நமீதாவா இது? திரிஷாக்கு போட்டியா..? கேப்ஷனை கவனிச்சீங்களா? மாஸ் டிரான்ஸ்பர்மேஷன்

  • சென்னை: ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் கிளாமர் குயின் என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நடிகை நமீதா திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து சற்று விலகியே இருந்தார். ஆனால் இப்போது மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கி இருக்கிறார். அவருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்த பிறகு உடல் எடை கூடி இருந்த நிலையில் இப்போது மீண்டும் பழைய லெவலுக்கு வந்திருக்கிறார். அதாவது அவர் ஜிம் ஒர்க் அவுட் செய்த வீடியோவை பகிர்ந்து அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறார்.

    Advertisement

    நமீதா வெளியிட்ட பதிவில், "உங்கள் மனம் நம்புவதை உங்கள் உடல் பின்பற்றும்" என்ற கேப்ஷனை கொடுத்திருக்கிறார். இது வெறும் உடல் எடை குறைத்த வீடியோ இல்ல மன உறுதியுடன் தொடங்கினால் மாற்றம் நிச்சயம் என்று சொல்லும் ஒரு மேஜிக் என்று ரசிகர்கள் சொல்கிறார்கள்.

    Advertisement

    நமீதாவின் குடும்பம்

    இதை பார்க்கும் நெட்டிசன்கள் இவங்களுக்கு மட்டும் வயசே ஆகாதா? இரண்டு குழந்தைகள் பிறந்த பிறகு எப்படி மாறி இருந்தார்... இவரே இப்போ இப்படி மாறிவிட்டாரே? நானும் இனி ஜிம்முக்கு போக போறேன் என்று வழக்கம் போல நியூ இயர் ரிசொல்யூஷன் எல்லாம் இப்போ கமெண்ட்களில் கொட்டுகிறார்கள். இன்னும் ஒரு சிலருக்கு இவரும் திரிஷா போல மாறிவிட்டாரா? திரிஷாவுக்கு தான் நாற்பது வயசு கடந்து விட்டாலும் வயசே ஆகாத மாதிரி இப்படியே இருக்காங்கண்ணா இப்ப நம்ம நமீதாவும் இப்படி மாறிட்டாங்களே என்று கூட சிலர் திரிஷாவுடன் கம்பேர் செய்து இருக்கின்றனர்.

    Advertisement

    நமீதாவின் ஆரம்ப காலம்

    குஜராத்தை சேர்ந்த நமீதா மாடலின் உலகில் இருந்து சினிமாவுக்கு வந்தவர். தமிழில் விஜயகாந்த் உடன் நடித்த எங்கள் அண்ணா படம் அவருக்கு பெரிய அளவில் அறிமுகத்தை கொடுத்தது. அதற்குப் பிறகு ஏய், சாணக்கியா, பம்பரக் கண்ணாலே, இங்கிலீஷ்காரன், நான் அவன் இல்லை, பில்லா, அழகான பொண்ணுதான் உள்ளிட்ட பல படங்களில் முன்னணி நடிகையாக நடித்திருந்தார்.

    தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட பழமொழிகளிலும் நடித்திருந்தார். கடந்த 2017 ஆம் ஆண்டு தொழில் அதிபர் வீரேந்திர சௌவுத்ரியை திருமணம் செய்து கொண்ட நமிதாவிற்கு 2020ல் இரட்டை ஆண் குழந்தைகளுக்கும் பிறந்தது. குழந்தைகள் பிறந்த பிறகு தன்னுடைய குடும்பத்திற்காகவே நேரத்தை ஒதுக்கிய நமீதா பெரும்பாலும் சினிமா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் தவிர்த்தார்.

    Advertisement

    குஷ்பு மகள் கல்யாணத்தில் கலக்கிய திரிஷா.. பக்கத்தில்
    ஆனால் சமீப காலமாக மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கி இருக்கிறார் பொது நிகழ்ச்சிகளிலும் வர தொடங்கி இருக்கிறார். அதே நேரத்தில் தன்னை தானே கவனித்துக் கொள்வதிலும் ஆர்வத்தை காட்டி வருகிறார். சினிமாவை தாண்டி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நமீதா பின்னர் அரசியல் மற்றும் பொது நிகழ்ச்சிகளிலும் கவனத்தை திருப்பினார்.

    ரசிகர்கள் கருத்து

    இந்த நிலையில் தான் இவர் இப்போது வெளியிட்ட போட்டோவை பார்த்து ரசிகர்கள் இந்த மாற்றம் வெறும் பிட்னஸ் அப்டேட்டா? இல்ல மீண்டும் சினிமாவில் என்ட்ரிக்கான ரிகர்சலா? என்ற கேள்விகளும் சோசியல் மீடியாவில் பேசப்பட்டு வருகிறது. "கிளாமர் குயின்" என்ற பழைய அடையாளத்தை தாண்டி "பிட்னஸ் ஐகான் நமீதா" என்ற பட்டத்தை கொடுங்கப்பா என்று நமீதாவின் ரசிகர்கள் ஹார்ட்டின் பறக்க விடுகிறார்கள்.

    English Summary

    Namitha: Once celebrated as the glamor queen of Tamil cinema, actress Namitha stayed away from cinema after her marriage. But now he is starting to act in movies again. She gained weight after having twins and is now back to her old level. That means he has surprised everyone by sharing a video of his gym workout. In the post published by Namitha, she has given the caption, "Your body will follow what your mind believes". Fans say it's just a weight loss video home that says change is guaranteed if you start with determination.