சென்னை: 2011-ல் வெளியான ஏழாம் அறிவு படத்தை இப்போது பார்த்தாலும், அதில் சூர்யாவுக்கு வில்லனாக வந்த டாங் லீ கேரக்டரை அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது. அந்தப் படத்தில் சூர்யாவுக்கு இணையாக சண்டை போட்டு, தனது பார்வையாலேயே மிரட்டிய அந்த நடிகரின் தற்போதைய புகைப்படங்கள்தான் இப்போது இணையத்தில் கவனம் ஈர்த்திருக்கின்றன. அப்போது இருந்த தோற்றத்தையும் இப்போது இருக்கும் தோற்றத்தையும் ஒப்பிட்டுப் பார்த்த ரசிகர்கள், "அட, இவரா அது?" என்று ஆச்சரியப்பட்டு வருகிறார்கள்.
ஏழாம் அறிவில் மிரட்டிய நடிகர்
அவர் பெயர் ஜானி ட்ரி நுயென் (Johnny Tri Nguyen). வியட்நாமிய வம்சாவளியைச் சேர்ந்த இவர் நடிகர் மட்டுமல்ல, தற்காப்புக் கலைகளிலும் திறமையானவர். ஹாலிவுட் படங்களிலும் சண்டைக் கலைஞராகப் பணியாற்றியிருக்கிறார். ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா, ஸ்ருதிஹாசன் நடித்த ஏழாம் அறிவு படம் 2011-ல் வெளியானது. இந்தப் படத்தில் சூர்யா போதிதர்மர் மற்றும் அவருடைய வழித்தோன்றலாக இரண்டு வேடங்களில் நடித்திருந்தார். இந்தியாவுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் சீனாவை சேர்ந்த வில்லனாக டாங் லீ கதாபாத்திரத்தில் ஜானி ட்ரி நுயென் நடித்திருந்தார்.
இந்தப் படத்தில் அவருடைய கதாபாத்திரம் சாதாரண வில்லன் மாதிரி இருக்காது. எதிராளியைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் திறன், வேகமான தாக்குதல்கள், சண்டை காட்சிகளில் அவருடைய உடல் மொழி என ஒவ்வொரு விஷயமும் ரசிகர்களை மிரள வைத்தது. சூர்யாவுக்கும் அவருக்கும் இடையே வரும் சண்டைக் காட்சிகளும் படத்தின் முக்கியமான அம்சமாக இருந்தன. அந்தக் காலத்தில் சூர்யாவின் தோற்றம், நோக்கு வர்ம கலை, போதிதர்மர் பற்றிய கதை என பல விஷயங்கள் பேசப்பட்டாலும், டாங் லீயாக வந்த இந்த நடிகரின் மிரட்டலான நடிப்பையும் ரசிகர்கள் மறக்கவில்லை. அதனால்தான் இப்போது அவருடைய புகைப்படங்கள் வெளியாகும்போது, பழைய பட காட்சிகளையும் சேர்த்து ரசிகர்கள் நினைவுபடுத்தி வருகிறார்கள். ஏழாம் அறிவு வெளியாகி கிட்டத்தட்ட 15 வருஷங்கள் ஆகிவிட்டன. அப்போது இளமையான தோற்றத்துடன், கட்டுமஸ்தான உடலமைப்பில் திரையில் வந்த ஜானி ட்ரி நுயென், இப்போது தாடியுடன் கொஞ்சம் முதிர்ச்சியான தோற்றத்தில் இருக்கிறார். வைரலாகும் புகைப்படங்களில் அவருடைய முகத்திலும் தோற்றத்திலும் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தைப் பார்த்துதான் ரசிகர்கள் ஆச்சரியப்படுகிறார்கள். ஆனால், தோற்றம் மாறியிருந்தாலும் அவருடைய தற்காப்புக் கலைப் பயிற்சியும் சினிமா மீதான ஆர்வமும் அப்படியே இருக்கிறது என்பதுதான் முக்கியம். ஏழாம் அறிவுக்கு பிறகு ஜானி ட்ரி நுயென் தொடர்ந்து தமிழ் படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், அவர் இந்திய சினிமாவில் அதிகமாக வரவில்லை. அதற்குப் பதிலாக வியட்நாம் திரையுலகிலும் தற்காப்பு கலைப் பயிற்சியிலும் கவனம் செலுத்தி வந்தார். நடிப்பிலிருந்து சில ஆண்டுகள் விலகியிருந்த அவர், தனது சொந்த நாட்டில் திரைப்படங்களில் சண்டைக் கலை தொடர்பான வேலைகளிலும் ஈடுபட்டு வந்திருக்கிறார். இப்போது மீண்டும் திரைப்படங்களில் கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறார். 2026-ல் வெளியாகத் தயாராகி வரும் வியட்நாமிய வரலாற்று படத்தில் ஹூ துவாங் குவான் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பல ஆண்டுகள் கழித்து பெரிய திரையில் மீண்டும் அவரைப் பார்க்கும் வாய்ப்பு ரசிகர்களுக்குக் கிடைத்திருக்கிறது. ஏழாம் அறிவில் டாங் லீயாகப் பார்த்தவர்களுக்கு, இப்போது அவருடைய புகைப்படங்களைப் பார்க்கும்போது பழைய நினைவுகள் வருவது இயல்புதான். ஒரு படத்தில் நடித்த வில்லன் கதாபாத்திரம் இத்தனை ஆண்டுகள் கழித்தும் ரசிகர்களின் நினைவில் நிற்பது சாதாரண விஷயமில்லை.சூர்யா- ஜோதிகா மீண்டும் கல்யாணம் செய்தது இதற்கு தானா? அழகான காரணம்!
மாறிய தோற்றம்
இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்
சூர்யா- ஜோதிகாவை தொடர்ந்து சிம்ரன் செயல்.. விஜய்யை வம்பு இழுக்கும் நெட்டிசன்கள்! அடுத்த பஞ்சாயத்து