300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா?


  • சென்னை: பாரதிராஜாவின் குடும்ப பின்னணி மிகவும் பெரியது. சொத்து பிரச்சனை மீடியாவில் வெளிவந்துவிட்டதால், அவர்கள் நந்தனா குடும்பத்தை எதிர்த்து நின்றால் ஒட்டுமொத்த மீடியாவும் அவர்களுக்கு எதிராகத்தான் போகும். நியாயம் கிடைப்பதற்கு அவர்கள் மனசாட்சியோடு நடந்து கொள்ள வேண்டும். பாரதிராஜா விருது வாங்கியதையும், அவரது சாதனைகளையும் பேசுவதை விட்டுவிட்டு, "பாரதிராஜா குடும்பத்தில் இப்படி ஒரு பிரச்சனையா?" என்று மக்கள் பேசத் தொடங்கினால் அவரது பெயரே கெட்டுப் போய்விடும்" என்று சினிமா விமர்சகர் திண்டுக்கல் வெங்கடேசன் கருத்து தெரிவித்துள்ளார்.

    Advertisement

    PUBLIC WING என்ற சேனலில் பேசியிருக்கும் வெங்கடேசன், "பாரதிராஜா மகன் மனோஜ் மறைந்தபோதே, அவரது மனைவி நந்தனாவிற்கும் அவர்களது இரண்டு மகள்களுக்கும் சொத்துக்களை எழுதிக் கொடுத்துவிட வேண்டும் என்று பாரதிராஜா ஒரு தீர்க்கமான முடிவிற்கு வந்தார்.

    Advertisement

    ஆனால், அந்த சமயத்தில் சென்னையில் இருந்தால் நந்தனாவிற்குச் சார்பாகச் சில பிரச்சனைகள் எழுந்துவிடும் என்று திட்டமிட்டு, பாரதிராஜாவின் மகள் ஜனனி தன் அப்பாவை தந்தையைமலேசியாவிற்கு அழைத்துச் சென்று சில மாதங்கள் தங்க வைத்தார். பாரதிராஜா மலேசியாவில் இருந்தபோதும், தன் மருமகளைப் பற்றியும் பேத்திகளைப் பற்றியும் தொடர்ந்து விசாரித்துக் கொண்டே இருந்தாராம்.

    நந்தனா - ஜனனி உறவு

    தன் வாழ்நாளின் இறுதிவரை, தான் சென்னைக்கு சென்று தன் மருமகளையும் பேத்தியையும் பார்க்க வேண்டும் என்றும், மனோஜிற்குச் சேர வேண்டிய சொத்துக்களை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் பாரதிராஜா தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கிறார்.

    Advertisement

    ஆனால் பாரதிராஜாவின் மகள் ஜனனிக்கும், மருமகள் நந்தனாவிற்குமிடையே பல வருடங்களாகவே கடுமையான பகை இருந்து வந்துள்ளது. ஜனனிக்கு 2 மகன்கள் உள்ள நிலையில், தன் அண்ணன் மகள்களைத் தன் சொந்த பிள்ளைகளாக நினைத்து பாசம் காட்ட தவறிவிட்டாரா தெரியவில்லை.. கேரளா மாநிலத்திலிருந்து தமிழ்நாட்டை நம்பி வந்த ஒரு பெண்ணான நந்தனா மீது, பணத்திற்காக ஜனனி ஏன் இவ்வளவு விரோதம் வைத்துள்ளார் என்பது புரியாத புதிராகவே உள்ளது.

    பாரதிராஜா நீலாங்கரை வீட்டில் உடல்நலம் பாதித்து இருந்தபோது, அவரை பார்ப்பதற்காக வந்த நந்தனாவையும் அவரது மகளையும், "மனோஜே இல்லாதபோது உங்களுக்கு இங்கே என்ன வேலை? வெளியே போங்கள், நாங்களே பார்த்துக் கொள்கிறோம்" என்று பாரதிராஜாவின் உறவினர்களும், சுற்றியிருப்பவர்களும், வீட்டிற்குள் சேர்க்காமல் மீடியாவை விரட்டியடித்தார்களாம்.

    Advertisement

    பாரதிராஜா தான் நினைத்ததை யாரிடமாவது சொல்லிவிடுவாரோ என்ற அச்சத்தில், சினிமா பிரபலங்கள் யாரையுமே அவரை பார்க்க விடாமல் தடுத்துள்ளார்கள்.

    பாரதிராஜாவின் சொத்து மதிப்பு 300 கோடி

    பாரதிராஜாவின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு கிட்டத்தட்ட 300 கோடி ரூபாய்க்கும் மேல் இருக்கும் எனக் கூறப்படுகிறது. இவ்வளவு சொத்துக்கள் இருந்தும், அதில் 50 கோடியாவது நந்தனாவிற்குத் தர மறுக்கிறார்கள். பாரதிராஜா இறுதிச்சடங்கு நடந்த பொது மேடையிலும், ஒட்டுமொத்த மக்கள் கூட்டத்திற்கு மத்தியில், நந்தனாவை மிகவும் அசிங்கப்படுத்தி அவமானப்படுத்தி உள்ளனர்.

    பாரதிராஜா தன் சொத்துக்களை மருமகளுக்கும் பேத்திகளுக்கும் கொடுக்க விரும்பிய ஒரு பக்கமும், முக்கிய விஐபிகளை வீட்டிற்குள் விடாமல் அவரைப் பார்க்க விடாமல் தனிமைப்படுத்தி தடுத்த மற்றொரு பக்கமும் என இந்த செய்திகள் எல்லாம் இப்போதுதான் ஒவ்வொன்றாக வெளிச்சத்திற்கு வருகிறது.

    Advertisement

    மலேசியாவில் என்ன நடந்தது, சொத்துக்கள் முழுமையாக மற்றவர்கள் கைக்கே போய்விட்டதா அல்லது இன்னும் எழுதித் தராமல் ஒரு பகுதி இருக்கிறதா என்பது இன்னும் தெரிய வர வேண்டும். இதனால் நந்தனாவும் அவரது இரண்டு மகள்களும் ஒரு வக்கீலை வைத்து, இந்த விவகாரத்தை எப்படி விசாரிக்கலாம், கேஸ் போடலாம் என்ற அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளைப் பற்றி ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வருகின்றன.

    2 பேத்திகளுக்கும் இந்த சொத்தில் உரிமை

    இப்போது நந்தனா வசித்து வரும் சேத்துப்பட்டு வீட்டையும் காலி செய்யச் சொல்லி மிரட்டல் விடுக்கப்படுகிறதாம்.. பாரதிராஜாவின் மகள் ஜனனி அனைத்து வசதிகளுடன் ஏகப்பட்ட சொத்துக்களுடன் வாழ்கிறார். அவர் நந்தனா மீது இருக்கும் தனிப்பட்டப் பகையை தூக்கிப் போட்டுவிட்டு, தன் அண்ணனுக்கு செய்யும் கடமையாக நினைத்து இந்த 2 பேத்திகளுக்கும் உரிய பங்கைக் கொடுக்க முன்வர வேண்டும்.

    Advertisement

    பாரதிராஜா தனது சுயசம்பாத்திய சொத்துக்களை உயில் எழுதாமல் இறந்திருந்தால், சட்டப்படி மனோஜின் 50 சதவீதப் பங்கு நேராக நந்தனாவிற்கும் அவரது மகள்களுக்கும் வந்து சேரும். நந்தனாவிற்கு உரிமை இல்லை என்று மறுத்தாலும், பாரதிராஜாவின் சொந்த ரத்தமான அவரது 2 பேத்திகளுக்கும் இந்தச் சொத்தில் முதல் உரிமை உண்டு. எனவே, நந்தனா ஒரு சிறந்த வழக்கறிஞரை வைத்து இந்தஅ சொத்துக்கான சட்ட போராட்டத்தை உடனே ஆரம்பிக்க வேண்டும்.

    300 கோடி சொத்துக்கள்

    நந்தனாவுக்கு ஆதரவாகப் போராட சென்னையில் ஆட்கள் இல்லை, அவர்கள் கேரளாக்காரர்கள் என்பதால் அங்கிருந்துதான் சொந்தக்காரர்கள் வர வேண்டும். தமிழ்நாட்டை நம்பி வந்த அந்தப் பெண்ணிற்கு, பாரதிராஜாவின் 300 கோடி சொத்தில் 50:50 கொடுக்காவிட்டாலும், 60% அவர்கள் எடுத்துக்கொண்டு மீதி 40% பங்கையாவது பாவம் அந்தப் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காகவும், திருமணத்திற்காகவும் கொடுத்திருக்கலாம். இதை அவர்கள் பேசித்தான் முடிக்க வேண்டும், போராடுவதைத் தவிர வேறு வழியில்லை.

    பாரதிராஜாவின் குடும்பப் பின்னணி மிகவும் பெரியது. இந்தச் சொத்து பிரச்சனை மீடியாவில் வெளிவந்துவிட்டதால், அவர்கள் நந்தனா குடும்பத்தை எதிர்த்து நின்றால் ஒட்டுமொத்த மீடியாவும் அவர்களுக்கு எதிராகத்தான் போகும். நியாயம் கிடைப்பதற்கு அவர்கள் மனசாட்சியோடு நடந்து கொள்ள வேண்டும்.

    பாரதிராஜா விருது வாங்கியதையும், அவரது சாதனைகளையும் பேசுவதை விட்டுவிட்டு, "பாரதிராஜா குடும்பத்தில் இப்படி ஒரு பிரச்சனையா?" என்று மக்கள் பேசத் தொடங்கினால் அவரது பெயரே கெட்டுப் போய்விடும்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.

    English Summary

    Is a ₹300 Crore Property Clash Behind the Bharathiraja Family Dispute? Nandhana Caught in the Middle as Tension Erupts