சென்னை: சில நடிகைகள் பல படங்களில் நடிக்க வேண்டும் என்று அவசியமே இல்லை. ஒரே ஒரு படத்தில் நடித்தாலும் ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்து விடுகிறார்கள். அப்படி ரசிகர்களின் மனதில் பதிந்தவர் தான் நடிகை சிந்து மேனன் சமுத்திரம் படத்தில் சரத்குமார் குடும்பத்தில் வந்த துர்காவாகவும் யூத் படத்தில் விஜய்யுடன் நடித்த அருணாவாகவும் பலருடைய மனதை கவர்ந்திருந்தார். சமீபத்தில் அவருடைய குடும்ப புகைப்படங்கள் வெளியாகி இவரா? அவர் என்று வியக்க வைத்திருக்கிறது.
சிந்து மேனனுக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அடையாளத்தை கொடுத்தது ஈரம் படம் தான். 2009 ஆம் ஆண்டு வெளியான ஈரம் படத்தில் ரம்யாவாக சிந்து மேனன் நடித்திருந்தார். அந்த படத்தில் மொத்த கதையும் அவருடைய கேரக்டரை சுற்றியே நகரும். குறிப்பாக சிந்து மேனனின் அமைதியான முகம், பயம், வலி என அதிக வசனங்கள் இல்லாமல் அவர் காட்டிய நடிப்பு ரசிகர்களிடம் பாராட்டை பெற்றது. அந்தப் படம் வெளியான சமயத்தில் காலேஜ் கிங் சைஸ் நோட்டில் கூட இவருடைய முகம் பல அட்டை படங்களில் இடம் பிடித்திருந்தது. அதை இளைஞர்கள் மட்டுமல்ல பெண்கள் கூட ஆசையோடு வாங்கி பயன்படுத்தி இருக்கிறார்கள்.
ஆனால் ஈரம் படத்திற்கு பிறகு தமிழில் சிந்து மேனனை பார்க்க முடியவில்லை. தமிழில் மட்டுமல்ல மொத்தமாகவே அவரது நடிப்பு பயணம் 2012 க்கு பிறகு குறைந்து விட்டது. கன்னடத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சிந்து மேனன் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளிலும் நடித்திருந்தார். ஆனால் தற்போது சிந்து பேமிலி போட்டோ ஒன்றை சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருக்கிறார். அதை பார்த்ததும் பலருக்கு முதலில் அடையாளமே தெரியவில்லை. பிறகு அவருடைய instagram profile-யில் பார்த்த பிறகுதான் இது சிந்து என்று ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பி வருகின்றனர். பலருக்கும் தெரியாத விஷயம் என்னவென்றால் சிந்து மேனன் ஹீரோயினியாக சினிமாவுக்கு வந்தவர் கிடையாது. பரதநாட்டியத்தில் பயிற்சி பெற்று அவர் சின்ன வயதிலேயே நடந்த டான்ஸ் போட்டியில் கலந்து கொண்டபோது தான் சினிமா வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. 1994ல் கன்னடத்தில் வெளியான ரேஷ்மி என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். அதற்கு பிறகு ஹீரோயினியாக வளர்ந்து தமிழில் சமுத்திரம், கடல் பூக்கள், யூத், ஈரம் போன்ற பல படங்களிலும் நடித்திருந்தார். அதுபோல மலையாளத்திலும் புலி ஜென்மம், ராஜமாணிக்கம், டிடெக்டிவ் உள்ளிட்ட ஒரு சில படங்களிலும் நடித்திருந்தார். இந்த நிலையில் தான் கடந்த 2010 ஆம் ஆண்டு பிரபு என்பவரை திருமணம் செய்து கொண்டார் இந்த தம்பதிக்கு ஒரு மகள் மற்றும் இரண்டு மகன்கள் இருக்கின்றனர். திருமணத்திற்கு பிறகு நடிப்பிலிருந்து விலகிய அவர் லண்டனில் குடும்பத்துடன் செட்டில் ஆகிவிட்டார். அதற்குப் பிறகு பெரிதாக சினிமா நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளவில்லை. ஆனால் சோசியல் மீடியாக்களில் எப்பவாவது புகைப்படங்கள் வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் அவருடைய குடும்ப போட்டோக்கள் வெளியிட்டு இருக்கிறார். அவருடைய சகோதரிகளுடன் எடுத்த புகைப்படங்கள் மற்றும் கணவர் மற்றும் குழந்தைகளுடன் எடுத்த புகைப்படங்கள் சிலவற்றை பகிர்ந்து இருக்கிறார். அதை பார்த்ததும் ரசிகர்கள் இவர்தான் ஈரம் படத்தில் நடித்தார் என்று சொன்னால் நம்ப முடியவில்லையே என்று கமெண்ட் கொடுத்து வருகின்றனர். பொதுவாக சிந்தும் மேனனுக்கு மட்டுமல்ல நமக்கும் ஒரு நேரத்தில் வயதாகும்போது முகத்தில் மாற்றம் வரும். அதிலும் பெண்களுக்கு குழந்தை பிறந்த பிறகு உடலிலும் மாற்றம் வரும். அதுதான் சிந்து மேனனுக்கு நடந்திருக்கிறது. ஆனால் அவரை ஆரம்பத்தில் பார்த்தபோது இருந்ததற்கும் இப்போது இருப்பதற்கும் வித்தியாசத்தை பார்த்ததும் தான் சிலர் புலம்பி வருகிறார்கள்.நடிகை சிந்துமேனன் ஆரம்ப காலம்
கவர்ச்சிக்கு நோ.. சினிமாவை விட்டு விலகிய நடிகை சுவலட்சுமி.. இப்போ எப்படி இருக்கிறார்? லீக்கான போட்டோஸ்
குழந்தை நட்சத்திரம்
கௌதம் மேனன் இயக்கத்தில் மம்முட்டியின் Dominic படம் எப்படி இருக்கு? 11 மாதம் கழித்து ஓடிடியில் ரிலீஸ்
நடிகை சிந்துமேனன் தற்போதைய புகைப்படம்
சிந்து மேனன் பேமிலி போட்டோ