ஹாஸ்பிடலில் இருக்கும் சொக்கத்தங்கம் நடிகை உமா சங்கரிக்கு எப்படி இருக்கு? வெளியான போஸ்ட்

  • சென்னை : தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய சினிமாவில் ஒரு காலத்தில் கதாநாயகியாக அறிமுகமான உமா சங்கரி தற்போது மார்பக புற்று நோய்க்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரது உடல்நிலை குறித்து வெளியாகி உள்ள புதிய தகவல் ரசிகர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.

    Advertisement

    நடிகை உமா சங்கரி தன்னுடைய இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்த பதிவில், மருத்துவமனையில் சிகிச்சையில் பெற்றுக் கொண்டிருக்கும் உமா சங்கரி நலம் பெற வேண்டும் என்பதற்காக கர்நாடகாவில் சித்ரதுர்கா பகுதி ரசிகர்கள் மற்றும் ஒரு அறக்கட்டளை சார்பில் விரைவாக முழுமையாக குணம் அடைய வாழ்த்துக்கள் என்ற போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது. அதை உமா சங்கரி தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

    Advertisement

    உமா சங்கரி உடல்நிலை எப்படி இருக்கிறது

    சில வாரங்களுக்கு முன்பு தனக்கு முதல் நிலை மார்பக புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டதாக உமா சங்கரி சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். அதற்கு பிறகு அவர் ஹீமோதெரபி மற்றும் நோய் எதிர்ப்பு சிகிச்சை பெற்று வருவதாகவும் ஒவ்வொரு நாளும் முன்னேறி கொண்டிருக்கிறேன், கடினமான நாட்களையும் கடந்து வருகிறேன். நான் குணமடையும் பாதையில் இருக்கிறேன் என்று உருக்கமாக பகிர்ந்து இருந்தார். மேலும் அந்த பதிவில் குடும்பத்தினரின் ஆதரவுக்கும் ரசிகர்களின் அன்புக்கும் அவர் தொடர்ந்து நன்றி தெரிவித்து வருகிறார்.

    Advertisement

    நடிகை உமா சங்கரி யார்

    நடிகை உமா சங்கரி கன்னட திரைப்பட இயக்குனர் டி ராஜேந்திர பாபு மற்றும் பிரபல நடிகை சுமித்ராவின் மகள்தான். அவரது தங்கை நட்சத்திராவும் நடிகையாக அறிமுகமானவர். பின்னர் துஷ்யன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு மகனும் இருக்கின்றனர். திருமணத்திற்கு பிறகு பெரிதாக சினிமாக்களில் நடிக்கவில்லை என்றாலும் சோசியல் மீடியாவில் அவ்வபோது தன்னுடைய குடும்ப புகைப்படங்களை பகிர்ந்து வருவார்.

    நடிகை உமா சங்கரி நடித்த திரைப்படங்கள்

    தமிழ் சினிமாவில் வானவில், கடல் பூக்கள், சொக்கத்தங்கம், தென்றல், கோவை பிரதர்ஸ், மணிகண்டன், ரசிகர் மன்றம் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்ததன் மூலம் தென்னிந்திய அளவில் அவருக்கு அதிகமான ரசிகர்கள் உண்டு. ஒரு சில நடிகைகளை பார்த்தாலே ஏதோ பக்கத்து வீட்டு பெண் போல தோன்றும். அதில் ஒருவர் தான் உமா சங்கரி.

    Advertisement

    திருமணத்திற்கு பிறகு உமா சங்கரி சினிமாவை விட்டு விலகி இருந்தாலும் பல வருடங்களுக்கு பிறகு ஒரு சில சீரியல்களிலும் நடித்திருந்தார். இந்த நிலையில் இப்போது அவர் புற்றுநோய் சிகிச்சை எடுத்து வருவதை தெரிந்து கொண்டதும் ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

    தைரியமாக போராடுங்கள் என்று பலரும் அவருக்கு கமெண்ட்ஸ் கொடுத்து இருக்கின்றனர். ஒரு வாரத்திற்கு முன்பு அவர் ஹாஸ்பிடலில் இருந்த படி வெளியிட்ட பதிவு அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்திருந்த நிலையில் அவருக்கு என்னதான் ஆச்சு இப்போ எப்படி இருக்கிறார்? என்று பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில் இப்போது அவர் தன்னுடைய இன்ஸ்டா ஸ்டோரியில் புகைப்படம் பகிர்ந்து இருக்கும் நிலையில் அவர் மெல்ல மெல்ல பழைய நிலைக்கு திரும்பி கொண்டிருக்கிறார் என்று தெரிகிறது.

    English Summary

    Uma Shankari, who once debuted as a lead actress in South Indian cinema—spanning Tamil, Malayalam, Telugu, and Kannada films—is currently undergoing treatment for breast cancer; however, new information regarding her health condition has instilled hope among fans.