நடிகர் லிவிங்ஸ்டனா இது? என்ன ஆச்சு? எப்படி இருந்தவர்.. ஆளே மாறிட்டாரே? ஷாக்கான ரசிகர்கள்


  • சென்னை: ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் லிவிங்ஸ்டனை பார்த்தாலே சிரிப்பு தானாக வந்து விடும். அவர் ஒரு இயக்குனராக பிரபலம் ஆகி இருந்தாலும் அதைவிட ஹீரோவாகவும், வில்லனாகவும், காமெடி கேரக்டரிலும் தனக்கென ஒரு ஸ்டைல் வைத்திருந்தார்.

    Advertisement

    குறிப்பாக வடிவேலுவுடன் சுந்தர புருஷன் படத்தில் நடித்த கொடுத்த காசுக்கு மேல கூவுறான்டா என்ற காமெடி காட்சிகள் இப்போது மீம்ஸ்களாக சோசியல் மீடியாவில் வைரலாகி கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் அவருடைய முகத்தை பார்த்து கிண்டல் செய்தவர்கள் எல்லாம் படம் ஜெயித்ததும் அவரை அடுத்தடுத்த படங்களுக்கு அழைக்க தொடங்கிவிட்டனர்.

    Advertisement

    நடிகர் லிவிங்ஸ்டன் தற்போதைய நிலை

    அப்படிப்பட்ட நடிகர் லிவிங்ஸ்டனின் தற்போதைய போட்டோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதை பார்த்த ரசிகர்கள் பலரும் எப்படி இருந்த மனுஷன் இப்படி மாறிட்டாரே? முதலில் பார்த்ததும் லிவிங்ஸ்டனை அடையாளமே தெரியலையே? என்றெல்லாம் கமெண்ட்ஸ் கொடுத்து வருகிறார்கள். அந்த புகைப்படத்தில் வெள்ளை சட்டை அணிந்து உடல் மெலிந்து வயதான தோற்றத்தில் இருக்கிறார். இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்களுக்கு இது ஆச்சரியத்தை கொடுத்து இருக்கிறது.

    வயது முதிர்வு என்பது எல்லோருக்கும் வரும் இயற்கை தான். ஆனால் நமக்கு பிடித்த அல்லது நாம் பார்த்து வியந்தவர்கள் வயது முதிர்ந்து ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியது நமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும். அதே போலத்தான் இப்போது லிவிங்ஸ்டன் விஷயத்திலும் நடந்திருக்கிறது.

    Advertisement

    நடிகர் லிவிங்ஸ்டன் யார்

    லிவிங்ஸ்டனின் சொந்தப் பெயர் பிலிப் லிவிங்ஸ்டன் ஜோன்ஸ். நடிகராக மட்டுமே பலருக்கும் தெரிந்த லிவிங்ஸ்டனுக்கு இன்னொரு முகம் இருக்கிறது. அவர் திரைக்கதை மற்றும் கதை எழுத்தாளரும் கூட. கன்னி ராசி, காக்கிச்சட்டை உள்ளிட்ட படங்களில் அவர்தான் எழுத்து வேலைகளை பார்த்து வந்ததாம்.

    ஆரம்ப காலத்தில் சினிமாவில் கிடைத்த கேரக்டரில் நடித்துக் கொண்டு இருந்தாலும் சுந்தர புருஷன் படம் லிவிங்ஸ்டன் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு படம். அதை தொடர்ந்து சொல்லாமலே, விரலுக்கேத்த வீக்கம், என் புருஷன் குழந்தை மாதிரி, எங்களுக்கும் காலம் வரும் என்று முக்கிய கேரக்டர்களில் நடித்து வந்தார். 180 க்கும் மேற்பட்ட சினிமாக்களில் நடித்திருந்தாலும் அவரை இன்றைய தலைமுறையிருக்கும் கொண்டு சேர்த்தது காமெடி கேரக்டர் தான்.

    Advertisement

    லேட்டஸ்ட் போட்டோ

    குறிப்பாக எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தில் அவர் ஒரு சின்ன கேரக்டரில் தான் வந்திருப்பார். ஆனாலும் அந்த கேரக்டர்கள் கூட அவருக்கு பெரிய அளவில் பெயர் வாங்கி கொடுத்தது. சமீபத்தில் சீரியல்களிலும் களம் இறங்கி இருக்கிறார். சன் டிவியில் ஒளிபரப்பான கண்ணான கண்ணே, ஜீ தமிழில் அமுதாவும் அன்னலட்சுமியும் உட்பட பல சீரியல்களில் நடித்திருக்கிறார்.

    கலாச்சாரத்திற்கு எதிரானது! இதனால்தான் விலகல்.. டாப் சீரியலில் இருந்து விலகிய லிவிங்ஸ்டன் மகள் பதிவு

    அதுபோல லிவிங்ஸ்டனுக்கு ஜெஸ்ஸி என்பவருடன் கடந்த 1997 ஆம் ஆண்டு திருமணம் முடிந்தது. இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். அவரில் மூத்த மகள் ஜோவிதா லிவிங்ஸ்டன் சின்னத்திரை ரசிகர்களுக்கு நன்றாகவே தெரிந்தவர்தான். சன் டிவி ஒளிபரப்பான பூவே உனக்காக சீரியல் மூலம் கவனம் பெற தொடங்கியவர். அதற்கு பிறகு அருவி, மௌனம் பேசியது உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்திருந்தார்.

    Advertisement

    Suman: அஜித் எனக்கு அண்ணன் தான்! வரலாறு ஷூட்டிங்கில் நடந்த விஷயம்.. நெகிழ்ந்த நடிகர் சுமன்
    இந்த நிலையில் தான் லிவிங்ஸ்டனின் தற்போதைய போட்டோவை பார்த்ததும் ரசிகர்கள் அவருடைய பழைய படங்கள் மற்றும் காமெடி காட்சிகளை பற்றி பேசி வருகிறார்கள். எது எப்படியோ முகத்தில் வயது தெரிந்தாலும் லிவிங்ஸ்டன் நடித்த காமெடி காட்சிகளுக்கு மட்டும் இன்னும் வயசாகவில்லை. இன்றைக்கும் ஒரு மீம் போட்டால்கூட லிவிங்ஸ்டனின் ரியாக்சன் அப்படியே செட் ஆகிறது.

    English Summary

    Livingston: Veteran Tamil actor Livingston’s latest photo has caught the attention of fans on social media. His slimmer and visibly aged appearance surprised many, prompting fans to revisit his memorable movies and evergreen comedy scenes.