தேனிசை தென்றல் தேவா இனி இல்லையா? மருத்துவமனை வாசலிலேயே கதறி அழுத பாடகி அனுராதா

  • சென்னை: தமிழ் சினிமாவில் எத்தனையோ ஹிட் பாடல்களை கொடுத்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த இசையமைப்பாளர் தேவாவின் மறைவு செய்தி திரையுலகினரையும், ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. காலையில் திடீரென தேவா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருப்பதாக செய்தி வெளியான நிலையில், அவர் உயிரிழந்த செய்தி பலருக்கும் அதிர்ச்சியாக இருக்கிறது. இந்த சூழலில் பாடகி அனுராதா ஸ்ரீராம் தேவாவை அட்மிட் செய்திருந்த ஹாஸ்பிடலுக்கு வந்து தேவாவின் குடும்பத்தினரை சந்தித்து கதறி அழுத காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

    Advertisement

    தேவா இறந்து விட்டார் என்ற செய்தியை கேட்டதும் ஷூட்டிங்கில் இருந்த அனுராதா அங்கிருந்து பாதியிலேயே கிளம்பி ஹாஸ்பிடலுக்கு வந்திருக்கிறார். இன்றைய நிகழ்ச்சிக்காக ஹேர் ஸ்டைல் செய்து கொண்டிருக்கும் போது அவர் இந்த செய்தியை கேட்டதும் பாதியிலேயே ஓடி வந்திருக்கிறார். ஹாஸ்பிடல் வாசலில் தேவாவின் உறவினர்களை கட்டிப்பிடித்து இந்த செய்தியை நம்ப முடியலையே..! இது பொய்யாக இருந்து விட கூடாதா? என்று கதறி கொண்டு இருந்திருக்கிறார்.

    Advertisement

    கதறி அழுத பாடகி

    தனக்கு நெருக்கமான ஒருவரை இழந்த துக்கத்தில் இருப்பவர்களை பார்க்கும்போது என்ன சொல்வதென்று தெரியாமல் போய்விடும். அந்த வலியை வார்த்தைகளால் சொல்ல முடியாத தருணமாக தான் இந்த காட்சியும் இருக்கிறது. தேவா தமிழ் சினிமாவில் ஒரு இசையமைப்பாளர் மட்டுமல்ல பல பாடகர்களுக்கும், இசை கலைஞர்களுக்கும் மறக்க முடியாத இசை பயணத்தின் ஒரு பகுதியாக இருந்தவர்.

    தேவாவின் எவர்கிரீன் பாடல்கள்

    அண்ணாமலை, பாட்ஷா, ஆசை, காதல் கோட்டை என ரசிகர்களால் இன்றைக்கும் கொண்டாடப்படும் பல படங்களில் அவருக்கு உடைய இசை இருக்கிறது. கானா பாடல்களை பற்றி தொட்டி எங்கும் கொண்டு சேர்த்ததில் தேவாவிற்கு முக்கிய பங்கு உண்டு. அதனால் தான் தேவாவின் மறைவு செய்தி வெளியானதும் திரையுலகினர் பலரும் தங்களுடைய இரங்கல்களை உருக்கமாக பகிர்ந்து வருகின்றனர்.

    Advertisement
    பிக் பாஸில் இருந்து வெளியே வந்த காரணம் இதுதான்! இசையமைப்பாளர் தேவா முன்பு பிளாக் பாண்டி உருக்கம்

    ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம்

    அவருடன் பணியாற்றியவர்கள் மட்டுமல்லாமல், அவருடைய இசையை கேட்டு வளர்ந்த ரசிகர்களும் பழைய பாடல்களை நினைவு கூர்ந்து வருகின்றனர். தேவா இசையமைத்த பாடல்கள் ஒலிக்கும் போது அவருடைய முகமும் அந்த பாடல்களுடன் ரசிகர்களின் நினைவுகளும் மனதில் வந்து போகின்றன. ஒரு கலைஞரின் இழப்பு என்பது அவருடைய குடும்பத்தினருக்கு மட்டுமல்ல அவருடன் பயணித்தவர்களுக்கும், அவருடைய கலை மூலம் மகிழ்ந்தவர்களுக்கும் பெரிய இழப்புதான். அனுராதா ஸ்ரீராம் ஹாஸ்பிடல் வந்து தேவாவின் குடும்பத்தினருடன் துக்கத்தை பகிர்ந்து கொண்ட இந்த காட்சிகளும், தேவா மறைவு எத்தனை பேரை பாதித்திருக்கிறது என்பதை உணர்த்தும் தருணமாக இருக்கிறது.

    Advertisement
    ரஜினிக்கு

    English Summary

    Thenisai Thendral Deva: The news of Deva’s passing has left the film industry and his fans in deep sorrow. While reports had emerged earlier in the day that he had been suddenly admitted to a hospital, the news of his death has come as a shock to many. In the midst of this, a video of singer Anuradha Sriram arriving at the hospital—where Deva had been admitted—and breaking down in tears while meeting his family has gone viral online.