சென்னை: விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் சிக்மா படம் வரும் அக்டோபர் 2ம் தேதி திரையில் வெளியாக இருக்கும் நிலையில் அவர் பேசிய முதல் பேட்டி பெரிய அளவில் வைரல் ஆனது. அதை தொடர்ந்து இப்போது தனியார் youtube சேனல் ஒன்றுக்கு புதியதாக பேசி இருக்கிறார். அதில் தன்னுடைய காதலி எப்படி இருக்க வேண்டும்? எப்படி இருக்கக் கூடாது.. என்று ரேஷன்ஷிப் பற்றி ஓபனாக பேசியிருக்கிறார். இதை ரசிகர்கள் விஜய் உடன் தொடர்பு படுத்தி வருகிறார்கள்.
விஜய் மகன் பேட்டி
ஏற்கனவே முதல் பேட்டியில் ஜேசன் என்ன பேசுவார் என்ற எதிர்பார்ப்பு ஆரம்பத்தில் ரசிகர்களுக்கு அதிகமாக இருந்தது. விஜயின் குடும்ப பிரச்சனை நாளுக்கு நாள் சர்ச்சை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில் தன்னுடைய அப்பாவை பற்றி சஞ்சய் பேசுவாரா? இல்லையா? ஏற்கனவே சஞ்சய் தன்னுடைய இன்சியலை மாற்றிவிட்டாரே அதனால் அப்பாவைப் பற்றி பேசவே மாட்டார்.. அம்மா தான் எல்லாம் என்று சொல்லப் போகிறார் என்று எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் சஞ்சய் முதல் பேட்டியில் தன்னுடைய அப்பாவை விட்டுக் கொடுக்காமல் பேசிவிட்டார்.
அதற்குப் பிறகு குடும்ப பிரச்சனை முடிந்து விட்டது இனி விஜய் குடும்பம் ஒன்றாக சேர்ந்து விடுவார்கள் என்று நினைத்தார்கள். ஆனால் அப்படி எந்த விஷயமும் நடந்தது போல இல்லை. இந்த நிலையில் இப்போது மீண்டும் சஞ்சய் தனியார் சேனல் ஒன்றில் பேசி இருக்கிறார். அதில் அண்டைய வருங்கால காதலி எப்படி இருக்க வேண்டும் என்று சில விஷயங்களை சொல்லி இருக்கிறார்.
அதில், எனக்கு இதுவரைக்கும் காதலியே கிடையாது. ஆனால் எனக்கு எப்படிப்பட்ட பொண்ணு பிடிக்கும் என்றால் அந்த பொண்ணு அட்வெஞ்சர்ரான கேரக்டரில் இருக்க வேண்டும். புதுப்புது இடங்களுக்கு போக வேண்டும். எக்ஸ்ப்ளோர் பண்ணுவது, வாழ்க்கையில் ஏதாவது ட்ரை பண்ணி கொண்டே இருப்பவரை தான் எனக்கு பிடிக்கும். அவங்களோட சொந்த கால் நிற்க வேண்டும். எந்த விஷயத்திலும் யாரையும் சார்ந்து இருக்கவே கூடாது. பைனான்சியலி இண்டிபெண்டன்ட் பெண்ணாக இருக்க வேண்டியது ரொம்பவும் முக்கியம். நான் அவங்களுக்கு ஒரு உதவியாக இருக்கலாமே தவிர அவங்களுக்கு என்று சொந்த வருமானம் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் எனக்கு அந்த பெண்ணை பிடிக்கும். அவங்களுக்கு கிரீன் பிளாக் கொடுக்க விடலாம் என்று சொல்லி இருக்கிறார். ஏற்கனவே விஜய் கூட அவருடைய மகன் சினிமாவுக்கு வருகிறேன் என்று சொன்ன சமயத்தில் நீ உன்னுடைய சொந்த காலில் தான் நிற்க வேண்டும். உனக்கு ஏதாவது உதவி வேண்டும் என்றால் கேளு. நீ கேட்டால் மட்டும் தான் செய்வேன் நானாக எதையும் செய்ய மாட்டேன் என்று சொன்னார் என சஞ்சய் சொல்லி இருந்தார். இப்போது அதைத்தான் தன்னுடைய காதலியிடம் நான் சொல்லுவேன் என்று ஜேசன் சொல்லி இருக்கிறார். அதுபோல தனக்கு பிடிக்காத விஷயங்கள் பற்றி ஜேசன் பேசும்போது, நம்மை காதலிப்பவருக்காக நம்மையே முழுமையாக மாற்றிக் கொள்ள முடியாது. ஒருத்தரோட லிமிடேஷன் மற்றும் பவுண்டரியை இன்னொருத்தர் புரிஞ்சுக்கணும். அந்த புரிதல் இல்லன்னா அது எனக்கு பெரிய ரெட் பிளாக் தான். நம் மீது அன்பு இருக்க வேண்டுமே தவிர நம்மை கண்காணித்து கொண்டே இருக்க கூடாது என்று சொல்லி இருக்கிறார். அதோடு நான் காதலிக்கும் பெண் தமிழ் சினிமா பாக்கணும், தமிழ் பாட்டு கேக்கணும், தமிழ் பாட்டு எல்லாம் கேட்க மாட்டேன் என்று சீன் போட்டாங்கன்னா ஓரம் போ என்ற சொல்லிடுவேன். எனக்கு தமிழ் பாட்டு ரொம்ப பிடிக்கும். நம்முடைய கம்பெனியனும் கொஞ்சமாவது தமிழ் பாட்டு கேக்கணும். அப்பதான் நம்ம ஊரோட Rooted-ஆக இருக்க முடியும். நம்ம பாட்டு பற்றி நிறைய பேசணும், பாட்டு ரெஃபரன்ஸ் கொடுத்து கவுண்டர் போடணும். நான் பாட்டுக்கு சிரிச்சிட்டு இருக்கும்போது அவங்க சோகமாவோ அல்லது எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தால் அது எனக்கு வைப் ஆகாது, டிஸ்கனெக்ட் ஆயிடும். அதனால அவங்களும் நமக்கு தகுந்த மாதிரியான ஒரு கேரக்டர் இருந்தால் எனக்கு ஓகே என்று ஜேசன் சொல்லி இருக்கிறார். முதல் பேட்டியில் தன்னுடைய படத்தைப் பற்றியும் தன்னுடைய குடும்பத்தை பற்றியும் ஜேசன் அதிகமாக பேசியிருந்தார். தற்போதைய புதிய பேட்டியில் குடும்பத்தை பற்றி கொஞ்சம் பேசி இருந்தாலும் தன்னுடைய எதிர்கால காதலி, கனவுகள், சிக்மா படத்திற்கு பிறகு ஹீரோவாக நடிப்பது போன்ற பல விஷயங்களைப் பற்றியும் பேசி இருக்கிறார்.பிடித்த பொண்ணு
கிரீன் சிக்னல்
காதலிக்கான குவாலிபிகேஷன்
பிடிக்காத கேரக்டர்
ஜேசன் சஞ்சய் புதிய பேட்டி