காவிரி விவாகரத்தில் நான் கன்னட விவசாயிகளுக்கு தான் ஆதரவு.. தனுஷ் பட நடிகை பதிவு.. கடுப்பான ரசிகர்கள்

  • சென்னை: காவிரி நீர் பிரச்சனை மீண்டும் தமிழகம் மற்றும் கர்நாடகா இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் நடிகையையும், முன்னாள் எம்பியுமான ரம்யா (திவ்யா ஸ்பந்தனா) வெளியிட்டுள்ள பதிவு சோசியல் மீடியாவில் கவனம் பெற்றுள்ளது. குறிப்பாக தமிழில் பல பதற்ற படங்களில் நடித்திருந்த நடிகை ரம்யா இந்த விவாகரத்தில் தன் சொந்த மாநிலமான கர்நாடகாவின் நிலைப்பாட்டுக்கு ஆதரவு தெரிவித்திருப்பது தமிழ் ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    Advertisement

    நடிகர் ரம்யா பதிவு

    கர்நாடகாவில் காவிரி நீர் தொடர்பான பிரச்சனை நடந்து கொண்டிருந்த சமயத்தில் ரம்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நான் மண்டியா மாவட்டத்தை சேர்ந்தவள். காவிரி என்றாலே அது விவசாயிகளின் வாழ்வாதாரத்தோடு இணைந்த பிரச்சனை. விவசாயிகளுக்கு துணையாக நிற்பது என் கடமை. அதனால் இந்த போராட்டத்திற்கு என் முழு ஆதரவும் இருக்கும்.

    Advertisement

    கர்நாடகாவுக்கு சப்போர்ட்

    விவசாயிகளின் நலன் தொடர்பாக எந்த விஷயமாக இருந்தாலும் தயங்காமல் அவர்களுடன் நிற்பேன் என்று கருத்தை தெரிவித்திருக்கிறார். இந்த பதிவு வெளியாகியுள்ள சமயத்தில் தமிழ்நாட்டில் காவிரி நீர் விவகாரத்திற்காக அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.

    காவிரி நீர் பிரச்சனை

    தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை அணுகி உள்ளது. அரசியலில் இந்த விவகாரம் தீவிரமாக பேசப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில்தான் தமிழிலும் நீண்ட காலம் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்ற நடிகையுமான ரம்யா தனது சொந்த மாநில விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து வெளிப்படையாக போஸ்ட் வெளியிட்டிருப்பது புதிய விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    Advertisement

    ரசிகர்கள் கருத்து

    ஒரு சிலர் அவர் மண்டியாவை சேர்ந்தவர். தனது மாநில விவசாயிகளுக்கு பேசுவதில் தவறு இல்லை என்று ஆதரவு தெரிவிக்கின்றனர். இன்னும் ஒரு சிலர் தமிழ் சினிமா மூலம் இவ்வளவு அன்பை பெற்ற ஒருவர் தமிழ்நாட்டு விவசாயிகளின் உணர்வுகளை கருத்தில் கொண்டு இருக்கலாம் என்று கருத்து பதிவிட்டு வருகின்றனர். ரம்யா சினிமாவில் மட்டுமல்ல அரசியலிலும் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர்.

    காங்கிரஸ் கட்சியின் சார்பில் மண்டியா மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு எம்பி யாக பணியாற்றியவர். பின்னர் அரசியலில் இருந்து ஓரளவு விலகி திரைப்பட தயாரிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இருப்பினும் சமூக அரசியல் மற்றும் விவசாயம் தொடர்பான பிரச்சனைகளில் அவ்வபோது தனது கருத்தையும் சோசியல் மீடியாவில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. அதுபோல இவர் தமிழில் குத்து, பொல்லாதவன், வாரணம் ஆயிரம், சிங்கம்புலி உட்பட பல படங்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர்.

    Advertisement

    காவிரி நீர் விவகாரம் அரசியல் மட்டுமல்லாமல் திரை உலக பிரபலங்களின் கருத்துகளாலும் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் ரம்யாவின் இந்த பதிவு இன்னும் சில நாட்களுக்கு சோசியல் மீடியாவில் விவாதத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    English Summary

    Actress Ramya: As the Cauvery water issue has once again created a stir between Tamil Nadu and Karnataka, a post by actress and former MP Ramya (Divya Spandhana) has gained attention on social media. Especially, actress Ramya, who has acted in many thriller films in Tamil, has supported the stand of her own state Karnataka in this divorce, which has caused a stir among Tamil fans.