திருவண்ணாமலையில் கிரிவலம் என்னால் தான் உருவானது.. எப்படி தெரியுமா? இளையராஜா விளக்கம்

  • சென்னை: இளையராஜாவின் பாடலுக்கு அதிகமான ரசிகர்கள் இருந்தாலும் அவர் பேசுவது மட்டும் அதிகமாக விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது. சமீபத்தில் கூட அப்படித்தான் திருவண்ணாமலையில் கிரிவலப் பாதையை பக்தர்கள் சுற்றுவது தன்னால்தான் உருவானது என்று அவர் சொல்ல அது விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    Advertisement

    மனதில் சோகம் இருக்கா உடனே இளையராஜாவை பாடலை ப்ளே பண்றவர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள். இரவில் தூக்கம் இல்லாமல் தவிப்பருவர்களுக்கு மாத்திரையை விடவும் இளையராஜாவின் பாடல்கள் மருந்தாக பயன்படுத்துபவர்கள் அதிகமானோர் இருக்கிறார்கள். பல தலைமுறைகள் தாண்டி இளையராஜாவின் பாடல்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த மனுஷனுக்கு மட்டும் எத்தனை வயசு ஆனாலும் இப்போதைய இளம் தலைமுறைகளுடன் போட்டி போடுறாரு என்று சொல்ற அளவிற்கு தான் அவருடைய பாடல்களும் திறமையும் இருக்கிறது.

    Advertisement

    இளையராஜாவின் சாதனை

    மூன்று நான்கு தலைமுறை தாண்டியும் ஹீரோக்களுக்கு இவருடைய பாடல்கள் செட் ஆகி விடுகிறது. அதுவே இவருடைய சாதனையாக இருந்தாலும் அவர் இதுவரை 1500க்கும் மேற்பட்ட பாடல்கள் இசை அமைத்திருக்கிறார். ஆனாலும் அவர் பேசுவது மட்டும் அடிக்கடி சர்ச்சையாகி விடுகிறது. தனக்கு தலைகனம் கிடையாது ஆனால் நான் இப்படித்தான் பேசுவேன் என்று அவர் சில இடங்களில் பேசுவதை பார்த்திருப்போம்.

    திருவண்ணாமலை கிரிவலம் பற்றி இளையராஜா

    அதேபோலத்தான் இப்போது அவர் கொடுத்த பேட்டி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதில் அவர் பேசும்போது 1980 ஆம் ஆண்டு முதல் 2000 ஆண்டு வரை ஒவ்வொரு பௌர்ணமியிலும் திருவண்ணாமலை கிரிவலம் செல்வதை வழக்கமாக வைத்திருந்தேன். நான் அந்த மலையை சுற்றி வருவதை மக்களும் பின்பற்றினார்கள் என்று அங்கிருந்து அடியார்கள் சொல்வார்கள். நான் சுற்றிய பிறகுதான் கிரிவலப் பாதை சுற்றுவது உருவானது என்று அவர்கள் சொல்லி தான் எனக்கே தெரியும் என்று கூறி இருக்கிறார்.

    Advertisement

    இதுதான் இப்போ சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. இளையராஜா மிகப்பெரிய ஆன்மீகவாதி என்பது அனைவருக்கும் தெரிந்த செய்திதான். அவரது ஸ்டுடியோவில் கூட பெரிய சைஸில் ரமண மகரிஷி புகைப்படம் இருக்கும். அதோடு கடவுள் நம்பிக்கையோடு தான் எந்த இடத்திலும் பேசுவார். அடிக்கடி திருவண்ணாமலை கோவிலுக்கு சென்று வரும் இளையராஜா இப்போ திருவண்ணாமலை கிரிவல பாதை பற்றி பேசியது விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    சிம்பொனி நாயகன்

    இளையராஜா சினிமாவில் மட்டுமல்ல இந்தியாவில் இருந்து முதல் முறையாக சிம்பொனி இசையை உலக அரங்கில் நிகழ்த்திய இசை அமைப்பாளர் என்ற பெருமையும் அவருக்கே சேரும். லண்டனில் நடைபெற்ற அவருடைய சிம்போனி நிகழ்ச்சி பெரும் வரவேற்பு பெற்றது. அதற்காக தமிழக அரசும் அவருக்கு பாராட்டு விழா நடத்தியது.

    Advertisement

    இந்த வயதிலும் தொடர்ந்து புதிய படங்களுக்கு இசையமைத்து பிஸியாக இருக்கிறார். இசையில் அவர் உருவாக்கிய சாதனைகளை யாராலும் மறுக்க முடியாது. அதே நேரத்தில் பொதுவெளியில் அவர் பகிரும் சில கருத்துக்கள் தொடர்ந்து விவாதங்களையும், விமர்சனங்களையும் சந்தித்து சோசியல் மீடியாவில் அவரைப் பற்றி பேச வைத்து விடுகிறது.

    English Summary

    Ilaiyaraaja: Although Ilayaraja's song has many fans, his speaking is also facing more criticism. Even recently, he said that the devotees circumambulating the Kriwala path in Thiruvannamalai was created by him, which has caused a debate.