சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வெற்றியாளர் முத்துக்குமரனுக்கும், சமூக வலைதளப் பிரபலம் வாஹிதாக்கும் இடையிலான விவகாரம் இன்னும் முடிவுக்கு வந்தபாடில்லை. வாஹிதா அடுத்தடுத்து வீடியோக்களை வெளியிட்டு வரும் நிலையில், முத்துக்குமரனோ இந்தக் குற்றச்சாட்டுகள் தன்னுடைய பெயருக்குக் களங்கம் ஏற்படுத்துவதாகக் கூறி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்திருக்கிறார். இப்படி இருவருக்கும் இடையிலான பிரச்சினை பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் நேரத்தில், வாஹிதா இப்போது வெளியிட்டிருக்கும் புதிய பதிவு மீண்டும் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
வாஹாதா அடுத்த போஸ்ட்
வாஹிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் பதிவில், "இன்னும் அவர் மீது புகார் கொடுக்கவில்லை என்று நீங்கள் கேட்கலாம். அவரைச் சிறைக்கு அனுப்ப வேண்டும் என்பது என் நோக்கம் இல்லை. அவர் என்னிடம் இப்படிச் செய்ததற்காகவும், என்னைத் தண்டிக்க வேண்டும் என்று நினைப்பதற்காகவும் நான் இதைச் செய்யவில்லை. அந்த அழகான வார்த்தைகளையும் வாக்குறுதிகளையும் நம்பி, கொஞ்சமாவது சந்தோஷமாக இருந்துவிட்டேன். அதனால் போதும். போய்விடு, ஆனால் மன்னிப்பு கேட்டுவிடு. அவ்வளவுதான்" என்ற பொருளில் பதிவிட்டிருக்கிறார்.
அடுத்தடுத்த பதிவுகள்
இதற்கு முன்பு வாஹிதா பகிர்ந்திருந்த மற்றொரு பதிவும் கவனம் பெற்றுள்ளது. அதில், "இது பாலியல் வன்கொடுமை அல்ல; தவறான நம்பிக்கையும் வாக்குறுதிகளும்தான்" என்று அவர் குறிப்பிட்டிருந்தார். அதோடு, முத்துக்குமரனுடன் நெருக்கமாக இருந்ததாகத் தான் கூறும் சம்பவத்துக்கு 5 நாட்களுக்குப் பிறகும், மாதவிடாய் காலத்திலும் மருத்துவ ரீதியாக ஆதாரங்களைப் பெற முடியுமா என்ற கேள்வியையும் பகிர்ந்திருக்கிறார். இதனால் இந்த விவகாரம் குறித்து சமூக வலைதளங்களில் தொடர்ந்து விவாதம் நடந்து வருகிறது.
வாஹிதா வெளியிட்ட வீடியோக்கள் மற்றும் குற்றச்சாட்டுகளுக்குப் பிறகு முத்துக்குமரன் தனது தரப்பு விளக்கத்தை முன்வைத்திருக்கிறார். இருவரும் காதலிக்கவில்லை என்றும், நண்பர்களாக மட்டுமே பழகி வந்ததாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், தாங்கள் விளையாட்டாகப் பேசிய வீடியோவை வாஹிதா வெட்டி, ஒட்டி எடிட் செய்து வெளியிடுவதாகவும், அதனால் தன்னுடைய பெயருக்கும் நற்பெயருக்கும் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும் புகாரில் தெரிவித்ததாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. அந்த வீடியோக்களை சமூக வலைதளங்களில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் கோரியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது, வாஹிதா கூறும் குற்றச்சாட்டுகளை முத்துக்குமரன் மறுத்து வரும் நிலையில், அவர் வெளியிடும் வீடியோக்கள் குறித்து சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் முத்துக்குமரனின் தரப்பு கோரிக்கை. ஒருபக்கம் முத்துக்குமரன் புகார் கொடுத்திருக்கிறார். இன்னொரு பக்கம் வாஹிதா தொடர்ந்து பதிவுகளை வெளியிட்டு வருகிறார். இப்போது அவர் வெளியிட்டிருக்கும் பதிவைப் பார்த்தால், முத்துக்குமரனைச் சிறைக்கு அனுப்புவது தனது நோக்கம் இல்லை என்றும் சொல்லிக் கொண்டிருக்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான முத்துக்குமரன் இப்போது இந்த விவகாரத்தால் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறார். வாஹிதாவின் புதிய பதிவும், முத்துக்குமரன் கொடுத்த புகாரும் அடுத்தடுத்து வெளியாகியிருப்பதால், இந்தப் பிரச்சினை எந்தக் கட்டத்தை நோக்கிச் செல்கிறது என்பதுதான் தற்போது பலரது கவனமாக இருக்கிறது.முத்துக்குமரன் கொடுத்த புகார்
ரசிகர்கள் எதிர்பார்ப்பு
1000 முத்தம், உறவு வைத்து கொண்டு பிக் பாஸ் முத்துக்குமரன் ஏமாத்திட்டாரு.. தற்கொலை முயற்சி செய்த பெண்!