சென்னை: நடிகை கஸ்தூரி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய போகிறாரா? பாஜகவில் இருக்கும் அவர் தவெகவுக்கு மாறுகிறார் என்று சமூக வலைதளங்களில் விவாதங்கள் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், கஸ்தூரி போட்டிருக்கும் புதிய பதிவு இப்போது கவனம் ஈர்த்திருக்கிறது.
சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கஸ்தூரி கலந்துகொண்டிருந்தார். அப்போது அமைச்சர் வெங்கட்ரமணனுடன் அவர் பேசிக்கொண்டிருந்த வீடியோவும் வெளியானது. அதே நிகழ்ச்சியில் தவெக சட்டமன்ற உறுப்பினர் பல்லவியுடன் கஸ்தூரி பேசிக்கொண்டிருந்த காட்சிகளும் சமூக வலைதளங்களில் பரவின. இதையடுத்து, கஸ்தூரி தவெகவில் இணையப் போகிறாரா என்ற கேள்வியுடன் பலரும் அந்த வீடியோக்களைப் பகிரத் தொடங்கினர்.
இதனால் கடுப்பான கஸ்தூரி தனது பதிவில், "காமாலைக் கண்ணனுக்கு கண்டதெல்லாம் மஞ்சள்.. கஸ்தூரி தவெக-வில் இணைகிறார்... அது பாஜகவின் பி-டீம்... என்றெல்லாம் கதறுபவர்களை தமிழக மக்கள் ஒருபோதும் நம்பப்போவதில்லை; இதன் பின்னணியில் இருக்கும் அரசியல் வயிற்றிச்சலை மக்கள் தெளிவாகவே உணர்ந்துள்ளார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார். மேலும், பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் மக்கள் பணியால் ஈர்க்கப்பட்டு பொதுவாழ்வில் அடியெடுத்து வைத்தவள் நான். எக்காலத்திலும் எனக்கு வழிகாட்டி தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைமை மட்டுமே! என் மீது முழு நம்பிக்கை வைத்துத் துணை நிற்கும் தலைமைக்கும், தோள் கொடுக்கும் கட்சிச் சொந்தங்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்" என்று தெரிவித்துள்ளார். அதாவது, தான் பாஜகவில் இருந்து விலகி தவெகவில் இணையப் போவதாக வெளியாகும் பேச்சுகளுக்கு இந்தப் பதிவின் மூலம் கஸ்தூரி மறுப்பு தெரிவித்திருக்கிறார். தொடர்ந்து அந்த நிகழ்ச்சியில் நடந்ததைப் பற்றிக் குறிப்பிட்டுள்ள கஸ்தூரி, "ஆயிரக்கணக்கான மக்கள், கேமராக்கள் , பிரஸ் நிறைந்த அரங்கத்தில், ஒலிபெருக்கி சப்தத்தில், பரஸ்பர மரியாதையுடன் பரிச்சயமாக மாண்புமிகு அமைச்சர் சகோதரர் வெங்கட்ரமணனிடம் பேசியதைக்கூட வக்கிரமாகச் சித்தரிப்பதா?" என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். அரசியலில் வெவ்வேறு கட்சிகளில் இருப்பவர்கள் பொது நிகழ்ச்சிகளில் சந்தித்துப் பேசுவது இயல்பான ஒன்றுதான். ஆனால், இப்போது ஒரு சில நிமிடங்கள் பேசிக்கொண்டிருக்கும் காட்சிகள்கூட உடனடியாக அரசியல் கணக்குகளுடன் இணைத்துப் பார்க்கப்படுகின்றன. கஸ்தூரியின் வீடியோ விவகாரத்திலும் அதுதான் நடந்திருக்கிறது. அவர் அமைச்சர் வெங்கட்ரமணனுடன் பேசுவதையும், தவெக சட்டமன்ற உறுப்பினர் பல்லவியுடன் பேசியதையும் வைத்து அரசியல் மாற்றம் குறித்த கேள்விகள் எழுந்த நிலையில், அந்த உரையாடல்களைத் தவறாகச் சித்தரிப்பதாகக் கஸ்தூரி தனது கோபத்தை கொட்டி இருக்கிறார். தனது பதிவில் கடைசியாக, அரசியலில் கொள்கை முரண்கள் இருக்கலாம்; ஆனால் தனிமனித விரோதத்தை நான் ஒருபோதும் பாராட்டியதில்லை. நாகரிகமான ஒரு உரையாடலைக்கூட தவறாகச் சித்தரித்து ஜாதி, தொழில், பெண்மை, அனைத்தையும் இழிவுப்படுத்தும் கயவர்களின் முயற்சி கீழ்த்தர அவதூறுகளுக்கு அஞ்சமாட்டேன்! என்றும் கஸ்தூரி குறிப்பிட்டிருக்கிறார். இப்போது கஸ்தூரியின் இந்தப் பதிவு வெளியானதைத் தொடர்ந்து, அவர் தவெகவில் இணையப் போகிறார் என்ற பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.கஸ்தூரி பதிவு
நமது வரிப்பணம் ஏன் வீணடிக்கப்பட வேண்டும்? லீமா ரோஸ், உதயநிதி, ஆதவ் அர்ஜுனா ஏழைகளா.. கஸ்தூரி கேள்வி
அமைச்சருடன் பேச்சு
அமைச்சர் கீர்த்தனாவின் செருப்படி பதில்..ஆதரவாக வந்த கஸ்தூரி! பரந்தூர் விவகாரத்தில் விஜய்க்கு அட்வைஸ்
தவறான தகவல்