Blue Sattai Maran Review Anbe Diana: அன்பே டயானா படம் எப்படி இருக்கு? ப்ளூ சட்டை மாறன் இப்படி சொல்லிட்டாரே!

  • சென்னை: போன வருஷம் ஓடிடியில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற ஜமா திரைப்படத்தின் மூலம் இயக்குநராகவும் நடிகராகவும் பிரபலமானவர் பாரி இளவழகன். அந்த படத்தில் வெற்றிக்கு பிறகு அவர் இயக்கி கதாநாயகனாக நடித்திருக்கும் அன்பே டயானா படம் நேற்று திரையரங்குகளில் வெளியான நிலையில் இந்த படத்தின் கதை என்ன? படம் எப்படி இருக்கிறது? என்று பிரபல திரைப்பட விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் தன்னுடைய ரிவ்யூ கொடுத்திருக்கிறார்.

    Advertisement

    ப்ளூ சட்டை மாறன் ரிவ்யூ

    ப்ளூ சட்டை மாறன் தன்னுடைய விமர்சனத்தில், இந்தப் படத்தின் ஒன்லைன் நல்லாத்தான் இருக்கு. ஒரு தெலுங்கு குடும்பத்தை சேர்ந்த இளைஞர் ஒரு ஆங்கிலோ இந்திய பெண்ணை காதலிக்கிறான். ஆனால் அந்த பெண்ணின் குடும்பம், அவர்களுடைய வாழ்க்கை முறை, கலாச்சாரம் இதையெல்லாம் பார்த்து ஹீரோவே பயந்து போய் இந்த கல்யாணத்தில் இருந்து விலக நினைக்கிறான். அதற்குப் பிறகு என்ன நடக்கிறது? என்பதுதான் கதை. இந்த ஐடியா வித்தியாசமாக இருக்கு ஆனால் அதை திரைக்கதையாக சரியாக எழுதல.

    Advertisement

    அன்பே டயானா படத்தின் கதை

    பொதுவாக ஒரு காதல் படம் பாக்குறப்போ ஹீரோவும் ஹீரோயினியும் எப்படி இருந்தாலும் சேர வேண்டும் என்று தான் ரசிகர்களுக்கு தோணனும். ஆனால் இந்த படத்துல அந்த உணர்வே வரவில்லை. ஏனென்றால் ஹீரோவுக்கே ஹீரோயினியை கல்யாணம் பண்ணிக்கணும் என்ற ஆசையே இல்ல. அப்படி இருக்கும்போது படம் பார்க்கும் நமக்கு மட்டும் அந்த காதல் சேரனும் என்று எப்படி தோன்றும்.

    ப்ளூ சட்டை மாறனின் பாராட்டு

    கலாச்சார வேறுபாட்டை மட்டும் காட்டி இருந்தால் இந்த படத்துக்கு சுத்தமா உயிரே இருக்காது. ஆனால் அந்த ஆங்கிலோ இந்திய குடும்பத்தை உருவாக்கிய விதம், அவர்களுடைய வாழ்க்கை முறை பேசும் விதம் பழக்க வழக்கங்கள் இதையெல்லாம் படத்திற்கு கொஞ்சம் புதியதாக இருக்கிறது. அதற்கு தகுந்த மாதிரி தான் ஹீரோயினியும் செலக்ட் பண்ணி இருக்காங்க. குறிப்பாக ஹீரோயினோட அப்பா கேரக்டரில் நடித்தவர் ரொம்ப இயல்பா நடித்திருக்கிறார் என்று பாராட்டி இருக்கிறார்.

    Advertisement

    அதேபோல இந்த படத்தின் இரண்டாம் பாதியும் இழுவை ஆகிவிட்டது. ஹீரோ ஹீரோயின் கல்யாணம் செய்யணும் என்று தோண வைக்கிற மாதிரி சீன்களே இல்ல. பெங்களூர் தமிழ் பையனாக பரிதாபங்கள் கோபி வந்திருக்கிறார். ஓரளவுக்கு நல்லா பண்ணி இருக்கிறார். அவர் வரும் காட்சிகள் கொஞ்சம் ரசிக்கிற மாதிரி இருக்கிறது என்று அவரையும் பாராட்டி இருக்கிறார்.

    இயக்குனர் பற்றிய கருத்து

    கடைசியாக இயக்குனர் பாரி இளவழகனை பற்றி பேசும்போது, நிறைய இயக்குநர்கள் முதல் படத்திற்கு உயிரைக் கொடுத்து ஒரு நல்ல படத்தை எடுப்பாங்க. அதற்குப் பிறகு அந்த படம் நல்ல விமர்சனம் ரீதியாக பாராட்டுவாங்கும் ஆனா வசூல் வராது. அதற்கு அப்புறம் நல்ல படம் எடுத்தா யாரும் பார்க்க வரமாட்டீங்க... கமர்சியல் குப்பை எடுத்தால் மட்டும் பார்க்கிங்களே சரி, நானும் ஒரு கமர்சியல் படத்தை எடுத்துக்காட்டுறேன்னு நினைப்பாங்க.

    Advertisement

    அதே மாதிரி பாரி இளவழகன் ஜமா மாதிரி உண்மைக்கு நெருக்கமான ஒரு படத்தை எடுத்திருந்தார். அந்த படம் பெரிய அளவில் பெயர் வாங்கினாலும் வியாபாரம் ஆகல. அந்த ஏமாற்றத்தால இப்படி ஒரு கமர்சியல் குப்பை போல ஒரு படத்தை எடுத்து வைத்திருக்கிறார். அவருடைய கோபம் நியாயம் தான். ஆனா அதற்கு நாம பழியாக முடியாது என்று ப்ளூ சட்டை மாறன் சொல்லி இருக்கிறார்.

    ரசிகர்கள் கருத்து

    ஆனால் இந்த படத்தை பார்த்த சில ரசிகர்கள் வேற சில கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். இது வழக்கமான காதல் கதை இல்லை. இரண்டு கலாச்சாரத்துக்கு இடையிலான மோதலை பேச முயற்சி செய்திருக்கிறது. காமெடி நிறைந்த கமர்சியல் படமாக இருக்கிறது என்று கூறி இருக்கின்றனர். அதுபோல ஜமா படத்தை கொடுத்த இயக்குனரிடம் இருந்து எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது அதனால் தான் இந்த படம் சிலருக்கு ஏமாற்றமாக தெரிகிறது என்றும் சோசியல் மீடியாவில் கருத்துக்கள் தெரிவிக்கின்றனர்.

    English Summary

    Anbe Diana: Pari Elavazhagan is famous as a director and actor with the movie Jama. After the success of that film, Anbe Diana, in which he directed and played the lead role, was released in theaters yesterday, so what is the story of this film? How is the picture? The famous film critic Blue Sattai Maran has given his review.