நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் 2 எப்படி இருக்கு? ப்ரோமோவில் கவனிச்சீங்களா? தீபாவளிக்கு சம்பவம் இருக்கு

  • சென்னை: நயன்தாரா மீண்டும் அம்மன் அவதாரத்தில் வரப்போகிறார் என்று அறிவிப்பு வந்ததுமே மூக்குத்தி அம்மன் 2 ரசிகர்களுக்கு கொஞ்சம் எதிர்பார்ப்பு இருந்தது. இப்போது அந்த எதிர்பார்ப்புக்கு இன்னொரு அப்டேட் வந்திருக்கிறது. மூக்குத்தி அம்மன் 2 மகா சக்தி தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியாகும் என்று ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. இந்த படம் வரும் நவம்பர் 6, 2026 தீபாவளி ரிலீஸ் ஆக வருகிறது ஏற்கனவே அதே நாளில் சூர்யாவின் படமும் வெளியாக இருப்பதால் இந்த முறை பெரிய எதிர்பார்ப்பு ஏற்படுத்தி இருக்கிறது.

    Advertisement

    நயன்தாராவின்

    2020ல் வந்த மூக்குத்தி அம்மன் படத்தில் நயன்தாராவை அம்மன் கேரக்டரில் பார்த்தோம். அந்த படத்தில் பக்தி மட்டுமில்லாமல் நம்மை சுற்றி நடக்கும் விஷயங்களை கலாய்க்கிற காமெடியும் இருந்தது. ஆனால் இப்போது வர போகும் மூக்குத்தி அம்மன் 2வில் மாயசக்தி உலகத்தை இன்னும் பெரிய அளவிற்கு எடுத்து சொல்ற மாதிரி இருக்கிறது.

    Advertisement

    ட்ரெய்லர் காட்சிகள்

    ப்ரோமோவில் குழந்தையாக இருக்கும் இளவரசனை காப்பதற்காக மொத்த ஊரும் போராடுகிறது. அந்த சிறுவனை காப்பாற்றுவதற்காக சக்தி அவதாரத்தில் நயன்தாரா வருகிறார். அதிலும் கெட்டப்பில் நீண்ட கூந்தல், கையில் திரிசூலம் என்று முழுமையாக அவருடைய கெட்டப்பை பார்க்கும் போது இந்த தடவை அம்மன் களத்தில் கொஞ்சம் சீரியஸ் ஆகவே இறங்கி இருக்கிறார்கள் போல என்ற எண்ணம் வராமல் இருக்காது.

    மூக்குத்தி அம்மன் 2 ஸ்பெஷல்

    அதே நேரத்தில் படம் ஒரு பக்தி படம் ஆக மட்டுமல்லாமல் போர், செண்டிமெண்ட், எமோஷனல் என கமர்சியல் படமாக உருவாகி இருப்பதாக தெரிகிறது. அது போல இந்த படத்தில் இன்னொரு ஸ்பெஷல் என்னன்னா நயன்தாரா மட்டும் இல்லாமல் பெரிய நடிகர்கள் பட்டாளமே இருக்கிறது. ரெஜினா கசாண்ட்ரா, யோகி பாபு, ஊர்வசி, மைனா நந்தினி, சிங்கம்புலி, நிதின் சத்யா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இதில் ரெஜினா கேரக்டர் வித்தியாசமாக இருக்கும் என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

    Advertisement

    பிரம்மாண்ட படைப்பு

    இந்தப் படத்தை சுந்தர் சி இயக்குவதால் அவருடைய படங்களில் கதை ஒரு பக்கம் போகும், காமெடிய இன்னொரு பக்கம் ஓடும். அதற்கு மேலாக ஏகப்பட்ட கேரக்டர்கள் வந்து நம்மை என்டர்டைன்மெண்ட் பண்ணிக்கொண்டு இருப்பாங்க. இங்கு அதற்கு மேலாக அம்மன், பேண்டஸி பிரம்மாண்ட காட்சிகள் ஒன்று சேர்ந்து இருக்கிறது. இசையை ஹிப் ஹாப் தமிழா கவனிக்கிறார். வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் தயாரிக்கப்படுகிறது.

    English Summary

    Mookuthi Amman 2 : Fans were already anticipating *Mookuthi Amman 2* the moment it was announced that Nayanthara would reprise the role of the Goddess. Now, there is a fresh update: a promo has been released confirming that *Mookuthi Amman 2: Maha Sakthi* will hit theaters during Diwali. With the film scheduled for release on Diwali—November 6, 2026—and a Suriya film also slated for the same day, expectations are running high.