Jailer 2 review: நெல்சா… வெறமாறி! ஜெயிலர் 2 முதல் பாதி எப்படி இருக்கு? ட்விட்டர் விமர்சனம்

  • சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கியுள்ள ஜெயிலர் 2 படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், படத்தின் முதல் பாதியைப் பார்த்த ரசிகர்களும் சினிமா விமர்சகர்களும் தங்களது கருத்துகளைச் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். ஏற்கெனவே படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்த நிலையில், இப்போது வெளியாகும் முதல் பாதி விமர்சனங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

    Advertisement


    ஜெய்லர் 2 ட்விட்டர் விமர்சனம்

    குறிப்பாக, ரஜினியின் மாஸ் காட்சிகள், நெல்சனின் காமெடி, அனிருத்தின் பின்னணி இசை எனப் படத்தின் முதல் பாதி குறித்து பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில், கதை பழக்கப்பட்ட பாணியில் நகர்வதாகவும், ஆரம்பத்தில் கொஞ்சம் மெதுவாக இருப்பதாகவும் சில விமர்சனங்கள் வந்துள்ளன.

    Advertisement

    முதல் பாதி செம மாஸ்

    சினிமா விமர்சனங்களை பகிர்ந்து வரும் வெங்கி ரிவியூஸ் தனது எக்ஸ் பக்கத்தில், ஜெயிலர் 2 படத்தின் முதல் பாதி நல்ல கமர்சியல் ரீதியான பொழுதுபோக்காக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். படம் வழக்கமான பாணியில் தொடங்கி ஆரம்பத்தில் கொஞ்சம் மெதுவாக நகர்ந்தாலும், கதைக்கான பின்னணி அமைந்த பிறகு நெல்சனின் காமெடி நன்றாக வேலை செய்வதாகவும், ரஜினிக்கான மாஸ் காட்சிகளுக்கு அனிருத்தின் பின்னணி இசை கூடுதல் பலம் சேர்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

    முதல் பாகம் முடிந்த இடத்திலிருந்து கதை தொடர்வதாகவும், இதுவரை படம் பொழுதுபோக்காக இருப்பதாகவும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டிருக்கிறார். அதாவது, முதல் பாதி முழுவதும் வேகமாகப் பறக்கிறது என்று சொல்லவில்லை; ஆரம்பத்தில் இருக்கும் மெதுவான நகர்ந்து.. பிறகு படம் ரசிகர்களை ஈர்ப்பதாக அவர் கூறியிருக்கிறார்

    Advertisement

    டீக்கடை காட்சி, இடைவேளை பிளாக்

    மற்றொரு விமர்சகரான கிறிஸ்டோபர் கனகசபையும் ஜெயிலர் 2 படத்தின் முதல் பாதி குறித்து தனது கருத்தைப் பகிர்ந்துள்ளார். ரஜினியின் அறிமுக காட்சி, நெல்சனின் நகைச்சுவை, மாஸ் காட்சிகள், டீக்கடை காட்சி மற்றும் இடைவேளைக்கு முன்பாக வரும் முக்கியமான பகுதி ஆகியவற்றைப் பாராட்டியுள்ளார். படம் மிகவும் சுவாரசியமாக இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், நெல்சன் தனது வழக்கமான பாணியில் கலக்கியிருப்பதாகவும் பதிவிட்டுள்ளார். அவரது பதிவை பார்த்த ரசிகர்கள், முதல் பாதியிலேயே இவ்வளவு மாஸ் காட்சிகள் இருக்கிறதா என்று ஆர்வத்துடன் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

    இன்னொரு திரைப்படப் பக்கமும் முதல் பாதியைப் பாராட்டி, நீண்ட நாட்களுக்குப் பிறகு கிடைத்த சிறந்த மாஸ் பொழுதுபோக்கு படங்களில் ஒன்றாக இருப்பதாகக் கருத்து தெரிவித்துள்ளது. இதனால், முதல் பாதி குறித்த ஆரம்பகட்ட வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.

    Advertisement

    ரஜினி - நெல்சன் - அனிருத் கூட்டணி

    முதல் ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு ரஜினியின் ஸ்கிரீன் ப்ளே, நெல்சனின் நகைச்சுவை பாணி, அனிருத்தின் இசை ஆகியவை முக்கிய காரணிகளாக இருந்தது. அதே கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதால், இரண்டாம் பாகத்திலும் அந்த அனுபவம் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இப்போது வெளியாகியுள்ள முதல் பாதி விமர்சனங்களில், இந்த மூன்று அம்சங்களும் மீண்டும் பாராட்டப்படுகின்றன. குறிப்பாக, ரஜினிக்கான மாஸ் காட்சிகளுக்கு அனிருத்தின் பின்னணி இசை நன்றாகப் பொருந்துவதாக விமர்சகர்கள் கூறியுள்ளனர். நெல்சனின் நகைச்சுவையும் படத்தின் பொழுதுபோக்கு அம்சத்துக்கு உதவுவதாகத் தெரிகிறது.

    Advertisement

    ரூ.1000 கோடி வசூல் கனவு நனவாகுமா

    ஜெயிலர் 2 படத்துக்கு வெளியீட்டுக்கு முன்பே மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. முன்பதிவு குறித்த தகவல்களும் ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரித்திருந்தன. இப்போது முதல் பாதி குறித்து வெளியாகும் பாராட்டுகள் படத்துக்கு நல்ல தொடக்கமாக அமைந்தாலும், இதை வைத்து மட்டும் இறுதி வசூலைக் கணித்துவிட முடியாது.

    இடைவேளைக்குப் பிறகு கதை எப்படி நகர்கிறது, கிளைமாக்ஸ் ரசிகர்களை எந்த அளவுக்கு ஈர்க்கிறது, பொதுமக்களிடம் படம் எப்படிப் பேசப்படுகிறது என்பதெல்லாம் வசூலில் முக்கிய விஷயம். முதல் பாதி குறித்து வெளியாகும் இந்த விமர்சனங்கள் ஆரம்பகட்டக் கருத்துகள்தான். இப்போதைக்கு ட்விட்டரில் வெளியாகியுள்ள விமர்சனங்களைப் பார்த்தால், ரஜினியின் மாஸ் காட்சிகளும் நெல்சனின் நகைச்சுவையும் அனிருத்தின் இசையும் ரசிகர்களுக்கு முக்கியமான பலமாகத் தெரிகின்றன.

    English Summary

    Jailer 2 Twitter review: As *Jailer 2*—directed by Nelson and starring Rajinikanth—hits theaters today, fans and film critics who have watched the first half are sharing their reactions on social media. Given the already high anticipation surrounding the film, the reviews of the first half are now capturing the attention of fans.