எல்லை மீறும் காம ஆசைகள்.. புருஷனை மாற்றிக் கொள்ளும் கதாநாயகிகள்.. Lust stories 3 எப்படி இருக்கு?

  • சென்னை: Netflix- ல் வெளியாகி இருக்கும் லஸ்ட் ஸ்டோரிஸ் 3 (Lust stories 3) பெயரிலேயே என்ன மாதிரியான படம் என்று தெரிந்துவிடும். பெண்களுக்குள் இருக்கும் காமம், தாம்பத்திய ஆசைகள் மற்றும் அவர்களுடைய மன உணர்வுகளை மையமாகக் கொண்ட லஸ்ட் ஸ்டோரீஸ் தொடரின் 2 பாகங்கள் ஏற்கனவே நெட்பிளிக்ஸில் செம ஹிட் ஆனதை தொடர்ந்து இப்போது 3வது சீரிஸ் வெளியாகி இருக்கிறது.

    Advertisement

    ஆனால் இந்த முறை லஸ்ட்டை மட்டும் வைத்து படம் ஓட்டாமல் திருமணத்திற்குள் இருக்கும் சலிப்பு ,சொல்ல முடியாத ஆசையில் ஈர்ப்பு, துரோகம், உறவுக்குள் இருக்கும் புரியாத இடைவெளி என்று கொஞ்சம் ஆழமாகவே விளையாடி இருக்கிறார்கள். வெளிநாடுகளில் பிரபலமான கணவர்களை மாற்றிக் கொள்ளும் கான்செப்ட் தான் இந்த சீரிஸின் கதையாக இருக்கிறது. ஆனால் சொல்லப்பட்டிருக்கும் களம் மறைமுகமான உண்மையை பேசி இருக்கிறது என்பது பலருடைய கருத்து.

    Advertisement

    லட்ஸ் ஸ்டோரி 3 ரிவ்யூ

    அதாவது 40 வயது தாண்டிய கணவன், மனைவி உடலுறவு வைத்துக் கொள்வதில் எந்த சுவாரசியமும் காட்டிக் கொள்வதில்லை என்றும் மனித உறவானது எப்போதும் கிளர்ச்சியை விரும்புகிறது, ஆனால் அதற்குள் இருக்கும் சிக்கல்கள் போன்றவற்றையும் படத்தில் காட்டி இருக்கிறார்கள். பாலிவுட்டின் முன்னணி இயக்குனர் விக்ரமாதித்யா மோத்வானி இயக்கத்தில் கொங்கணா சென் சர்மா, ராதிகா ஆப்தே, விஜய் வர்மா மற்றும் அபிஷேக் பானர்ஜி நடிப்பில் இந்த சீரிஸ் வெளியாகியுள்ளது.

    கதை ஆரம்பத்திலேயே, ராதிகா ஆப்தே தன் கணவருடன் சேர்ந்து கல்யாண நாளில் கொண்டாடிக் கொண்டிருக்கிறார். அந்த ஃபங்ஷனுக்கு வரும் ராதிகாவின் தோழி கொங்கணா பங்க்ஷன் முடிந்த பிறகு ராதிகாவுடன் பேசிக் கொண்டிருக்கிறார். இன்னைக்கு உன் கல்யாண நாள்.. நைட் பட்டாசு பயங்கரமா வெடிக்குமா? என்று ரொம்பவே எதிர்பார்ப்புடன் கேட்கிறார். அதற்கு ராதிகா ஆப்தே ஹும்கும்.. அதெல்லாம் கல்யாணம் முடிஞ்ச புதுசுல தாண்டி.. இப்ப என் வாழ்க்கை அந்த மாதிரி விஷயம் நடந்து ரொம்ப நாளாச்சு என்று விரத்தியோடு பீல் பண்ணி பேசுகிறார்.

    Advertisement

    தாம்பத்திய தேவை

    அதற்கு கொங்கணா என் வீட்டிலேயே இப்படித்தான் என்று அவர் வீட்டு நிலைமையை சொல்லிக் கொண்டிருக்கிறார். பிறகு 2 பேரும் சேர்ந்து ஒரு வெப் சீரிஸ் பார்க்கிறார்கள். அதில் 2 பெண்கள் தங்களுடைய கணவர்களை மாற்றிக் கொண்டு அவர்களுடன் தாம்பத்தியத்தில் ஈடுபட்டு சந்தோசமாக இருப்பதை போல காட்டுகிறார்கள். அப்போது கொங்கணாவுக்கு ஒரு விபரீத ஆசை ஏற்படுகிறது. அதாவது நீ என் புருஷன் கூட ஒரு நாள் உன்னுடைய காம ஆசையை தீர்த்துக் கொள். நான் உன் புருஷன் கூட ஒரு நாள் இரவு முழுக்க இருந்துகிறேன் என்று சொல்ல, அதைக் கேட்டு ராதிகா ஆப்தே அதிர்ச்சியாகிறார். விளையாடுறியா? இதெல்லாம் வெளிநாடு இல்லை என்று அவர் திட்டுகிறார்.

    Advertisement

    மனதில் ஏற்பட்ட சலனம்

    அதற்கு கொங்கணா கடைசியாக உன் புருஷன் கூட எப்ப உறவு வச்சுகிட்டேன்னு ஞாபகம் இருக்கா? உண்மையை ஒத்துக்கோ காமமே இல்லாத திருமண வாழ்க்கையில் நடத்துறதுக்காக உனக்கு யாரும் கோல்டு மெடல் கொடுக்க போறதில்லை என்று அவருடைய மனதிற்குள் சலனத்தை ஏற்படுத்துகிறார். ராதிகா ஆப்தே 40 வயதில் உடல் தேவைகள் பற்றி பேசி என்னவாக போகிறது என்பது போல அமைதியாக நிற்கிறார்.

    பெண்ணின் புலம்பல்

    பிள்ளைகள் பிறந்துட்டா உடலுறவுங்குறது கட்டாயம் இல்லை என்று இந்த ஆண்கள் நம்மை திட்டுறாங்க, நமக்கு என்ன தேவை என்கிறது கூட அவங்களுக்கு புரியறதில்லை. கடனே என்று ஒரு வாழ்க்கை வாழ்ற மாதிரி சலிப்பா இருக்கு என்று கொங்கணா ஆதங்கத்தை கொட்டிக் கொண்டிருக்க, ராதிகாவும் சரி என்று ஒத்துக் கொள்கிறார். பிறகு இருவருடைய கணவர்களுக்கும் பிடித்த விஷயங்களை மாறி மாறி தெரிந்து கொள்கிறார்கள்.

    Advertisement

    கணவன்கள் மாற்றம்

    அடுத்ததாக ராதிகாவின் மகன் பிறந்த நாளுக்கு நான்கு பேரும் ஒரு ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது, திட்டத்திட்டபடி ராதிகா ஆப்தே தன் தோழியின் கணவரான அபிஷேக் பானர்ஜி உடன் நெருங்கி பழகுகிறார். கொங்கணா சென் விஜய் சர்மாவுடன் நெருக்கமாகி ஒரு கட்டத்தில் எல்லை மீறுகிறார். மறுபக்கம் ராதிகா ஆப்தே அபிஷேக் பானர்ஜியுடன் படுக்கையறை வரை சென்று உறவு கொண்டு விடுகிறார். இதற்கு பிறகு இவர்களுடைய திருமண வாழ்க்கை என்ன ஆனது என்பதுதான் கதை.

    குடும்பத்தோடு இந்த சீரிஸை பார்க்க முடியாது. கதவு மூடப்பட்ட பிறகு ஒவ்வொரு வீட்டிலும் நடப்பதும், ஒரே மாதிரி இல்லை என்பதைத்தான் லாஸ்ட் ஸ்டோரி கொஞ்சம் கிளாமராகவும், கொஞ்சம் குறும்பாகவும், சில இடங்களில் சீரியஸாகவும் சொல்லி இருக்கிறது.

    English Summary

    Lust Stories 3 review: The very title of *Lust Stories 3*, now streaming on Netflix, reveals the nature of the film. Following the massive success of the first two installments—which centered on female desire, intimate longings, and emotional experiences—the third season has now been released.