா திரும்ப வர வேண்டும்... ஹார்ட் பீட் சீசன் 3-ல் அந்த கதாபாத்திரம் இல்லையென்றால் அது முழுமையாக இருக்காது" என்ற நம்பிக்கையுடனும், பதற்றத்துடனும் காத்திருக்கிறார்கள்.

    Topics: #hotstar

    English Summary

    Heartbeat Season 3: Heartbeat has become one of Tamil's most loved medical web series, with Reena emerging as a fan-favorite character. Actress Deepa Balu recently shared an emotional social media post saying goodbye to Reena, triggering widespread speculation about her future in Heartbeat Season 3. With no official clarification from the makers or Deepa Balu, fans continue to eagerly await updates on the highly anticipated third season.