பிக் பாஸில் 5 லட்சம் பணத்துடன் குமரன் வெளியேற காரணம் இதுதானா? நல்ல முடிவு.. செம சம்பவம்!

  • சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் இருந்து குமரன் 5 லட்சம் பணத்துடன் வெளியேறிவிட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அவர் வெளியேறியதற்கு காரணம் லட்சுமி பிரியா என்று சில தகவல்கள் வெளியாகி வந்தாலும் அவர் தன்னுடைய குடும்பத்திற்காகத்தான் நிகழ்ச்சியை விட்டு வெளியேறி இருக்க வாய்ப்பு இருக்கிறது. காரணம் நிகழ்ச்சியில் நடந்த சில சம்பவங்கள் தான்‌. அது பற்றி பார்க்கலாம்.

    Advertisement

    அதாவது பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பே குமரனுக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் நல்ல பிரபலம் கிடைத்துவிட்டது. அதற்கு பிறகு ஒரு சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் கூட இப்போ ஒரு திரைப்படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். அந்த திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. அதற்கு முன்பு தன்னுடைய நிஜ கேரக்டரை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த நிகழ்ச்சிக்கு வந்தேன் என்று குமரன் ஏற்கனவே சொல்லி இருந்தார்.

    Advertisement

    பிக் பாஸில் இருந்து வெளியேறிய குமரன்

    அதுபோல தன்னுடைய அப்பாவின் நிலைமை பற்றியும் சொல்லி இருந்தார். அதாவது தான் நடிக்க வேண்டும் என்று அப்பாவிடம் ஆசையை சொன்னதும் அதற்காக வேலையை நீ பாரு. நான் உனக்காக உழைக்கிறேன் என்று கஷ்டப்பட்டு உழைத்துக் கொண்டிருந்தார். ஆனால் இப்போ நான் ஹீரோவாக மாறிவிட்டேன் என்று அப்பாவிடம் சொன்னால் அடுத்த நிமிடமே அதை மறந்து விடுகிறார். அப்பாவுக்கு இப்ப மறதி ஞாபகம் வந்துவிட்டது. எந்த விஷயம் சொன்னாலும் அவரால் அதை நினைவில் வைத்துக் கொள்ள முடியவில்லை உடனே மறந்துவிடுகிறார்.

    Advertisement

    குமரன் மனநிலை

    அப்பாவிடம் நான் ஹீரோவாகி விட்டேன் என்று சொன்னதும் சந்தோஷப்படுகிறார். ஆனால் அடுத்த நிமிடம் மறந்து விட்டு நீ இன்னும் கஷ்டப்படுகிறாயா உனக்கு எப்ப தான் நல்லது நடக்கும் என்று வருத்தப்படுகிறார். அதனால் நான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெற்று அப்பாவுக்கு நிம்மதி கொடுக்க வேண்டும் என்று வந்திருக்கிறேன் என்று சொல்லியிருந்தார். அதேபோல இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சில நாட்களாகவே உள்ளிருக்கும் போட்டியாளர்கள் அதிகமாக பேசவில்லை என்று அவரை மிச்சர் என்றே சொல்லி வருகிறார்கள். இதனால் தனக்கு நெகட்டிவ் வந்திருக்குமோ எந்த பயம் அவருக்குள் இருக்கிறது.

    Advertisement

    வெளியே பாசிடிவ்

    சிலரைப் போல எப்போதும் வழவழவென குமரன் பேசிக் கொண்டிருக்கும் ஆள் கிடையாது. பேச வேண்டிய இடத்தில் பாய்ண்டாக பேசுகிறார். நேற்றைய எபிசோடில் கூட அப்படித்தான் நடந்தது. ஆரம்பத்திலிருந்து லட்சுமி பிரியா நீ மிக்சர், இந்த நிகழ்ச்சியில் இருக்க தகுதி இல்லை என்பது போல பேசிக் கொண்டிருந்தார். ஆனால் நேற்று அவர் அனல் பறக்கும் பேச்சில் வெடித்துவிட்டார். அதற்கான ப்ரோமோவும் வெளியாகி ரசிகர்களிடம் பாராட்டு வாங்கியது.

    ஏற்கனவே பிக் பாஸ் வீட்டிற்குள் தான் அவருக்கு போட்டியாளர்களிடம் பிரச்சனை இருக்கிறதே தவிர வெளியே நல்ல பெயர் தான் போய்க்கொண்டிருக்கிறது. அவர்தான் டைட்டில் வின்னராக வாய்ப்பிருக்கிறது என்று ரசிகர்கள் சொல்லி வருகிறார்கள். இந்த வாரம் அன் அபிஷியல் வோட்டிங் லிஸ்டில் கூட அவர்தான் முதல் இடத்தில் இருக்கிறார். இப்படி இருக்கும்போது வெளியே இருக்கும் சூழ்நிலை தெரியாமல் அவர் நம்ம பாசிட்டிவாக இருக்கும் போதே வெளியே போய் விட வேண்டும் என்று பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியே போய் இருக்க வாய்ப்பிருக்கிறது.

    Advertisement

    பணப்பெட்டி டாஸ்க்

    அவருடைய இந்த முடிவு நல்ல விஷயம் தான். காரணம் இப்போது குமரனுக்கு பாசிடிவ் சைடு தான் மக்கள் மத்தியில் இருக்கிறது. அப்படி இருக்கும் போது அவர் வெளியே வந்தால் அவருடைய படத்திற்கு அதிகமான விமர்சனங்கள் வர வாய்ப்பு கம்மி. ஆனால் இவர் நெகட்டிவ் பெயரோடு வெளியே வந்தால் அவர் இத்தனை நாட்களாக வாங்கி வைத்திருந்த பெயர் மாறிவிடும். அதனால் இப்போதைக்கு அவர் வெளியே வந்தது நல்லது தான்.

    ஆனால் இதே போல பணப்பெட்டி டாஸ்க் தெலுங்கிலும் வைக்கப்பட்டிருக்கிறது. அதில் 15 லட்சம் பணத்தை காமன் மேன் ஒருவர் எடுத்துக் கொண்டு வெளியே வந்திருக்கிறார். அதனால் இவர் இன்னும் சில நாட்கள் பொருத்து இருந்து பணத்தின் மதிப்பு அதிகரித்த பிறகு தூக்கிக் கொண்டு வந்திருந்தால் சரியாக இருந்திருக்கும்.

    Advertisement

    ரசிகர்கள் கருத்து

    ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் வெற்றி பெற்றவர்கள் பெரிதாக ஜெயிக்கவில்லை என்றாலும் இதுபோல பணப்பெட்டியை தூக்கிக்கொண்டு பாதியிலேயே வெளியேறிய கவின், கானா வினோத் போன்றவர்கள் அடுத்தடுத்து சினிமாவில் முன்னேறிக்கொட்டு தான் இருக்கிறார்கள். அந்த வரிசையில் நம்மளும் இணைந்து விடுவோம் என்று குமரன் நினைத்து விட்டார் போல. குமரன் பணப்பெட்டியை தூக்கி கொண்டு வந்தது சரி என்று நினைக்கிறீர்களா? அல்லது வீட்டிற்குள்ளே இருந்து டைட்டில் ஜெயித்திருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா பாஸ்? உங்க கருத்தை சொல்லிட்டு போங்க.

    English Summary

    Bigg Boss: Reports indicate that Kumaran has exited *Bigg Boss Tamil* Season 10 with a cash prize of ₹5 lakhs. While some rumors suggest Lakshmi Priya was the reason for his departure, it is likely he left for the sake of his family. Certain incidents that occurred during the show are the reason for this; let us take a look at them.