சென்னை: முதல்வர் விஜய்யை நடிகை ராஷ்மிகா மந்தனாவும், அவருடைய கணவர் விஜய் தேவரகொண்டாவும் நேரில் சந்தித்திருப்பது இப்போது சினிமா வட்டாரத்தில் கவனம் பெற்றிருக்கிறது. இந்தச் சந்திப்பு நடந்த நேரம்தான் அதற்குக் காரணம். இருவரும் சேர்ந்து நடித்திருக்கும் 'ரணபாலி' படம் அக்டோபர் 16-ம் தேதி வெளியாகவிருக்கிறது. இதற்காகப் புரமோஷன் வேலைகளில் பிஸியாக இருக்கும் இருவரும், சென்னையில் முதல்வர் விஜய்யையும் சந்தித்திருக்கிறார்கள்.
இந்தச் சந்திப்பு வெறும் நலம் விசாரிப்போடு முடிந்துவிட்டதா, அல்லது படத்தின் புரமோஷனுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா என்ற கேள்வி இப்போது எழுந்திருக்கிறது. ஏனென்றால், ரணபாலி வெளியாகும் அதே நேரத்தில் ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படமும் திரைக்கு வரவிருக்கிறது. 2 படங்களும் ரசிகர்களின் கவனத்தைப் பெறப்போகும் நிலையில், ராஷ்மிகா தம்பதி விஜய்யை சந்தித்திருப்பது பேசப்படத் தொடங்கியிருக்கிறது.
விஜய்யை சந்தித்த பிறகு
முதல்வர் விஜய்யை சந்தித்த பிறகு ராஷ்மிகாவும் விஜய் தேவரகொண்டாவும் அந்த சந்திப்பு பற்றிய படங்களைத் தங்களுடைய சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்திருக்கிறார்கள். ராஷ்மிகா, நீண்ட நாட்களுக்குப் பிறகு விஜய் சாரைச் சந்தித்ததாகவும், அவருடைய ரசிகையாக இருந்த காலத்திலிருந்து இன்று அவர் முதலமைச்சராக இருப்பதைப் பார்ப்பது வரை அவருடைய பயணம் வியப்பளிப்பதாகவும் பதிவிட்டிருந்தார்.
விஜய் தேவரகொண்டாவும் சந்திப்பு தனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததாகக் கூறியிருந்தார். நீண்ட நாளாக வேலைகளில் பிஸியாக இருந்தாலும் தங்களை அன்புடன் வரவேற்று, வாழ்க்கை, வேலை உள்ளிட்ட பல விஷயங்களைப் பற்றி விஜய் பேசியதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். ஒரே சந்திப்பிலேயே விஜய் தனக்குப் பிடித்தமானவராகிவிட்டார் என்றும் பதிவிட்டிருந்தார். இருவருமே சந்திப்பு பற்றி இவ்வளவு அன்பாகப் பதிவிட்டிருப்பதால், விஜய் மீது அவர்களுக்கு இருக்கும் மரியாதையை பாட்டி இருக்கிறார்கள். ஏற்கனவே விஜய் வெற்றி பெற்றதும் விஜய தேவரகொண்டா அவருக்கு வாழ்த்து தெரிவித்து சோசியல் மீடியாவில் பதிவுகளும் வெளியிட்டிருந்தார். அதே நேரத்தில், 'ரணபாலி' படத்தின் புரமோஷன் நேரத்தில் இந்தச் சந்திப்பு நடந்ததால், இதன் பின்னணியைப் பற்றியும் ரசிகர்கள் பேச ஆரம்பித்துவிட்டார்கள். விஜய் தேவரகொண்டா சமீபத்தில் தன்னுடைய படத்துக்கு எதிராக வேண்டுமென்றே நெகட்டிவ் கருத்துகள் பரப்பப்படுவதாகப் பேசியிருந்தார். இதனால் 'ரணபாலி' படத்தைச் சுற்றி ஏற்கெனவே விவாதம் இருந்தது. இப்போது தமிழ்நாடு முதல்வர் விஜய்யைச் சந்தித்திருப்பதால், அந்தப் படம் பற்றிய பேச்சு தமிழ்நாட்டிலும் அதிகரித்திருக்கிறது. இதற்காகத்தான் இந்தச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டதா என்று சிலர் கேட்கலாம். ஆனால், விஜய்யின் ரசிகர்களை 'ரணபாலி' பக்கம் திருப்ப வேண்டும் என்பதற்காகவே இந்த சந்திப்பு நடந்ததா என்ற கேள்விகளும் எழுந்து வருகிறது. ஆனால், இந்தச் சந்திப்பு படத்தின் விளம்பரத்துக்கு உதவுமா என்ற கேள்வி மட்டும் இருக்கிறது. விஜய்யின் ரசிகர்கள் அவரைப் பற்றிய செய்திகளை அதிகமாகக் கவனிப்பார்கள் என்பதால், அவரைச் சந்தித்தது தொடர்பான படங்கள் இணையத்தில் பரவுவது 'ரணபாலி' படத்தின் மீதும் கவனத்தைத் திருப்பலாம். அதே நேரத்தில், ஒரு படத்தைப் பார்க்கலாமா? வேண்டாமா? என்பதை ரசிகர்கள் முடிவு செய்வது அதன் கதை, டிரெய்லர், விமர்சனம் உள்ளிட்ட பல விஷயங்களைப் பொறுத்துத்தான் இருக்கும். ரஜினிகாந்தின் ஜெயிலர் முதல் பாகம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதால், இரண்டாம் பாகத்துக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்தச் சூழலில் ரணபாலி படமும் அதே காலகட்டத்தில் வெளியாகிறது. விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா இருவரும் இணைந்து நடித்திருப்பதால் தெலுங்கு ரசிகர்களிடமும் படத்துக்கு எதிர்பார்ப்பு இருக்கிறது.ஸ்டேட்டர்ஜி போட்டு, அடிச்சுக்கிட்டது யாரோ.. வின் பண்ணுனது வேறொருத்தர்! விஜய் சேதுபதி கலாய்! யாரை?
விஜய் ரசிகர்களின் ஆதரவு
பிக் பாஸ் வந்த டிடிஎஃப் வாசன்.. நண்பனை அசிங்கப்படுத்திய விஜய் சேதுபதி! இப்படி பேசியது சரியா?
ஜெயிலர் 2 உடன் மோதும் ரணபாலி