சென்னை: தமிழ் சினிமாவில் இசைக்கு ஒரு புதுவிதமான நிறங்களை கொடுத்த இசையமைப்பாளர்களில் சந்தோஷ் நாராயணனும் ஒருவர். ஆனால் அவருடைய குடும்பம் பற்றி ரசிகர்களுக்கு அதிகம் தெரிந்திருக்காது. ஆனால் பாடகி தீ (Dhee ) சந்தோஷ் நாராயணனின் மகள் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். அதே நேரத்தில் அவரது சொந்த மகள் கிடையாது என்ற தகவலை சந்தோஷ் நாராயணனின் மனைவி மீனாட்சி சமீபத்தில் பகிர்ந்து இருக்கிறார். அது சோசியல் மீடியாவில் அதிகமாக பேசப்படுகிறது.
ஒரு நிகழ்ச்சியில் பேசிய மீனாட்சி தங்கள் குடும்ப வாழ்க்கை குறித்து இதுவரைக்கும் வெளியே தெரியாத ரகசியத்தை ஓபனாகவே பேசி இருந்தார். அதில் அவர் பேசும்போது, என்னுடைய மகள் தீ மற்றும் என் மகன் சுதீசன் இருவரும் என் முதல் கணவருக்கு பிறந்த குழந்தைகள். பிறகு என் வாழ்க்கையில் சந்தோஷ் நாராயணன் வந்தார். இந்த இரண்டு குழந்தைகளை அவர் ஒரு நாளும் வேறுபடுத்தி பார்த்தது கிடையாது.
தன்னுடைய சொந்த பிள்ளைகள் போலவே ஏற்றுக்கொண்டு வளர்த்தார். அதனால் தான் இன்று நாங்கள் ஒரு அழகான குடும்பமாக இருக்கிறோம். இசைதான் எங்களை ஒன்றாக இணைத்தது என்று நெகிழ்ச்சியுடன் கூறி இருக்கிறார். பாடகி ஜானகி இறப்பிலும் மோசமான விமர்சனம்.. இப்படியுமா பேசுவாங்க? பேத்தி அப்சரா சொன்ன அதிர்ச்சி விஷயம்! முதல் படத்திலேயே தனது இசையால் ரசிகர்களின் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து விட்டார். அதற்கு பிறகு பீட்சா, சூது கவ்வும், ஜிகர்தண்டா, மெட்ராஸ், கபாலி, காலா, பரியேறும் பெருமாள், வடசென்னை, கர்ணன், மகான், தசரா என பல படங்களில் தனது வித்தியாசமான இசையால் தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார். பின்னணி இசையாக இருந்தாலும் பாடல்களாக இருந்தாலும் புதுமையை முயற்சிப்பது சந்தோஷ் நாராயணனின் அடையாளமாக மாறிவிட்டது. அதுபோல மீனாட்சி மகளான தீ, இன்று இந்தியாவின் முன்னணி பாடகிகளில் ஒருவராக இருக்கிறார். என்ஜாய் என்ஜாமி பாடல் உலகம் முழுவதும் அவரை பிரபலம் ஆக்கியது. அதற்கு முன்பே பல தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்களில் தனது தனித்துவமான குரலால் ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்திருந்தார். தீ (Dhee)-க்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்த பல பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனது. சினிமாவை விட்டு விலகிய பிறகு பாடகி ஜானகி என்ன செய்தார்? கடைசி மேடையில் நடந்த சம்பவம்!சந்தோஷ் நாராயணன் மனைவி பேட்டி
இவர் இப்படி பேசிய பிறகுதான் சோசியல் மீடியாவில் அப்போ சந்தோஷ் நாராயணனின் மகள் தீ இல்லையா? எந்த இடத்திலும் தீயை விட்டுக் கொடுக்காமல் பேசுவாரே என்றெல்லாம் பலரும் பேசி வருகிறார்கள். அதேபோல சந்தோஷ் நாராயணன் 2012 ஆம் ஆண்டு வெளியான அட்டகத்தி படத்தின் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமானார்.சந்தோஷ் நாராயணன்
ஆனால் இதுவரை அவர்களுடைய குடும்ப உறவு ரகசியம் வெளியே தெரியாமல் இருந்த நிலையில் இப்போது தான் அது பலருக்கும் இன்ப அதிர்ச்சியாக மாறி இருக்கிறது. பொதுவாக சினிமா பிரபலங்கள் வாழ்க்கை என்றாலே சர்ச்சைகள் அதிகமாக பேசப்படும் ஆனால் சந்தோஷ் நாராயணன் குடும்பத்தை பற்றி இப்போது யாரும் சர்ச்சையாக பேசவில்லை என்றாலும் மனிதாபிமானம் பற்றி பேசி வருகிறார்கள்.