சுதந்திர தினம் திரிஷா”வின் ஸ்பெஷல்.. விஜய், சூர்யா படத்தில் நாளை டிவியில் இப்படி ஒரு ட்ரீட்

  • சென்னை : சுதந்திர தின விடுமுறையில் குடும்பத்துடன் சாப்பாடு, டிவியில் ஸ்பெஷல் நிகழ்ச்சிகள் என ஒரு தனி கொண்டாட்டம் தான். அந்த வகையில் இந்த ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதியும் தமிழ் ரசிகர்கள் சினிமாவிற்கு குறைவிருக்காது. ஆனால் இந்த சுதந்திர தின ஸ்பெஷலில் யாரும் எதிர்பார்க்காத ஒரு சுவாரஸ்யமான ஒற்றுமை இருக்கிறது. ஒரு பக்கம் விஜய், இன்னொரு பக்கம் சூர்யா ஆனால் இரண்டு படங்களில் ஒரே நடிகை திரிஷா தான்.

    Advertisement

    சுதந்திர தின ஸ்பெஷல்

    ஆகஸ்ட் 15ஆம் தேதி சன் டிவியில் மாலை 6.30 மணிக்கு விஜய், திரிஷா நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் ஒளிபரப்பாகிறது. அதே நேரத்தில் ஜீ தமிழில் சூர்யா, திரிஷா நடிப்பில் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்ற கருப்பு திரைப்படம் ஒளிபரப்பாக இருக்கிறது. இதில் சுவாரசியம் என்னவென்றால் திரிஷா நடித்த இரண்டு வெவ்வேறு காலகட்ட படங்கள் ஒரே நாளில் தொலைக்காட்சியல் ஒளிபரப்பாகிறது.

    Advertisement

    விஜய் திரிஷா கூட்டணி

    லியோ படத்தை பொருத்தவரை விஜய், திரிஷா கூட்டணிக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. பல வருடங்களுக்கு பிறகு இருவரும் இணைந்து நடித்த படம் என்பதால் வெளியான நேரத்திலேயே இந்த ஜோடி மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அதிலும் இப்போது விஜய் அரசியலுக்கு வந்து தமிழகத்தின் முதலமைச்சர் ஆக பொறுப்பேற்றிருக்கும் சூழலில் சுதந்திர தினத்தன்று மாலை தொலைக்காட்சியில் விஜயின் லியோ ஒளிபரப்பாவது ரசிகர்களின் கவனத்தை இன்னும் அதிகமாக ஈர்க்கும் விஷயமாக மாறி உள்ளது.

    விஜய் ஸ்பெஷல்

    குறிப்பாக முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு விஜய் முதல் முறையாக சுதந்திர தின நிகழ்வில் தேசிய கொடியை ஏற்ற உள்ள நிலையில் காலையில் அரசியல் தலைவராக விஜயை பார்க்கும் ரசிகர்கள், மாலையில் அவருடைய திரைப்படத்தை பார்க்கும் வகையிலான ஒரு நாளாகவும் இது அமைந்திருக்கிறது. அதேபோல மறுபக்கத்தில் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்த இந்த கருப்பு படம் 2026 இல் வெளியாகி ரசிகர்களிடையே பேசப்பட்ட படங்களில் ஒன்றாக இருக்கிறது. இதில் திரிஷா கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

    Advertisement

    இதனால் சூர்யா ரசிகர்களுக்கு இந்த சுதந்திர தின ஸ்பெஷலாக இருக்கப் போகிறது. ஒரு பக்கம் லியோவில் விஜய் - திரிஷா, இன்னொரு பக்கம் கருப்பிலும் சூர்யா திரிஷா. இதனால் சோசியல் மீடியாவில் ரசிகர்கள் இப்போது கவனிக்க விஷயம் ஒன்றுதான் சுதந்திர தினம் திரிஷா தினமா? என்று கூட சிலர் கமெண்ட் செய்ய ஆரம்பித்து இருக்கின்றனர்.

    ரசிகர்கள் கருத்து

    சினிமாவில் ஒரு நடிகை ஒரே நாளில் இரண்டு முன்னணி நடிகர்கள் ஹீரோக்களின் படங்களில் வருவது புதிதல்ல ஆனால் இங்கே விஷயம் சற்று வித்தியாசமானது. விஜய்- திரிஷா கூட்டணி என்றாலே கடந்த சில மாதங்களாக சமூக வலைத்தளங்களில் தனித்தனியாக ஒரு பரபரப்பு இருக்கிறது. அதே நேரத்தில் சூர்யா திரிஷா கூட்டணியில் வெளியான கருப்பு படமும் சமீபத்திய வெற்றி படமாக இருப்பதால் ஒரே நாளில் இரண்டு பெரிய ஹீரோக்களுடன் திரிஷா ரசிகர்கள் பார்க்க போகிறார்கள். அதுவும் நாளை ஆகஸ்ட் 15ஆம் தேதி போன்ற ஒரு விடுமுறை நாளில்.. அதனால் வீட்டில் குடும்பத்துடன் டிவி முன்பு அமர்ந்து படம் பார்க்கும் ரசிகர்களுக்கு இந்த ஆண்டு சுதந்திர தினத்தில் இரண்டு பெரிய ஹீரோக்களின் படங்களுடன் திரிஷாவின் டபுள் ட்ரீட் இருக்கிறது.

    English Summary

    Independence Day holidays are a time for special celebrations, featuring family meals and special TV programs. In keeping with this tradition, Tamil fans have plenty of cinema-related entertainment to look forward to this August 15th. However, there is an interesting and unexpected common link in this year's Independence Day lineup: while Vijay features in one film and Suriya in the other, Trisha is the leading lady in both.