சென்னை: இசைக்குயில் எஸ். ஜானகியின் சினிமா சாதனைகளும், தனித்துவமானப் பாடும் திறமைகளும் எப்போதுமே வியக்கத்தக்கவை... ஒரே பாடலில் பல குரல்களில் பாடி அசத்துவது முதல் பன்மொழிகளில் உச்சரிப்பு மாறாமல் பாடுவது வரை அவர் கையாண்ட ரகசியங்கள் ஆச்சரியமானவை.. அந்தவகையில் அவரது சொத்து மதிப்புகள் குறித்த உறுதிப்படுத்தப்படாத தகவல்களும் ரசிகர்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகின்றன.
எஸ். ஜானகி அம்மா தமிழில் பாடும்போது பாடலைத் தமிழிலும், இந்தியில் பாடும்போது இந்தியிலும், ஆனால் தெலுங்கு மற்றும் பிற மொழிகளில் பாடும்போது அத்தனையையும் தனக்கு மிகவும் பரிச்சயமான தெலுங்கு மொழியிலேயே எழுதி வைத்துக்கொண்டு பாடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்..
எஸ்.ஜானகி உச்சரிப்பு சிறப்பு இந்த தனித்துவமான மொழிபெயர்ப்பு முறையினாலேயே அவரால் பிற மொழிகளின் உச்சரிப்புகளை துல்லியமாக உள்வாங்கிப் பாட முடிந்தது என்கிறார்கள் திரை வல்லுநர்கள். தன்னுடைய முதல் பாடல் முதல் கடைசி பாடல்வரை, எஸ். ஜானகி பாடிய பல தனிப்பாடல்கள் மகிழ்ச்சி, சோகம், ஏக்கம், பிரிவு, கொண்டாட்டம், ஆசை, தாய்மை இப்படி பலவிதமான உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருந்ததே அவரை முன்னணி பின்னணி பாடகியாக நிலைநிறுத்தியது.. அசத்திய மகளிர் மட்டும் இதில் ஜானகியின் அசாத்திய திறமைக்கு உதாரணமாக "மகளிர் மட்டும்" படத்தை சொல்லலாம்.. 1994ல் வெளியான இந்த படத்தில் இளையராஜா இசையில் கவிஞர் வாலி எழுதிய ஒரே பாடலில் ரேவதி, ஊர்வசி, ரோகினி ஆகிய 3 ஹீரோயின்களுக்கும் 3 வெவ்வேறு குரல் வடிவங்களில் பாடி அவர் அசத்தியிருந்தார் எஸ்.ஜானகி.. இதில் ரேவதிக்காக மாடர்ன் ஸ்டைலிலும், ஊர்வசிக்காக அய்யர் வட்டார வழக்கிலும், ரோகிணிக்காகச் சென்னைத் தமிழ் வட்டார வழக்கிலும் என தன்னுடைய குரலை மாற்றி பாடி மொத்த பேரையும் வியப்பில் ஆழ்த்தினார். சொத்து மதிப்பு என்ன தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மொழிகளில் 48,000-க்கும் அதிகமான பாடல்களைப் பாடி உலக சாதனை படைத்த எஸ். ஜானகியின் சொத்து மதிப்புகள் குறித்து அவ்வப்போது மீடியாக்களில் கசிவதுண்டு.. இப்போதும் அந்த உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் மீண்டும் வலம் வந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக, சென்னை, ஹைதராபாத் மற்றும் அவர் தனது இறுதிக்காலத்தில் வசித்து வந்த மைசூர் ஆகிய முக்கிய நகரங்களில் இவருக்கு சொந்தமான குடியிருப்பு வீடுகளும் இதர அசையா சொத்துக்களும் இருப்பதாக தெரிகிறது. இதுதவிர, 50 ஆண்டுகளுக்கும் மேலான அவரது நீண்டகால இசைப் பயணத்தில் பாடிய பல்லாயிரக்கணக்கான பாடல்கள் மூலம் தொடர்ந்து கிடைத்து வரும் ராயல்டி தொகையும், அவருடைய பிற முதலீடுகளும் வருவாய் ஆதாரங்களாக விளங்குகின்றன. ரசிகர்களே உண்மையான சொத்து சினிமா வட்டாரங்களின் உத்தேச கணக்கீடுகளின்படி, ஜானகி அம்மாவின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு சுமார் 15 கோடி ரூபாய் முதல் 25 கோடி ரூபாய் வரை இருக்கலாம் என்கிறார்கள்.. ஆனாலும் இதுகுறித்த அதிகாரப்பூர்வமானத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.. எத்தனை சொத்துகள் இருந்தால் என்ன? எத்தனை விருதுகள் இருந்தால் என்ன? "எனது ரசிகர்கள்தான் எனக்குப் பெரிய விருது" என்று ஜானகி அம்மா அடிக்கடி மேடைகளில் நெகிழ்ந்து சொல்வார். அந்தவகையில், ரசிகர்களின் மனங்களில் என்றைக்குமே அவருக்கு நீங்கா இடமிருக்கும் என்பதுடன், தென்னிந்திய மொழிகள் இருக்கும் வரை இந்த உலகில் எஸ்.ஜானகியின் காந்தக் குரலும் தொடர்ந்து ஒலித்துக்கொண்டேதான் இருக்கும்.