சென்னை : பிக் பாஸ் வீட்டிற்கு போட்டியாளர்கள் 100 நாட்களுக்கு மேலாக தங்கி இருந்து டாஸ்க், சண்டை, காதல், அழுகை என போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் வாரம் இரண்டு நாட்கள் மட்டும் வந்து வீட்டையே ஒரு ரவுண்டு கட்டும் தொகுப்பாளர்களின் சம்பளத்தை கேட்டால் நமக்கு தான் தலை சுற்றுகிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே போட்டியாளர்கள் மட்டுமல்ல அந்தந்த மொழிகளில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ஹீரோக்களுக்கும் தனி மாஸ் இருக்கிறது. அதற்கு ஏற்ற மாதிரி அவர்களுக்கு சம்பளமும் பல கோடிகளில் இருப்பதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் இவை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட சம்பள விபரங்கள் கிடையாது. பல்வேறு ஊடகங்களில் வெளியான தகவல்களின் அடிப்படையிலான தொகுப்பு தான்.
கமல்ஹாசன் சம்பளம்
முதல் 7 சீசன்களையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். அதில் ஏழாவது சீசனுக்காக அவருக்கு சுமார் 130 கோடி சம்பளம் வழங்கப்பட்டதாக தகவல் வெளியானது. அதாவது வீட்டுக்குள்ள யார் என்ன பண்ணாலும் பரவாயில்ல சம்பளம் மட்டும் வேற லெவல் என்ற கணக்கு தான்.
கமலுக்கு பிறகு தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியின் கோஸ்ட் சீட்டை பிடித்தவர் விஜய் சேதுபதி. சீசன் 8-ல் அவருடைய சம்பளம் சுமார் 60 கோடி என்று தகவல் வெளியான நிலையில் அடுத்தடுத்த சீசன்களில் அது உயர்ந்து 75 முதல் 80 கோடி சென்றிருக்கலாம் என சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது வார இறுதிக்கு மட்டும் 3 முதல் 4 கோடி வரை சம்பளம் என்று கூறப்படுகிறது. தெலுங்கு பிக்பாஸ் என்றாலே நாகார்ஜுனா தான் நினைவுக்கு வருவார். ஆரம்பத்தில் சுமார் 10 கோடி அளவில் இருந்ததாக கூறப்படும் அவரது சம்பளம் படிப்படியாக உயர்ந்து 30 முதல் 35 கோடி வரை சென்றதாக கூறப்படுகிறது. மலையாளத்தில் முதல் சீசன்லிருந்தே தொகுப்பாளராக இருக்கும் மோகன்லாலுக்கு ஒரு சீசனுக்கு சுமார் 30 கோடி வரை சம்பளம் கிடைப்பதாக தகவல். அதுவும் நிகழ்ச்சிக்காக அவர் சுமார் 20 நாட்கள் சூட்டிங் செய்வார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. கன்னட பிக் பாஸின் முகமாக பல ஆண்டுகளாக இருப்பவர் கிச்சா சுதீப். அவருக்கு ஒரு சீசனுக்கு சுமார் 20 கோடி என்றும் வார இறுதி எபிசோட் சுமார் 2 கோடி என்றும் கூறப்படுகிறது. இப்போது முக்கியமானவர் சல்மான்கான் ஹிந்தி பிக் பாஸ் என்றாலே சல்மான் கான் இல்லாமல் நினைக்க முடியாது. தற்போதைய தகவல் படி ஒரு சீசனுக்கு சுமார் 200 கோடி வரை அவர் சம்பாதிப்பதாகவும் ஒரு வார இறுதிக்கு 15 கோடி அல்லது அதற்கு மேல் பெறுவதாகவோ செய்திகள் வெளியாகி உள்ளது. மொத்தத்தில் பார்த்தால் பிக் பாஸ் என்பது போட்டியாளர்களுக்கு ஒரு ரியாலிட்டி ஆனால் முன்னணி ஹோஸ்ட்களுக்கு மட்டும் கோடிகளில் நடக்கும் வார இறுதி வேலை.விஜய் சேதுபதி சம்பளம்
தெலுங்கு பிக்பாஸ் நாகர்ஜுனா
மலையாள பிக் பாஸ் மோகன்லால்
கன்னட பிக் பாஸ் கிச்சா சுதீப்
இந்தி பிக் பாஸ் சல்மான் கான்