ஆனந்தம் சீரியல் AC துரையா இது? எப்படி இருந்த மனுஷன்.. உருக்கமான பேட்டி

  • சென்னை: சீரியலில் ஒரு நடிகர் நடிக்கும் கேரக்டர் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆகிவிட்டார் அந்த கேரக்டரை சொல்லியே அவரை அடைக்கல படுத்துபவர்கள் ஏராளமானோர். அதுவும் ஒரு சீரியல் பல வருஷங்கள் ஓடிவிட்டால் அந்த நடிகருடைய கதாபாத்திரமே அவருக்கு அடையாளம் ஆகிவிடும். அப்படிப்பட்ட ஒரு நடிகர் தான் சாக்ஷி சிவா. அவர் ஆனந்தம் சீரியலில் AC துரையாக நடித்து பிரபலமடைந்திருந்தார். இப்போது அவர் கொடுத்த பேட்டி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

    Advertisement

    குறிப்பாக அவர் சொன்ன ஒரு விஷயம் ரொம்பவே எதார்த்தமாக இருக்கிறது. நான் சீரியல்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த காலத்தில் வெளியே போனால் மக்கள் என்னை சுற்றி நின்று போட்டோ எடுத்துக் கொள்வார்கள். சில நேரங்களில் க்யூவில் நின்று கூட போட்டோ எடுத்திருக்கிறார்கள். அந்த அளவிற்கு ரசிகர்கள் அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையை பார்த்திருக்கிறேன். ஆனால் இப்போது நான் வெளியே போனால் யாருமே என்னை கண்டு கொள்வதில்லை. நான் யார் என்று பலருக்கு தெரிவதில்லை. இந்த சூழ்நிலையையும் நான் பார்த்து விட்டேன். ஆனால் எனக்கு எல்லா சூழ்நிலையிலும் ஒன்றுதான் என்று சொல்லி இருக்கிறார்.

    Advertisement

    ஆனந்தம் சீரியல் நடிகர்

    சாக்ஷி சிவா என்ற பெயரை இன்றைய தலைமுறையினரிடம் சொன்னால் சிலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் ஆனந்தம் சீரியலில் ஏசி துரை என்றால் 90ஸ் காலத்தில் சீரியல் பார்த்த பலருக்கும் அந்த முகம் இன்னும் நினைவில் இருக்கும். 2005 முதல் 2009 வரை ஒளிபரப்பான ஆனந்தம் சீரியலில் ஏசி துரை கேரக்டரில் நடித்த சாக்ஷி சிவா அந்த கதாபாத்திரம் மூலம் பெரிய அளவில் ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றார்.

    ரசிகர்களின் அன்பு

    அப்போது அவருடைய காட்சிகளுக்காகவே சீரியலை பார்க்கும் ரசிகர்கள் இருந்தார். அவருடைய எபிசோடு எப்போது வரும் என்று பலர் லெட்டரில் சேனல் தரப்பினருக்கு எழுதியிருக்கிறார்களாம். அதிலும் அந்த காலத்தில் அவருடைய பெயர் பலருக்கு தெரியாது. அவருடைய நிஜ பேயரே ஏசி துரை என்று நினைத்திருக்கிறார்கள். அந்த சீரியலில் அவர் போலீசாக நடித்ததால் அவர் நிஜத்திலும் போலீஷ் என்று கூட பலர் நினைத்து இருந்தார்கள்.

    Advertisement

    நடித்த சீரியல்கள்

    ஆனந்தம் சீரியலுக்கு பிறகு பல சீரியல்களில் நடித்திருந்தார். அதிலும் சபதம், ஒரு பெண்ணின் கதை, வாழ்ந்து காட்டுகிறோம், கோகிலா எங்கே போகிறாய்?, ஜனனி, நம்பிக்கை, கனா காணும் காலங்கள், கஸ்தூரி, சந்திரலேகா, மகாபாரதம், செல்லமே, புதுப்புது அர்த்தங்கள், கண்ணான கண்ணே, சீதாராமன் என பல தமிழ், தெலுங்கு சீரியல்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக விஜய் டிவியில் கனா காணும் காலங்கள் சீரியலிலும் நடித்திருக்கிறார். அதுபோல மகாபாரதம், வம்சம், அழகிய தமிழ் மகள், சந்திரலேகா என்று சின்னத்திரையில் பிஸியாக இருந்தவர்.

    அடையாளம் கொடுத்த கேரக்டர்

    ஆனால் இப்போது அவருக்கும் வயதாகி விட்டது உருவத்திலும் மாற்றம் வந்திருக்கிறது. ஒரு சிலர் மட்டும் அவரை அடையாளம் கண்டு நீங்க ஏசி துரையா என்று இப்போதும் ஆனந்தம் சீரியல் அனுபவத்தை நினைவு படுத்தி கேட்பது ஆச்சரியமாக இருக்கிறது என்று கூறி இருக்கிறார். அவர் ஹீரோவாக மட்டுமல்லாமல் ஒவ்வொரு சீரியலிலும் வெவ்வேறு விதமாக நடித்திருக்கிறார். ஆனால் ஏசி துரை கேரக்டர் தான் இவருக்கு இப்போதும் அடையாளம் கொடுக்கிறது என்று அவரே அந்த பேட்டியில் சிரித்தபடியே சொல்லி இருக்கிறார்.

    English Summary

    Sakshi Siva: When an actor portrays a character in a TV serial that becomes popular with the audience, many people come to identify the actor primarily by that role. This is especially true when a serial runs for several years, as the character effectively becomes the actor's identity. Sakshi Siva is one such actor; he gained fame for his portrayal of 'AC Durai' in the serial *Anandham*. A recent interview he gave is now going viral on the internet.