சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியல் மூலம் தனக்கான ஒரு ரசிகர்கள் வட்டாரத்தை உருவாக்கிக் கொண்ட சைத்ரா ரெட்டி பற்றிய செய்தி தான் இணையத்தில் ரசிகர்களை குழப்ப வைத்திருக்கிறது. காரணம் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடந்த திடீர் மாற்றம் தான்.
சைத்ரா ரெட்டி தனது கணவரும் தயாரிப்பாளருமான ராகேஷ் உடன் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கி இருப்பதை ரசிகர்கள் கவனித்திருக்கின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் அவர் தன்னுடைய தந்தையுடன் ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். அதை பார்த்ததும் சைத்ரா கணவரை பிரிந்து விட்டாரா? இருவருக்கும் விவாகரத்து ஏற்பட்டு விட்டதா? அல்லது கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருக்கிறார்களா? என்ற கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.
காதல் திருமணம்
சைத்ராவும் ராகேஷும் காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜோடி. கடந்த 2020 ஆம் ஆண்டு குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு முன்பும் திருமணத்திற்கு பிறகும் ராகேஷ் குறித்து சைத்ரா பகிர்ந்த பதிவுகள் ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்பட்டவை. காதலும் பொறுமையும் வென்றது என்று திருமண அறிவிப்பை வெளியிட்ட சைத்ரா கணவரின் பிறந்தநாளில் உருக்கமான வாழ்த்துக்களையும் பகிர்ந்திருந்தார்.
ஆனால் அதே சமூக வலைதளத்தில் கணவருடன் இருந்த நினைவுகள் காணாமல் போய் இருப்பது ரசிகர்களின் சந்தேகத்தை அதிகரித்திருக்கிறது. சமீப காலமாக அவர் வெளியிடும் புகைப்படங்களும் வீடியோக்களும் கூட அவருடன் சீரியலில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் உடன் எடுத்ததாக இருக்கிறது. அதுபோல அவருடைய தோழிகளின் வீட்டு பங்க்ஷனில் கூட சைத்ரா சிங்கிள் ஆக தான் கலந்து கொள்கிறார். இதனால் இது அதிகமாக கவனிக்கப்படுகிறது. இந்த சர்ச்சையை இன்னும் அதிகமாக பேச வைத்திருப்பது சமீபத்தில் நடிகை ரேஷ்மா முரளிதரன் குறித்து பரவிய தகவல்தான். ரேஷ்மாவும், சைத்ராவும் நெருங்கிய தோழிகள். இருவருமே அடுத்தடுத்து திருமணம் செய்து கொண்டனர். ரேஷ்மா சீரியல் நடிகரும் தொகுப்பாளருமான மதன்பாண்டியனை தான் காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவரும் சமீபத்தில் தன்னுடைய திருமண புகைப்படங்கள் உட்பட மதனுடன் எடுத்த புகைப்படங்களையும், வீடியோக்களையும் டெலிட் செய்திருக்கிறார். ஆனால் அவரது கணவர் மதன் பாண்டியன் எந்த புகைப்படங்களையும் டெலிட் செய்யவில்லை. ஆனால் அது வெறும் சமூக வலைத்தள மாற்றமா? அல்லது உண்மையிலேயே இருவரும் பிரிந்து வாழ்கிறார்களா? என்று குழப்பமும் நீடித்து வருகிறது. அதே சூழலில் இப்போ சைத்ராவும் கணவருடன் எடுத்த புகைப்படங்களை நீக்கி இருப்பதால், என்ன ஆச்சு தோழிகள் இருவரும் வரிசையாக ஒரே போல செய்கிறார்கள் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். சைத்ரா ரெட்டி கன்னடத்தில் தான் நடிப்பு பயணத்தை தொடங்கினார். தமிழில் அவருக்கு அறிமுகம் கிடைத்தது விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் நடிகை பிரியா பவானி சங்கர் நடித்த கேரக்டரில் நடித்தது தான். அதற்குப் பிறகு பிரபலம் கொடுத்தது ஜீ தமிழில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி சீரியல் தான். சன் டிவி சீரியலில் என்ட்ரி கொடுத்த சிறகடிக்க ஆசை ரோகிணி.. இனி ஆட்டம் ஆரம்பம்! என்ன கேரக்டர் தெரியுமா?புகைப்படங்கள் டெலிட்
குழப்பத்தில் ரசிகர்கள்
ரசிகர்கள் கேள்வி
சைத்ரா ரெட்டி அறிமுகம்
யாரடி நீ மோகினி சீரியலில் வில்லியாக நடித்து வந்தார். இந்த சீரியல் சில வருடங்களாக ஒளிபரப்பாகி பிறகு வந்தது. பிறகு அந்த சீரியல் முடிவுக்கு வந்ததும் கயல் சீரியலில் கமிட் ஆனார். அதுபோல ஒரு சில திரைப்படங்களிலும் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். ஆனால் கயல் சீரியல் 1000 எபிசோடை தாண்டி இப்போது வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் இவர் திருமண வாழ்க்கையில் என்ன நடந்தது என்பதுதான் சின்னத்திரை ரசிகர்களின் கேள்வியாக இருக்கிறது.