தொடர்ந்து 3 நாள் லீவு.. இந்த வாரம் ஒடிடியில் வெளியாகும் ஹிட் படங்கள்.. முழு லிஸ்ட்

  • சென்னை: இந்த வாரம் சனி, ஞாயிறு, திங்கள் என தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை வருகிறது. செப்டம்பர் 14ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி என்பதால் வார இறுதி முதல் சேர்ந்து இந்த விடுமுறையும் கிடைத்திருக்கிறது. லீவ் என்றதும் சிலர் ஊருக்கு கிளம்புவாங்க. சிலர் கோவில், சுற்றுலா என பிளான் போடுவாங்க. ஆனால் அடிக்கிற வெயிலுக்கு வீட்டிலேயே ஜாலியா இருக்கலாம் என்று நினைப்பவர்களுக்கு இந்த வாரம் ஓடிடி ரிலீஸ் கை கொடுக்கும்.

    Advertisement

    சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ்

    தியேட்டரில் நல்ல வரவேற்பு பெற்ற விஸ்வநாத் அண்ட் சன்ஸ் செப்டம்பர் 11ஆம் தேதி சன் நெக்ஸ்ட் வெளியாகிறது. சூர்யா, மமீதா பைஜூ, ராதிகா சரத்குமார், ரவீனா உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்தை வெங்கி அட்டூரி இயக்கி இருக்கிறார். ஒரு துப்பாக்கி சூடுதல் வீரரில் வாழ்க்கை, குடும்ப பொறுப்புகள், காதல் என கதை சொல்கிறது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் மொழிகளிலும் படம் ஸ்ட்ரீம் ஆகிறது. தியேட்டரில் படத்தை பார்க்காமல் மிஸ் பண்ணிய ரசிகர்களுக்கு இந்த 3 நாள் விடுமுறையில் நல்ல டைம் பாஸ் படம் இருக்கிறது.

    Advertisement

    விஷாலின் மகுடம்

    விஷால், அஞ்சலி நடிப்பில் வெளியான மகுடம் திரைப்படம் செப்டம்பர் 11ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகிறது. ஆக்சன், திரில்லர் கதை என்பதால் வீட்டில் உட்கார்ந்து ஒரு சஸ்பென்ஸ் படத்தை பார்க்க நினைப்பவர்களுக்கு இது ஒரு ஆப்ஷன்.

    மலையாளத்தில் வரவு

    மலையாள சினிமா ரசிகர்களுக்கு ஜோஜு ஜார்ஜ் நடித்த வரவு திரைப்படம் செப்டம்பர் 11ஆம் தேதியான இன்று ஜி5யில் வெளியாகிறது. ஒரு சம்பவத்திற்கு பிறகு ஒரு கிராமத்தில் புதைந்து கிடக்கும் பழைய உண்மைகள் மீண்டும் வெளியே வருகிறது. அதனால் உருவாகும் மோதல்கள் என திரில்லர் பானியில் இந்த படத்தின் கதை நகர்கிறது.

    Advertisement

    அதுபோல கொஞ்சம் லைட்டாக காமெடி பார்த்து நேரத்தை கழிக்க நினைப்பவர்களுக்கு பிரின்ஸ் ஆப் மாலிவுட் ஜியோ ஹாட்ஸ்டாரில் செப்டம்பர் 15ஆம் தேதி வருகிறது. பணக்கார குடும்பத்தை சேர்ந்த இளைஞன் குடும்பத் தொழிலை விட்டுவிட்டு நடிகராக வேண்டும் என்று ஆசையுடன் ஓடுவது தான் இந்த படத்தின் கதை.

    அதோடு தெலுங்கில் Panchanama, மலையாளத்தில் Vivaah உள்ளிட்ட புதிய படங்களும், வெப் சீரிஸ்கலும் இந்த வரம் ஒடிடியில் வெளியாகிறது. அதனால் இந்த விநாயகர் சதுர்த்தி விடுமுறையில் என்ன படம் பார்ப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தால் அப்போ சூர்யாவை பிடித்தவர்கள் விஸ்வநாத் அண்ட் சன்ஸ், ஆக்சன் ரசிகர்கள் மகுடம் என ஸ்பெஷல் ஐட்டம் இருக்கிறது.

    English Summary

    This week brings a three-day consecutive holiday—Saturday, Sunday, and Monday. Since Vinayagar Chaturthi falls on September 14th, this holiday has combined with the weekend. While some people might head out of town or plan visits to temples and tourist spots, OTT releases offer a great option for those who prefer to stay home and enjoy themselves amidst the scorching heat.