சென்னை: சமீபகாலமாக நடிகர் மாதவன் எதை பேசினாலும் அது சோசியல் மீடியாவில் அரசியல் விவாதமாக மாறி விடுகிறது. குறிப்பாக ஜிடிஎன் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில், "நிறைய டிராமா நடக்கிற இந்த நேரத்தில்" என்று அவர் பேசியது தமிழக அரசியல் சூழ்நிலையை குறிப்பிட்டதாக என்று விவாதம் பல நாட்கள் ஓடியது. அந்த சர்ச்சை அடங்குவதற்குள் தற்போது துரந்தர் திரைப்படம் குறித்தும் அரசியல் விமர்சனங்கள் குறித்தும் மாதவன் கொடுத்த புதிய விளக்கம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சமீபத்தில் தனியார் யூடியூப் சேனலில் பேசிய மாதவன், நான் எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவாகவோ, எதிராகவோ, இதுவரை எந்த பதிவுகளையும் வெளியிட்டதில்லை. மக்களால் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முதலமைச்சரோ, பிரதமரோ நல்ல விஷயங்களை செய்தால் அதை பாராட்டுவது நம்முடைய கடமை. நல்லதை பாராட்டுவது தவறு இல்லை. அதற்காக என்னை விமர்சிப்பவர்களின் பார்வையில் தான் பிரச்சனை இருக்கிறது. சமூக வலைதளங்களில் யார் என்ன சொல்வார்கள்? என்பதற்காக என்னுடைய கருத்துக்களை நாம் மாற்றிக் கொள்ள மாட்டேன் என்று சொல்லி இருக்கிறார்.
துரந்தர் திரைப்படம் ஒரு அரசியல் பிரச்சார படம் என்ற விமர்சனத்துக்கும் மாதவன் நேரடியாக பதில் கொடுத்து இருக்கிறார். அதில், இது எந்த அரசியல் கட்சியின் பிரச்சார படமும் இல்லை. நாட்டின் பாதுகாப்பு உளவுத்துறை மற்றும் பாகிஸ்தான் பின்னணியை மையமாக கொண்ட கதை. இந்தியாவை உலக அரங்கில் நேர்மறையாக காட்டுவதில் தவறு எதுவும் இல்லை. உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட கதாபாத்திரங்களை நேர்மையாக திரையில் கொண்டு வருவதே நடிகராக என்னுடைய பொறுப்பு என்றும் விளக்கம் கொடுத்திருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு ஜிடிஏன் திரைப்பட ப்ரோமோஷன் நிகழ்ச்சியில், "இந்த நேரத்தில் நிறைய டிராமா நடக்குது ஆனாலும் நீங்க எங்களுக்காக இங்க வந்து இருக்கீங்க.. ரொம்ப நன்றி" என்று மாதவன் பேசியிருந்தார். இந்த ஒரு வரியை வைத்து சோசியல் மீடியாவில் பல்வேறு விளக்கங்கள் பரவின. சிலர் அது தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலின் விஜயை விமர்சித்ததற்காக கைது செய்யப்பட்டு இருக்கும் இந்த சமயத்தை மையப்படுத்தி மேடையில் இருந்த நடிகர் சத்யராஜை மறைமுகமாக கிண்டல் செய்ததாக கூறி வந்தனர். ஆனால் மாதவன் அது பற்றி எந்த விளக்கமும் கொடுக்காமல் தனது படத்தின் ப்ரோமோஷனில் கவனம் செலுத்தி வருகிறார். இந்தியாவின் எடிசன் என்று அழைக்கப்படும் ஜிடி நாயுடுவின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ஜிடிஎன் திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் ஜிடி நாயுடுவாக மாதவன் நடித்திருப்பது ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த படத்தின் ப்ரோமோஷனில் தான் தன்னைப் பற்றி சர்ச்சைகளுக்கு எல்லாம் விளக்கம் கொடுத்து கொண்டு இருக்கிறார்.துரந்தர் பட சர்ச்சை
மேடையில் சர்ச்சை பேச்சு