சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான முத்துக்குமரனுக்கும், வாஹிதாவுக்கும் இடையே நடக்கும் சர்ச்சை இன்னும் முடிவுக்கு வந்தபாடில்லை. இருவரும் மாறி மாறி தங்களுடைய தரப்பு விளக்கங்களை வெளியிட்டு வரும் நிலையில், இப்போது வாஹிதா மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டு, தன்னைப் பற்றி சமூக வலைதளங்களில் பேசப்படுவதற்குப் பதிலடி கொடுத்திருக்கிறார்.
குறிப்பாக, முத்துக்குமரன் மீது ஏன் காவல்துறையில் புகார் கொடுக்கவில்லை, பணத்துக்காக அவருடன் பழகினாரா? இன்ஸ்டாகிராம் பாலோவர்ஸ் அதிகரிக்கத்தான் இந்தப் பிரச்சனையைப் பெரிதாக்குகிறாரா? என எழுந்த கேள்விகளுக்கு அவர் பதில் அளித்திருக்கிறார். இந்த விவகாரம் ஆரம்பித்ததிலிருந்தே வாஹிதா வெளியிட்டு வரும் வீடியோக்கள் இணையத்தில் பேசுபொருளாகி வருகின்றன. முத்துக்குமரன் தன்னைத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டதாக வாஹிதா குற்றம்சாட்டியிருந்தார்.
தற்கொலை முயற்சி
இந்தப் பிரச்சனையால் மனவேதனை அடைந்ததாகவும், தற்கொலைக்கு முயன்றதாகவும் அவர் தெரிவித்திருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்குப் பதிலளித்த முத்துக்குமரன், தானும் வாஹிதாவும் நண்பர்களாகப் பழகியவர்கள் என்றும், இருவரும் விளையாட்டாக பேசியதை அவர் வெட்டி ஒட்டி வெளியிட்டிருப்பதாகவும் கூறி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இதனால் இருவருக்கும் இடையிலான பிரச்சினை இன்னும் தீவிரமானது.
இந்தச் சூழலில்தான், முத்துக்குமரன் மீது ஏன் புகார் கொடுக்கவில்லை என்று பலரும் கேட்பதாகக் கூறியுள்ள வாஹிதா இது பற்றி ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அதில், அவரைக் கைது செய்ய வைப்பது தனது நோக்கம் கிடையாது. முத்துக்குமரன் என்கிட்ட நேரில் பேச வேண்டும், மனம் திறந்து உண்மையைச் சொல்லி இந்தப் பிரச்சினையைச் சமாதானமாக முடிக்க வேண்டும் என்றுதான் எதிர்பார்த்தேன். ஆனால், என்னிடம் பேசுவதற்குப் பதிலாக, என்னைப் பற்றி மற்றவர்கள் வெளியிடும் எதிர்மறையான கருத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து முத்துக்குமரன் இந்தப் பிரச்சினையிலிருந்து விலகிச் செல்ல முயற்சிக்கிறார் என வாஹிதா குற்றம்சாட்டியுள்ளார். இந்த விவகாரத்தில் வாஹிதா தெரிவித்திருக்கும் இன்னொரு விஷயம், தன்னிடம் ஆதாரம் இல்லை என்பதுதான். முத்துக்குமரன் நேரில் பேசும்போதுதான் தன்னைத் திருமணம் செய்துகொள்வதாக வாக்குறுதி கொடுத்ததாகவும், அதை நிரூபிப்பதற்கு தன்னிடம் whatsapp மெசேஜ் படுக்கை அறையில் நாங்க ஒன்றாக இருக்கும் போது எடுத்த வீடியோவோ இல்லை என்றும் அவர் கூறியிருக்கிறார். அப்படியிருக்கும்போது காவல்துறையில் எப்படி புகார் கொடுக்க முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ள வாஹிதா, ஒரு வழக்கை நடத்துவதற்கு எவ்வளவு பணம் தேவைப்படும் என்பதும் தனக்குத் தெரியும், முத்துக்குமரனிடம் பணம் இருக்கலாம், ஆனால், தன்னுடைய பொருளாதார நிலைமை அப்படி இல்லை என்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார். தான் தற்கொலைக்கு முயன்றபோது மருத்துவமனைச் செலவுக்காகத் தனது பிஎஃப்ல இருந்து ரூ.30,000 எடுத்துக் கொடுத்தேன் இப்படிப்பட்ட நானா அவரிடம் பணத்துக்காக பழகினேன்? அவரிடம் இருந்து பணம் பறிப்பது என்னுடைய நோக்கம் கிடையாது. அவருடைய வீட்டில் நான் சாப்பிட்டதற்கு கூட பணத்தை கொடுத்து விட்டு தான் வந்தேன். அதேபோல இன்னும் சிலர் சொல்றாங்க நான் பிரபலத்துக்காக இந்த வீடியோக்கள் வெளியிட்டு இப்படி போஸ்ட் போட்டேன் என்று சொல்லுறாங்க. எனக்கு ஏற்கனவே இன்ஸ்டா பிரபலம் இருக்கு. நான் ஜாலியாக டான்ஸ் ஆடி, கிறுக்குத்தனமாக ஏதாவது செய்து வீடியோ போட்டு ஏற்கனவே பாலோவர்ஸ் வைத்திருந்தேன். ஆனால் இப்போ இந்த பிரச்சனைக்கு பிறகு என்னை பார்ப்பவர்களுக்கு வேண்டுமென்றால் நான் புதிதாக இருக்கலாம் ஆனால் என்னை ஏற்கனவே ஃபாலோ பண்ணுறவர்களுக்கு என்னை பற்றி தெரியும். அதனால் இப்போது புதிதாக ஃபாலோ பண்ணுனவங்க என்னை அப்படியே ஃபாலோ பண்ணுங்க என்று நான் சொல்ல மாட்டேன் வேண்டாம் என்றால் அன்பாலோ பண்ணிட்டு போய்விட்டே இருங்க. நான் இப்போ நெகடிவ்வால தான் பிரபலம் அடைந்திருக்கிறேன் என்பது எனக்கும் தெரியும். இப்படி ஒரு பிரபலத்தை வைத்து எந்த பிரமோசனும் வராது. எந்த படத்திலூம் நடிக்க கூப்பிட மாட்டாங்க. அப்படி இருக்கும்போது எதற்காக நான் எண்ணை அசிங்கப்படுத்தி பிரபலம் தேடிக் கொள்ளப் போகிறேன் என்று தன்னைப் பற்றிய வதந்திகளுக்கும் விளக்கம் கொடுத்திருக்கிறார்.வாஹிதா புது வீடியோ
ஆதாரம் இல்லை
பிக்பாஸ் ஜேசன் மனைவி யார் தெரியுமா? ரகுவரன் போல மிரட்டியவர்.. சாந்தினியால் விமர்சனத்தில் சிக்கல்!
பணத்துக்காக நாடகமா?
டாஸ்க் புரியலன்னு சொன்னாங்க.. இப்போ டிடிஎஃப் வாசன் செய்த வேலையை பாருங்க! பிக் பாஸ் வீட்டில் அதிரடி!
வதந்திகளுக்கு பதில்