ஜெயிலர் 2 எப்படி இருக்கு? டிரெய்லரில் சிக்கிய 2 விஷயம்.. ஆனால் ஒரு சின்ன குறையும் இருக்கு!

  • சென்னை: ரஜினிகாந்த் படம் என்றாலே ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். அதிலும் ஜெயிலர் மாதிரி ஒரு படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்த பிறகு, அதே படத்தின் இரண்டாம் பாகம் வருகிறது என்றால் எதிர்பார்ப்பு எப்படி இருக்கும் என்று சொல்லவே வேண்டாம். அப்படித்தான் இப்போது ஜெயிலர் 2 மீது பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. படம் இன்னும் வெளியாகவில்லை. அக்டோபர் 15-ம் தேதிதான் திரைக்கு வருகிறது. ஆனால் நேற்று வெளியான டிரெய்லரை பார்த்த பிறகு, "இந்தப் படம் எப்படி இருக்கப் போகிறது?" என்ற கேள்விக்கு ஓரளவு பதில் கிடைத்துவிட்டது.

    Advertisement

    முதலில் ஒரு விஷயம் மட்டும் உறுதி. டைகர் முத்துவேல் பாண்டியன் இன்னும் அதே வேகத்தில்தான் இருக்கிறார். ரஜினி திரையில் வரும்போது இருக்கும் அந்த ஸ்டைல், நடக்கும் விதம், வசனம் பேசும் விதம் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கும் எல்லாமே டிரெய்லரில் இருக்கிறது. குறிப்பாக ரஜினியின் அறிமுக காட்சிகளும், ஆக்‌ஷன் காட்சிகளும் ரசிகர்களை கவர்ந்திருக்கின்றன. டிரெய்லர் வெளியான சில மணி நேரங்களிலேயே சமூக வலைதளங்களில் ரஜினியின் ஸ்டைல் மற்றும் வசன உச்சரிப்புக்கு ரசிகர்கள் பெரிய அளவில் வரவேற்பு கொடுத்திருக்கிறார்கள்.

    Advertisement

    ஜெய்லர் 2 ட்ரெய்லர்

    ஆனால் இந்த முறை நெல்சன் இன்னும் ஒரு விஷயத்தை பெரிதாக வைத்திருக்கிறார். அது வில்லன் தான். சுராஜ் வெஞ்சரமூடு ஒரு பக்கம் இருக்க, எஸ்.ஜே. சூர்யா இன்னொரு பக்கம் மிரட்டுகிறார். குறிப்பாக எஸ்.ஜே. சூர்யாவின் கதாபாத்திரம் டிரெய்லரில் நல்ல கவனம் பெறுகிறது. ரஜினியுடன் நேருக்கு நேர் மோதக்கூடிய ஒரு வில்லன் மாதிரியான அமைப்பை நெல்சன் கொடுத்திருக்கிறார். அதே நேரத்தில் வித்யா பாலனுக்கும் இந்தப் படத்தில் முக்கியமான இடம் இருக்கிறது என்பது டிரெய்லரை பார்த்தவுடன் தெரிகிறது.

    ரஜினியிடம் டீ வேண்டுமா, காபி வேண்டுமா என்று அவர் கேட்கும் காட்சியும், "இரண்டில் ஒன்றைத்தான் தேர்வு செய்ய வேண்டும்" என்ற தொனியில் பேசும் காட்சியும் ரசிகர்களிடம் உடனே கவனம் பெற்றுவிட்டது. அதைப் பார்த்த சிலர் வித்யா பாலனின் கதாபாத்திரம் சாதாரணமாக இருக்காது என்று இப்போதே பேச ஆரம்பித்திருக்கிறார்கள். இன்னொரு பக்கம் மோகன்லால், சிவராஜ்குமார் இருவரும் மீண்டும் வருகிறார்கள்.

    Advertisement

    ஜெயிலர் முதல் பாகத்தில் இவர்கள் இருவரும் வந்த சில நிமிடங்களே தியேட்டரில் பெரிய கொண்டாட்டமாக மாறியது. அதனால் இரண்டாம் பாகத்தில் இவர்களுடைய கதாபாத்திரம் எப்படி பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதுதான் ரசிகர்களுக்கு பெரிய எதிர்பார்ப்பு. டிரெய்லரில் இருவருமே தெரிந்துவிட்டார்கள். மோகன்லாலின் மேத்யூ கதாபாத்திரம் இன்னும் பெரிய அளவில் வரலாம் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டிருக்கிறது. சிவராஜ்குமாரின் காட்சியும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

    வெளிப்பட்ட ரகசியம்

    அதோடு இன்னொரு விஷயம் நேற்று முதல் இணையத்தை சுற்றிக்கொண்டிருக்கிறது. அது ஹ்ரித்திக் ரோஷன் தான். டிரெய்லரில் ஒரு இடத்தில் பின்னால் இருந்து ஒரு நபரின் உருவம் மட்டும் தெரிகிறது. அது ஹ்ரித்திக் ரோஷன்தான் என்று ரசிகர்கள் பலரும் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். முகத்தை முழுமையாக காட்டாமல் நெல்சன் வைத்திருப்பது அந்த எதிர்பார்ப்பை இன்னும் அதிகப்படுத்தியிருக்கிறது. ஆனால் இதை படக்குழு அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யவில்லை என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

    Advertisement

    விமர்சனங்கள்

    இங்கேதான் ஜெயிலர் 2 டிரெய்லர் பற்றி ஒரு சின்ன விமர்சனமும் வந்திருக்கிறது. நெல்சன் கொஞ்சம் அதிகமாகவே விஷயங்களை டிரெய்லரில் காட்டிவிட்டாரோ? என்பது தான் பலருக்கும் வரும் கேள்வி. முதல் ஜெயிலர் படத்தின் சுவாரஸ்யமே, யார் எப்போது வருவார்கள், அடுத்து என்ன நடக்கும் என்று தெரியாமல் தியேட்டரில் ரசிகர்களுக்கு கிடைத்த சர்ப்ரைஸ்தான்.

    ஜெயிலர் 2 ஆடியோ லான்ச் ரத்தா? பின்னணியில் விஜய் அரசு? ரசிகர்களுக்கு வந்த ஷாக்!

    குறைகள்

    ஆனால் ஜெயிலர் 2 டிரெய்லரில் மோகன்லால், சிவராஜ்குமார் உள்ளிட்ட பல கதாபாத்திரங்களையும் காட்டிவிட்டார்கள். ஹ்ரித்திக் தொடர்பான காட்சியையும் ரசிகர்கள் கண்டுபிடிக்கும் அளவுக்கு வைத்திருக்கிறார்கள். இதனால் "இவ்வளவு விஷயங்களை டிரெய்லரிலேயே காட்டிவிட்டால் தியேட்டரில் புதிதாக என்ன சர்ப்ரைஸ் இருக்கும்?" என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. ஆனால் அதற்காக படம் சுவாரஸ்யமாக இருக்காது என்று சொல்லிவிட முடியாது.

    Advertisement
    விஜய் முதல்வரானது எனக்கு சத்தியமாக பொறாமை இல்லை! ஆனால்... நடிகர் ரஜினிகாந்த் ஓபனாக விளக்கம்

    ஏனென்றால் டிரெய்லர் காட்டியிருப்பது கதாபாத்திரங்களையும் அவர்களுடைய மோதலையும் மட்டுமே. உண்மையில் முத்துவேல் பாண்டியன் எதற்காக மீண்டும் அந்த உலகத்துக்குள் செல்கிறார், சுராஜ் வெஞ்சரமூட்டின் கதாபாத்திரத்துக்கும் ரஜினிக்கும் என்ன தொடர்பு, எஸ்.ஜே. சூர்யா எப்படிப்பட்ட வில்லன், மோகன்லால் மற்றும் சிவராஜ்குமார் எந்த இடத்தில் வருகிறார்கள் என்பதெல்லாம் படத்தைப் பார்த்தால்தான் தெரியும்.

    எதிர்பார்ப்பு

    அதனால் இப்போதைக்கு ஜெயிலர் 2 பற்றி சொல்ல வேண்டுமென்றால்... ரஜினி ரசிகர்கள் எதிர்பார்க்கும் மாஸ் இருக்கிறது. நெல்சனின் காமெடி இருக்கிறது. அனிருத் பின்னணி இசை இருக்கிறது. பெரிய நட்சத்திர கூட்டணி இருக்கிறது. அதைவிட முக்கியமாக டைகர் முத்துவேல் பாண்டியனின் அந்த பழைய ஸ்டைலும் இருக்கிறது. அதே நேரத்தில், முதல் பாகத்தில் இருந்த அந்த எதிர்பாராத சர்ப்ரைஸ்களை இந்த முறை டிரெய்லரிலேயே கொஞ்சம் அதிகமாக காட்டிவிட்டார்களா என்ற கேள்வியும் இருக்கிறது. இதற்கெல்லாம் ஒரே பதில் அக்டோபர் 15 அன்றுதான் கிடைக்கும்.

    English Summary

    Jailer 2: There is great anticipation surrounding Rajinikanth's *Jailer 2*. The film has not yet been released; it is set to hit screens on October 15th. However, after watching the trailer released yesterday, the question "What will this movie be like?" has been answered to some extent.