படுக்கையிலும் கேமரா வைத்த கணவர்.. அந்தரங்க போட்டோவை வைத்து மிரட்டல்.. விஜய் டிவி சீரியல் நடிகை கண்ணீர்

  • சென்னை: சினிமாவிலும் சீரியல்களிலும் சிரித்த முகத்துடன் இருக்கும் பல நடிகைகள் கேமராவுக்கு பின்னால் எவ்வளவு வேதனைகளை சுமக்கிறார் என்பதை அவர்களே பேசும்போது தான் உலகத்திற்கு தெரிகிறது. அப்படிப்பட்ட ஒரு மனதை பதற வைக்கும் அனுபவத்தை பகிர்ந்து சின்னத்திரை நடிகை மோனிகா அனைவரையும் வருத்தப்பட வைத்திருக்கிறார்.

    Advertisement

    விஜய் டிவியில் ஒளிபரப்பான அரண்மனைக்கிளி, நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 2, கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பான பச்சைக்கிளி உட்பட பல சீரியல்களில் நடித்து பிரபலம் அடைந்த நடிகை மோனிஷா தன்னுடைய நடிப்பால் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றிருந்தார். அதுபோல சோசியல் மீடியாவிலும் பயங்கர ஆக்டிவாக இருக்கும் அவர் தற்போது விஜய் டிவி மற்றும் டிஸனி ஹாட்ஸ்டாரால் ஒளிபரப்பாகும் செகண்ட் லவ் என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் தன்னுடைய வாழ்க்கையின் மிகவும் வேதனையான பக்கங்களை பகிர்ந்து இருக்கிறார்.

    Advertisement

    சீரியல் நடிகை மோனிஷா சிஎஸ் உருக்கம்

    இந்த நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக இருக்கும் அவர் தன்னுடைய கடந்த கால வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை பற்றி பேசியது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதில் 8 வருஷங்களாக நீடித்த தன்னுடைய திருமண வாழ்க்கை நம்பிக்கை உடைந்ததால் முடிவுக்கு வந்தது. நான் ஆரம்பத்தில் முழுமையாக நம்பிய வாழ்க்கை துணையே ஒரு நாள் தன்னை விட்டு பிரிந்து செல்வார் என்று சந்தேகப்பட்டு தன்னை அடித்து சித்திரவதை செய்ததாக கூறியிருக்கிறார்.

    பெட் ரூமில் கேமரா

    அதோடு தன்னை மிரட்டுவதற்காக தன் அனுமதி இன்றி தன்னுடைய பெட்ரூமில் கூட புகைப்படங்கள் எடுத்து இருக்கிறார். நான் என்னுடைய கணவர் தானே என்று நம்பி அவருடன் பெட்டில் பக்கத்தில் படுத்திருப்பதை கூட வீடியோவாக எடுத்து வைத்திருக்கிறார். நான் டிரஸ் மாற்றுவதையும் புகைப்படங்களாகவும், வீடியோக்களாகவும் எடுத்து வைத்திருந்திருக்கிறார். ஒருநாள் அவருடைய நண்பர்கள் உங்களுடைய பர்சனல் போட்டோ எல்லாம் பார்த்திருக்கிறோம் என்று சொன்னபோதுதான் என்னோட உலகமே நொறுங்கி போச்சு என்று மோனிஷா உருக்கமாக சொல்லி இருக்கிறார்.

    Advertisement

    Top 10 Serial: இந்த வார டாப் 10 சீரியல்கள்.. எதிர்நீச்சலுக்கு விழுந்த மரண அடி.. மாஸ் காட்டும் அய்யனார் துணை
    அது மட்டுமல்ல நடிகையாக நல்ல வாய்ப்புகள் வந்த போதும் கூட தொடர்ந்து நடிக்க அனுமதி தரவில்லை. தான் சம்பாதித்த பணம் எல்லாமே அவர் தவறாக பயன்படுத்தியதால் பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்பட்டதாக சொல்லி இருக்கிறார்.

    இதில் இன்னொரு வேதனையான விஷயம் என்னவென்றால் எனக்கு இவருடன் வாழ்ந்தால் நம்முடைய வாழ்க்கை அவ்வளவுதான் என்று நினைத்தபோது இனி பிரிந்து விடலாம் என்று நினைத்த சமயத்தில் அதற்கு அவர் கேட்ட விலை என்னை அதிர்ச்சி அடைய வைத்திருந்தது. உனக்கு விவாகரத்து தருகிறேன் ஆனால் உன்னுடைய நகைகள் எல்லாம் தர முடியாது என்று சொன்னார். நகைகள் எப்படியும் 100 சவரனுக்கு மேலே இருக்கும். அதை எப்படி கொடுக்க முடியும். அதனால் நானே இழப்பீடு கொடுத்து தான் விவாகரத்து வாங்கினேன்.

    Advertisement

    விவாகரத்து இழப்பீடு

    அதுவும் ஜட்ஜ் முன்னாடி நான் கையெழுத்து போட போயிருந்தேன். அங்கு வேறு யாரும் இல்லை அந்த பேப்பரில் கையெழுத்து போட்ட போது எனக்கு அவ்வளவு ஒரு சந்தோஷமாக இருந்தது என்னை அறியாமல் நான் துள்ளி குதித்து விட்டேன். அப்போது அங்கிருந்து ஜட்ஜ் கூட என்ன நீங்க இவ்ளோ சந்தோஷப்படுறீங்கன்னு கேட்டாரு. ஏனென்றால் நான் அவ்வளவு வேதனைகளை அனுபவித்து இருக்கிறேன்.

    முந்தைய வாழ்க்கையில் பட்ட கஷ்டத்தால் இப்போ கூட நான் யார் பக்கத்திலாவது படுத்தாலும் எனக்கு யாரோ ரகசியமா படம் எடுத்துட்டு இருக்காங்களோன்னு பயமாயிருக்கும் என்று அவர் சொல்ல, சக போட்டியாளர்களும் கண்கலங்கி அவருக்கு ஆறுதல் சொல்லி இருக்கின்றனர். இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகிய வருகிறது. ஒரு சிலர் மோனிஷாவுக்கு சப்போர்ட் செய்து இனி உங்களுடைய புதிய வாழ்க்கையில் நல்லது நடக்க வாழ்த்துக்கள் என்று சொல்லி வருகின்றனர்.

    English Summary

    Monisha CS: Many actresses who have a smiling face in movies and serials only tell the world how much pain they bear behind the camera. Small screen actress Monica has made everyone sad by sharing such a heart-wrenching experience.