ஜனநாயகன் முதல் நாள் வசூல் எவ்வளவு? ரிலீசுக்கு முன்பே ₹ 86 கோடி ஓப்பனிங்கா? ரசிகர்கள் கொண்டாட்டம்

  • சென்னை: இன்று உலகம் முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாக உள்ள ஜனநாயகன் திரைப்படம் ரிலீசுக்கு முன்பே வசூல் கணிப்பில் சோசியல் மீடியாவை ஆக்கிரமித்து இருக்கிறது. விஜய்யின் கடைசி படம் என்பதால் பல மாதங்களாகவே சர்ச்சைகளையும், தடைகளையும் கடந்து இன்று திரைக்கு வந்திருப்பதாலும் இந்த படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு இருக்கும் என்பதுதான் ரசிகர்கள் முதல் திரையுலகம் வரை அனைவருடைய பேச்சாக மாறியிருக்கிறது.

    Advertisement

    ஜனநாயகன் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்

    இந்த நிலையில் பாக்ஸ் ஆபிஸ் தகவல்களை பகிரும் ஒரு சோசியல் மீடியா வலைத்தள கணக்கு வெளியிட்டுள்ள முதல் நாள் வலைத்தள கணக்கு இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அந்த கணக்கில் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 30.5 கோடி, கர்நாடகாவில் 10.5 கோடி, கேரளாவில் 3.9 கோடி, தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் 3.5 கோடி, வட இந்தியாவில் 2.5 கோடி வசூல் கிடைக்கும் என்றும் இந்தியா முழுவதும் 50.9 கோடி, வெளிநாடுகளில் 32.1 கோடி வசூலுடன் உலக அளவில் சுமார் 86 கோடி ஓபனிங் கிடைக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

    Advertisement

    இந்த வசூல் நிலவரம் அதிகாரப்பூர்வமானதானது இல்லை. சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ள கணிப்புகள் மட்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒரு வேளை இதைவிட இன்னும் அதிகமாகவும் கிடைக்கும் என்று விஜய்யின் ரசிகர்கள் சொல்லி வருகின்றனர். காரணம் இது விஜயின் மற்ற படங்களை போன்றது அல்ல. ஏனென்றால் அவர் அரசியலுக்கு முழுமையாக வந்துவிட்டதால் அவருடைய கடைசி தியேட்டர் ரிலீஸ் படம் என்பதால் ரசிகர்கள் ஃபீலிங்கோடு இந்த படத்திற்கு சப்போர்ட் கொடுக்கிறார்கள்.

    முதல் நாள் வசூல் நிலவரம்

    இந்த படம் ஏற்கனவே சோசியல் மீடியாவில் லீக் ஆகி ஒரு கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பார்த்து இருந்தாலும் நாங்கள் திரையரங்குகளில் இந்த படத்திற்கு எங்களுடைய ஆதரவை தருவோம் என்று சோசியல் மீடியாவில் கதற வைத்து கொண்டிருக்கிறார்கள். டெல்லியில் மாணவர்கள் போராட்டம் ஒரு பக்கம் வெடித்து கொண்டு இருந்தாலும் அதை அதைப் பற்றி கண்டுகொள்ளாமல் கூட பல விஜய் ரசிகர்கள் ஜனநாயகன் படத்திற்காகவே போராடி வெற்றி பெற்று இருப்பதாக கமாண்டுகள் போட்டு வருவதையும் பார்க்க முடிவுக்கு முடிகிறது.

    Advertisement

    ஜனநாயகன் முதல் ஷோ

    படத்தின் ஓப்பனிங் தொடங்கியதில் இருந்து பல தியேட்டர்களில் டிக்கெட்டுகள் வேகமாக வெற்றி தீர்ந்தன. குறிப்பாக அதிகாலை ஸ்பெஷல் காட்சிகளுக்கு ரசிகர்கள் பல நாட்களுக்கு முன்பே டிக்கெட்டுகளை வாங்கி வைத்திருந்தனர். ஒரு கட்டத்தில் சூர்யாவின் கருப்பு, ரஜினியின் கூலி உட்பட சமீபத்திய படங்களின் முன்பதிவு சாதனைகளை ஒப்பிட்டும் விவாதங்கள் செய்திருந்தனர். ஆனால் ஜனநாயகம் கடைசி நேரத்தில் மற்ற எல்லா படங்களையும் தாண்டி வசூலில் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது.

    அமெரிக்காவிலும் களைக்கட்டும் “ஜனநாயகன்” ஃபீவர்.. 719 ஷோ, 356 தியேட்டர்... ஆனால் ரசிகர்கள் கேள்வி இதுதான்!
    விஜய்க்கு சப்போர்ட் செய்ய ரசிகர்களை சொல்லவே வேண்டாம். இப்போ மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதலமைச்சராகவே விஜய் மாறி இருக்கிறார் இப்போது ரசிகர்கள் மற்றும் தொண்டர்களின் அலப்பறையை சொல்லவா வேண்டும்? இன்று தியேட்டரில் என்னவெல்லாம் நடக்கப் போகிறதோ பொறுத்து இருந்து பார்க்கலாம்.

    English Summary

    Jana nayagan: The much-anticipated movie Jana nayagan is taking over the social media even before its release. As it is Vijay's last film and it has come out today after many months of controversies and hurdles, the first day collection of this film has become the talk of everyone from the fans to the film industry.