சென்னை: ஒரு காலத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக வந்து ரசிகர்களை கட்டிப்போட்டவர் நக்மா. ரஜினிகாந்த் உடன் பாட்ஷா, பிரபுதேவா உடன் காதலன், கார்த்திக், சரத்குமார் என அந்த காலத்து முன்னனி நடிகர்களுடன் அடுத்தடுத்த படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். அப்போது திரையில் பார்த்த நக்மாவின் புகைப்படத்தை இப்போது எடுத்து பார்த்தால் நக்மாவா இது என்று கேட்கும் அளவிற்கு காலம் அவரை இப்போது மாற்றி இருக்கிறது.
அந்த மாற்றம்தான் இப்போது மீண்டும் இணையத்தில் அவரை பற்றி பேச வைத்திருக்கிறது. தெலுங்கு நிகழ்ச்சி ஒன்றில் நக்மா மைக்கை பிடித்து பேசிய வீடியோ சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. பச்சை நிற உடையில் மிகவும் இயல்பாக நிகழ்ச்சியில் அவர் பேசிக் கொண்டிருப்பதை பார்த்ததும் ரசிகர்கள் டக்கென அடையாளமே தெரியவில்லை, இது நக்மாவா என்று பலருக்கும் குழப்பங்கள் ஏற்படுத்தி இருக்கிறது. ஒருவேளை ஏஐ வீடியோவா? என்று கூட சிலர் இதை செக் பண்ணி பார்த்திருக்கிறார்கள். கடைசியில் அது உண்மையில் நக்மா பேசிய வீடியோ தான்.
நக்மாவின் மாற்றம்
உடல் எடை கூடி ஆளே அடையாளம் தெரியாத மாதிரி இருக்கிறார். நக்மாவின் சினிமா பயணம் கொஞ்சம் வித்தியாசமானது. 1990களில் சல்மான் கானுக்கு ஜோடியாக Baaghi படத்தின் மூலம் இந்தி சினிமாவில் அறிமுகமானார். அந்த படம் வெற்றி பெற்றதும் தென் இந்திய சினிமாவை நோக்கி அவரது பயணம் திரும்பியது. குறிப்பாக தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.
ரீல்ஸ்ஸால் வந்த வினை.. பாகுபலி நடிகையிடம் 3 கோடி நஷ்ட ஈடு கேட்ட விமான நிறுவனம்! பின்னணி இதுதானா?
தமிழில் நக்மாவை ரசிகர்களுக்கு மறக்க முடியாத அளவிற்கு பிரபலம் ஆக்கிய படங்களில் காதலன், பாட்ஷா, மேட்டுக்குடி போன்ற பல படங்கள் இருக்கின்றது. காதலன் படத்தில் பிரபுதேவா உடன் அவர் போட்ட ஆட்டம், பாட்ஷா படத்தில் ரஜினிகாந்த் உடன் நடித்தது என அந்த காலத்து ரசிகர்களுக்கு நக்மா என்ற ஒரு பெயர் தனி கிரேஸ் ஆகவே இருந்தது. அது மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம், போஜ்புரி உள்ளிட்ட பலமொழி படங்களிலும் நடித்திருக்கிறார்.
ஆனால் சினிமாவில் இருந்து திடீரென நக்மா எங்கே போனார் கேள்வி சமீபத்தில் அவரைப் பற்றி எழுந்து வருகிறது. ஒரு பக்கம் சினிமாவில் நல்ல மார்க்கெட் இருந்து கொண்டிருக்கும்போது இன்னொரு பக்கம் அரசியல் மீது ஆர்வம் ஏற்பட்டது. 2004 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். ஆரம்பத்தில் சினிமா பணிகளையும் அரசியல் பணிகளையும் சேர்த்து பார்த்து கொண்டிருந்தார். பிறகு அரசியலில் முழு கவனத்தையும் செலுத்த ஆரம்பித்தார். 2014 ஆம் ஆண்டு உத்தர பிரதேசத்தில் மீரட் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக மக்களவை தேர்தலிலும் போட்டியிட்டார். அதற்குப் பிறகு அகில இந்திய மகளிர் காங்கிரஸில் முக்கிய பொறுப்புகளிலும் இருந்தார். பெண்கள் தொடர்பான பிரச்சனைகள் சமூக விவாகரங்கள் என அரசியலில் களத்தில் தொடர்ந்து இருந்து வந்தார். அதனாலேயே சினிமாவை விட்டு விலகி விட்டார் என்றே சொல்லலாம். நயன்தாரா ரூட்டில் தனுஷ் பட நடிகை நிவேதிதா சதீஷ்.. வைரலாகும் எங்கேஜ்மென்ட்.. மாப்பிள்ளை யார் தெரியுமா?நடிகை நக்மாவின் சினிமா பயணம்
அரசியல் பயணம்
30 வருடங்களுக்கு முன்பு திரையில் கதாநாயகியாக ஓடிக்கொண்டிருந்த நடிகை இன்று அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியிருப்பது ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறி இருக்கிறது. உடனே அவரைப் பற்றிய பழைய நினைவுகளை எல்லாம் ரசிகர்கள் கமெண்ட்களில் கொட்டுகிறார்கள்.