Idhayam Murali Review: அதர்வாவின் இதயம் முரளி எப்படி இருக்கு? மனதை வென்றதா? இல்லையா? முழு ரிவ்யூ


  • சென்னை: தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகர்களுக்கு என்னதான் திறமை இருந்தாலும் இன்னும் பெரிய கமர்சியல் வெற்றி கிடைக்காமல் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அதில் ஒருவர்தான் நடிகர் அதர்வா. பரதேசி, ஈட்டி என ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமாக நடிப்பை காட்டினாலும் அவருக்கு பெரிய வெற்றி இன்னும் கிடைக்கவில்லை. அந்தக் குறையை போக்குமா என்ற எதிர்பார்ப்புடன் இன்று இதயம் முரளி திரைக்கு வந்து இருக்கிறது. இந்த திரைப்படம் எப்படி இருக்கு என்று விரிவாக பார்க்கலாம்.

    Advertisement

    தயாரிப்பாளராக வெற்றி பெற்ற ஆகாஷ் பாஸ்கரன் இந்த படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமாகி இருக்கிறார். அதர்வாவுடன் நடிகை கயாடு லோஹர், ப்ரீத்தி முகுந்தன், விஜய் டிவி ரக்ஷன், பரிதாபங்கள் சுதாகர், டிராவிட் செல்வம், நட்டி நட்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் சிறப்பு தோற்றத்தில் நடிகர் பகத் பாசிலும் வருகிறார். இந்த படத்திற்கு தமன் தான் இசையமைத்திருக்கிறார்.

    Advertisement

    படத்தைப் பற்றி பார்த்தால் முதலில் ஒரு விஷயத்தை சொல்ல வேண்டும் இந்த படம் ஆக்சன் படம் இல்லை, மாஸ் ஹீரோ படம் இல்லை, முழுக்க முழுக்க மனதை தொட்டு செல்லும் காதல் நட்பு குடும்ப செண்டிமெண்ட் எல்லாம் கலந்து கலவையாக உருவாக்கப்பட்ட ஒரு பீல் குட் திரைப்படம் தான். படத்தின் தொடக்கத்திலேயே 90ஸ் கிட்ஸ்களின் நினைவுகளுடன் ரசிகர்களை அழைத்து செல்கிறார் இயக்குனர்.

    ஸ்கூல் காலேஜ் முதல் காதல், நண்பர்கள், பிரிவு, மீண்டும் சந்திப்பு என பல விஷயங்களையும் அழகாக திரையில் பார்ப்பது ஒரு ஃபீல் குட் உணர்வு வருகிறது.

    Advertisement

    படம் எப்படி இருக்கு

    இந்த படத்தின் மிகப்பெரிய பலமே அதர்வா தான். அதிகமாக நடிக்க வேண்டும் நாமதான் ஸ்கிரீன் முழுக்க தெரிய வேண்டும் என்று எங்கு அவர் முயற்சி செய்யவில்லை. கதைக்கு என்ன தேவையோ அதை மட்டும் சரியாக செய்திருக்கிறார். காதல் காட்சிகளிலும் எமோஷனல் காட்சிகளிலும் குறிப்பாக கிளைமாக்ஸ் சீனிலும் அவருடைய நடிப்பு மனதில் நிற்கிறது. இந்த படத்தை அதர்வா தான் தன்னுடைய தோளில் சுமந்து சென்றிருக்கிறார் என்று சொல்லலாம்.

    ஹீரோயின்கள் நடிப்பு

    அதுபோல படத்தில் இரண்டு ஹீரோயினிகள் இருக்கிறார்கள். இருவரும் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட காட்சிகளில் நல்ல நடிப்பை கொடுத்திருக்கிறார்கள். குறிப்பாக எமோஷனலான சில காட்சிகளில் இருவரும் மனதை தொடுகிறார்கள். பகத் பாசில் படம் முழுக்க இல்லாவிட்டாலும் அவர் வரும் சில காட்சிகள் கூட ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் ஆக இருக்கிறது. அவருடைய என்ட்ரி வந்ததும் தியேட்டரில் கைதட்டல் எழுகிறது.

    Advertisement

    படத்தின் பிளஸ் பாயிண்ட்

    அதுபோல விஜய் டிவி ரக்ஷன், பரிதாபங்கள் சுதாகர் இருவரும் வரும் காட்சிகள் சிரிக்க வைக்கின்றனர். அதனால் படம் ரொம்ப அழுத்தம் கொடுக்காமல் இயல்பாக நகர்கிறது. இசையும் இந்த படத்திற்கு பிளஸ் ஆக அமைந்திருக்கிறது. தமன் கதைக்கு தகுந்தது போல மெலிதாக மனதை வருடும் பின்னணி இசையை கொடுத்திருக்கிறார்.

    Parasakthi Review: பராசக்தியில் சிவகார்த்திகேயனை விடுங்க! ரவி மோகன், அதர்வா மாஸ்.. இந்த இடம் சூப்பர்!

    படம் சுமார் ரெண்டு மணி நேரம் 45 நிமிடங்கள் ஓடுகிறது. சில இடங்களில் கொஞ்சம் நீளமாக இருப்பது போன்ற பீல் வருகிறது என்று படத்தை பார்த்த பலரும் சொல்லி இருக்கிறார்கள். முதல் பாதி மெதுவாக தெரியலாம் ஆனால் இரண்டாவது பாதி அந்த குறையை சரி செய்து விடும்.

    Advertisement

    மொத்தத்தில் தமிழில் ஆக்சன், கேங்ஸ்டர், வன்முறை படங்கள் அதிகமாக வரும் நேரத்தில் அதற்கு மாற்றாக காதல், நட்பு, குடும்ப உறவுகளை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது தான் இந்த இதயம் முரளி. இந்த படத்தை பார்த்து விட்டு வெளியே வரும்போது பெரிய மாஸ் காட்சிகள் நினைவில் இருக்காது. ஆனால் சில கேரக்டர்களும் சில வசனங்களும் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்.

    குடும்பத்துடனும், நண்பர்களுடனும் குறிப்பாக 90ஸ் நினைவுகளை விரும்புபவர்கள் கண்டிப்பாக இந்த படத்தை ஒருமுறை பார்க்கலாம். நீண்ட காலமாக ஒரு நல்ல ஃபீல் குட் படம் பார்க்கணும்னு யாரெல்லாம் ஆசைப்பட்டீங்களோ அவங்களுக்கு இதயம் முரளி ஏமாற்றம் தராது.

    English Summary

    Idhayam Murali Review: Actor Atharva. Phadayam Murali has hit the screens. If we look at the film, first of all, we have to say one thing, this film is not an action film, not a mass hero film, it is a feel good film made with a mixture of romantic, friendly, family sentiments that touch the heart. The director takes the fans with the memories of 90s kids right at the beginning of the film.