Bigg Boss: பிரசாந்த்தை பிக் பாஸ் மேடையில் இருந்து அனுப்ப காரணம் இதுதானா? வாயால் வந்த வினை! சேதுபதியின் ஆப்பு

  • சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 10 மேடையில் வைத்து சில போட்டியாளர்களை வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டார்கள். அதில் முதலில் அனுப்பப்பட்டது பிரசாந்த் ரங்கசாமி தான். இது பெரிய அளவில் பேசப்பட்டு வரும் நிலையில், இதற்கு முன்பு அவர் பேசிய ஒரு வீடியோ தான் அவருக்கு ஆப்பு வைத்து விட்டதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் மேடையில் விஜய் சேதுபதி அவருக்கு ஊம குத்தாக குத்தி அனுப்பி இருக்கிறார். அதையும் நோட் பண்ணின ரசிகர்கள் இப்போ அவரை ட்ரோல் செய்து வருகிறார்கள்.

    Advertisement

    யானைக்கும் அடி சறுக்கும் என்பது போல தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு என்றதும் சிலருடைய மனதில் சஞ்சலமே ஏற்பட்டு கொண்டு விடுகிறது. இதுவரைக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியை கழுவி ஊற்றிய ரவீந்தர் கடந்த சீசனில் பிக் பாஸ் வீட்டிற்குள் போய் அசிங்கப்பட்டு வந்தார். முதல் எவிக்ஷனே அவர்தான். அவர் உள்ளே போனால் எப்படி விளையாடுவார் என்று எதிர்பார்த்து இருந்த ரசிகர்களுக்கு இவ்வளவு தானா என்று சொல்வது போல அவருடைய இமேஜை முடித்து விட்டார்கள்.

    Advertisement

    பிக் பாஸ் 10 போட்டியாளர்

    அதேபோல இதற்கு முன்பு பிக்பாஸ் காமன்மேன் நிகழ்ச்சியில் போட்டியாளர்களை கழுவி ஊற்றிய பிரசாந்த் ரங்கசாமியையும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நீங்கதான் பெஸ்ட் பிளேயர் வாங்க என்று ஒரு மாயையை காட்டி மேடைவரை கூப்பிட்டு வைத்து அவரையும் அசிங்கப்படுத்தி அனுப்பி இருக்கிறார்கள். இதுதான் பேசப் பொருளாக மாறி இருக்கிறது. இதுவரைக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுபோன்ற ஒரு எவிக்ஷன் நடந்ததே இல்லை என்று சொல்வது போல தான் இந்த முறை மேடையில் வைத்தே 7 போட்டியாளர்களை வெளியே அனுப்பி இருக்கிறார்கள்.

    Advertisement

    இதற்கு முந்தைய சீசனில் சாச்சனாவை 24 மணி நேரத்தில் எவிஷன் வைத்தார்கள். அதுவே அப்போ பெரியதாக பேசப்பட்டது ஆனால் அடுத்த சில வாரத்தில் அவர் உள்ளே வந்தது வேற கதை ஆனால் இந்த சம்பவம் பேசப்பட்டதும் இதை இன்னும் கொஞ்சம் பட்டு டிங்கரிங் பார்த்து ஏழு பேரை வெளியே அனுப்பி இருக்கிறார்கள். அதுவும் கொஞ்சம் ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

    பிரசாந்த் ரங்கசாமி விமர்சனம்

    முதல் நாள் ஸ்டேஜிலேயே எவிக்சன் நடந்திருக்கிறது என்றுதான் நேற்று முன்தினம் தகவல்கள் வெளியானது. ஆனால் எதற்காக போட்டியாளர்கள் சிலரை மட்டும் வெளியே அனுப்பி இருக்கிறாங்க என்று ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. அது நேற்று ஓபனிங் மேடையில் தான் தெரிந்தது. இதற்கு முன்பு பிக் பாஸ் நிகழ்ச்சியில் காமன் மேன் கலந்து கொள்வதற்காக ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் ஆரம்பத்திலேயே பஸ் டாஸ்க் ஒன்று வைத்தார்கள். அது பெரிய அளவில் விமர்சனத்தை ஏற்படுத்தியது.

    Advertisement

    அப்போது திரைப்படத்திற்கு மட்டுமல்லாமல் இந்த நிகழ்ச்சிக்குமே பிரசாந்த் ரங்கசாமி கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார். இதெல்லாம் ஒரு நிகழ்ச்சின்னு எதற்காக நீங்க வர்றீங்க? உங்களுக்கு கொஞ்சம் கூட அறிவு கிடையாதா? விஜய் டிவி காரன் கூப்பிட்டான்னு உடனே நீங்களும் வந்துருவீங்களா? என்றெல்லாம் அந்த வீடியோவில் பிரசாந்த் ரங்கசாமி பேசியிருக்கிறார். அதனாலேயே சேனல் தரப்பில் அவரை முதலில் டிக் பண்ணி இருப்பார்கள் போல தெரிகிறது.

    விஜய் சேதுபதியின் ரியாக்ஷன்

    எங்களை திட்டுறீங்களா உங்களுக்கு ஒரு பரிசு தருகிறேன் என்று கூப்பிட்டு பிக் பாஸ் மேடையில் நிற்க வைத்து அவருடைய கனவுகளை எல்லாம் சொல்ல வைத்து விட்டு கடைசியில் அவருக்கு டாட்டா காட்டி அனுப்பி வைத்திருக்கிறார்கள். அதிலும் அவர் மேடையில் நிற்க்கும் போது நீங்க இந்த நிகழ்ச்சியை பற்றி ரிவிவ் பண்ணிருக்கீங்களா? என்று விஜய் சேதுபதி கேட்டது குசும்பு தான். அதற்கு உடனே பிரசாந்த் ரங்கசாமியும் பவ்யமாக இல்லை சார் பண்ணினது இல்லை என்று சொன்னாரு பாருங்க அப்போ பழைய வீடியோ எல்லாம் ரசிகர்கள் தொண்ட மாட்டாங்க அல்லது மறந்திருப்பாங்கன்னு நினைச்சுட்டாரு போல.

    Advertisement

    ஆனா நம்ம ரசிகர்கள் சும்மா இருப்பாங்களா? நேற்றில் இருந்து அவர் இதற்கு முன்பு பேசிய வீடியோவை வைத்து இதற்காகத்தான் பிக் பாஸ் டீம் உங்களை கூப்பிட்டு வச்சு அசிங்கப்படுத்தி இருக்காங்களா பாஸ்? என்று அவரை கலாய்த்து வருகிறார்கள்.

    English Summary

    Bigg Boss: Some contestants were evicted right on the Bigg Boss Tamil Season 10 stage, with Prashanth Rangasamy being the first to go. While this has become a major topic of discussion, it is rumored that a past video of his—in which he made certain remarks—led to his downfall. Meanwhile, Vijay Sethupathi delivered a subtle yet stinging dig at him on stage; fans noticed this and are now trolling him over it.