சென்னை: பிக் பாஸ் காமன் மேன் ஆடிசனுக்கு போனதிலிருந்து பிரியா வர்ஷினிக்கு கிடைத்த பப்ளிசிட்டி வேற லெவல். அதுவும் நைட்டி போட்டு கொண்டு போய் சராசரி குடும்ப பெண்ணை பிரதிபலிக்கிறேன் என்று ஒரு பக்கம் பேசி, மறுப்பக்கம் நடுவர்களையே கேள்வி கேட்க ஆரம்பித்ததும் ஆடிஷன் ஒரு சாதாரண தேர்வு ஆக இல்லாமல் சின்ன சைஸ் விவாத மேடையாகவே மாறிவிட்டது.
ஆனால் இப்போது முழு எபிசோடு வெளியான பிறகு தான் கதை கொஞ்சம் வேறு பக்கம் திரும்பி இருக்கிறது. ஆடிஷனில் ரிஜெக்ட் ஆகி வெளியே வந்த பிறகு பிரியா வர்ஷினி எனக்கு பிக் பாஸ் பிடிக்காது அது ஒரு குப்பை நிகழ்ச்சி, நான் இதற்கு முன்பு பிக்பாஸை ட்ரோல் செய்து இருக்கிறேன் என்று பேசிக் கொண்டிருக்கிறார். ஆனால் நேற்று நிகழ்ச்சியை பார்த்த பிறகு தான் அடேங்கப்பா குப்பை நிகழ்ச்சிக்கு இவ்வளவு ஆர்வமாக அப்ளை செய்தது எப்படி என்ற கேள்வி தான் எழுகிறது.
ஏனென்றால் ஆடிஷனில் அவர் சொன்னது வேறு, நான் ஆரம்பத்தில் இருந்து பிக் பாஸ் பார்த்து இருக்கிறேன். எனக்கு இந்த நிகழ்ச்சி ரொம்ப பிடிக்கும். சில நேரங்களில் கலாய்த்து இருக்கிறேன் ஆனால் பிக் பாஸ் காமன் மேன் வருகிறது என்று தெரிந்ததும் உடனே அப்ளை பண்ணிட்டேன் என்று பேசி இருக்கிறார். உள்ளிருக்கும் போது பிக் பாஸ் ரொம்ப பிடிக்கும் என்று சொல்லி இருக்கிறார், வெளியே வந்து அது குப்பை நிகழ்ச்சி எனக்கு பிடிக்கவே பிடிக்காது என்று சொல்கிறார். இதில் எது உண்மையான பிரியாவர்ஷினி என்பது தான் ரசிகர்களுக்கு புரியவில்லை.
அடுத்ததாக நைட்டி விவகாரம் தான். நான் நைட்டி போட்டுக்கிட்டு தான் வருவேன் என்று ஏற்கனவே சொல்லி அனுமதி வாங்கிட்டு தான் வந்தேன் என்று பிரியா விர்ஷினி வெளியே பேட்டிகளில் சொல்லி வருகிறார். ஆனால் இப்போது வெளியாகி இருக்கும் ஆடியோவில் வேற மாதிரியான விஷயங்கள் தெரிகிறது. அதில் அவர் விஜய் டிவி பிரபலம் ஒருவரிடம் பேசுகிறார். அப்போது நான் நைட்டி போட்டுட்டு வரவா? என்று பிரியா கேட்க, அதற்கு அந்த நபர் அது உங்களுடைய விருப்பம் ஆனால் உள்ளே மாற்ற சொன்னால் மாற்றுவதற்கு ரெடியாக இருங்கள். அதற்காக வேற ஒரு டிரஸ்ஸையும் எடுத்துக் கொண்டு வாருங்கள் என்று சொல்லி இருக்கிறார். அவ்வளவுதான் அனுமதி வாங்கிய கதை எங்கே போனது என்று ரசிகர்கள் தேடிக் கொண்டிருக்கிறார்கள். இன்னொரு விஷயம் பிக் பாஸ் ஆடிஷனில் 3 நடுவர்களும் நைட்டியை ஆபாசமான உடை என்று சொல்லவே இல்லை. இவ்வளவு பெரிய பிளாட்பார்முக்கு நைட்டி போட்டுக் கொண்டு வந்ததற்கு காரணம் என்ன என்று கேள்வி கேட்டிருக்கிறார்கள். ஆனால் அதற்கு ஆரம்பத்தில் பிரியா வர்ஷினி சொன்ன பதிலும் சிம்பிள் தான். நான் வீட்டில் எப்படி இருப்பேன் என அப்படியே இங்கேயும் வந்திருக்கிறேன் இது காமன் மேனை பிரதிப்படுத்தும் உடை என்று சொல்லி இருக்கிறார். சரி அதுவே உங்கள் காரணம் என்றால் பிரச்சனை இல்லை ஆனால் பிறகு இதை சுற்றி நடந்த அலப்பறைகளும் வெளியே கொடுக்கப்பட்ட விளக்கங்களும் பார்த்தால் நைட்டி ஒரு உடையா? இந்த சீசனுக்கான மார்க்கெட்டிங் ஸ்டேடர்ஜியா? என்ற சந்தேகம் வராமல் இல்லை. அதிலும் ஓவியா ஒரு கேள்வி கேட்டது கொஞ்சம் சுவாரஸ்யமாக இருந்தது. நீங்கள் டீச்சராக இருந்திருக்கிறீர்கள் என்று சொல்கிறீர்களே மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் போது இப்படித்தான் போவீங்களா என்று கேட்டார். அதற்கு பிக் பாஸ் வீட்டிற்குள் பிரியா பேசும் போது அப்படி போக மாட்டேன் என்று சொல்லி இருக்கிறார். ஆனால் வெளியே வந்து பிறகு இவருடைய பேட்டிக்கு ஒரு நெட்டிசன் இதே கேள்வியை கேட்டு இருக்கிறார். அதற்கு பிரியா நான் ஸ்டூடண்டுக்கு பாடம் எடுக்க கூட நைட்டியில் போய் இருக்கிறேன் என்று பதில் சொல்லி இருக்கிறார். இதுவும் இப்போ விவாதத்தை கிளப்பி இருக்கிறது. அதுபோல ஆடிஷனில் மாயா, ஆரி, ஓவியா மூன்று பேரும் இவரிடம் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கும்போது நீங்க எல்லாம் பெரிய ஆளா என்பது போல இவர் நைட்டியை மடித்து கட்டிக் கொண்டு நின்று பதில் சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது தொகுப்பாளராக இருந்த ராஜு நடுவர்கள் உங்க கிட்ட பேசிட்டு இருக்காங்க ஒரு மரியாதைக்காகவாவது அந்த நைட்டியை கொஞ்சம் கீழே இழுத்து விடலாமே என்று கேட்க, அதற்கு பிரியா இதுல என்ன மரியாதை குறைஞ்சு போயிடுச்சு என்று சொல்லிட்டு பிறகு நைட்டியை அவிழ்த்து விட்டிருக்கிறார். காசுக்காக என்ன வேணாலும் பண்ணுவியானு கேட்டாரு! பிக் பாஸ் ஆடிஷனில் நடந்த சம்பவம்! போட்டியாளர் உருக்கம் பெத்த அம்மா இறந்து போன சமயத்தில் கூட இவங்க நைட்டியோட வந்து இப்படி ஒரு நிகழ்ச்சியில பிரச்சனை பண்ணுவாங்களா? என்று கேள்வி எழுப்புகிறார்கள். அதுபோல வெளியே வந்த பிறகும் என்கிட்ட ஆரி, ராஜு, மாயா 3 பேரும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இவர் பேட்டிகளில் போராட்டம் பண்ணிக் கொண்டிருக்கிறார். இவருக்கு பிக் பாஸ் கதவு மூடினாலும் சோசியல் மீடியாவில் நைட்டி அக்கா என்று பாப்புலர் கிடைத்து விட்டது. ஒரு சிலர் இவரை வாட்டர் மெலன் ஸ்டார் 2 என்று கலாய்த்து வருகிறார்கள்.நைட்டி அக்கா பிரியா வர்ஷினி
மாறுபட்ட கருத்துக்கள்
ஓவியா கேட்ட கேள்வி
ராஜு கேட்ட கேள்வி
ஏற்கனவே தெலுங்கிலும் இதே போல ஒரு போட்டியாளர் நைட்டியுடன் வந்து தனி கவனம் பெற்றார். அதேபோல இவரும் ட்ரை பண்ணி இப்போ பல்பு வாங்கி இருக்கிறார் என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள். இவர் பேசியதை பார்த்து முதலில் அவர் மீது அனுதாபம் வந்தது ஆனால் பிறகு அவர் தன்னுடைய அம்மா இறந்து போய்விட்டார். அவர் உடலை எரித்துக் கொண்டிருக்கும் சமயத்தில் எனக்கு பிக் பாஸ் ஆடிஷனுக்கு வாங்க என்று கால் பண்ணி கூப்பிட்டாங்க, நான் முதலில் வரலைன்னு சொன்னேன் பிறகு அவங்க எனக்கு ஓயாம போன் பண்ணி தொந்தரவு பண்ணிட்டே இருந்ததால தான் நான் வந்தேன் என்பது போல பேசி இருக்கிறார். இதை வைத்தும் சிலர் கலாய்த்து வருகிறார்கள்.புது பட்டம்