ஜெயிலர் 2 எப்படி இருக்கு? படத்தில் இதுதான் பிளஸ்.. ப்ளூ சட்டை மாறன் ஓபன் ரிவ்யூ

  • சென்னை: பெரிய எதிர்பார்ப்புக்கு இடையே நேற்று செப்டம்பர் 15ஆம் தேதி வெளியான ஜெயிலர் 2 படம் தியேட்டரில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதே நேரத்தில் ப்ளூ சட்டை மாறன் இந்த படத்தை பாராட்டி ரிவ்யூ செய்து இருக்கிறார். இதுதான் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்திருக்கிறது. சும்மாவே ரஜினிகாந்தை "தலீவர்" என்று கலாய்த்து கொண்டிருக்கும் ப்ளூ சட்டை மாறனே இந்த படத்திற்கு பாசிட்டிவ் ரிவ்யூ கொடுத்திருக்கிறார்.

    Advertisement

    ப்ளூ சட்டை மாறன் ரிவ்யூ

    ப்ளூ சட்டை மாறன் பொதுவாக எந்த படத்தையுமே பாசிட்டிவாக பேசமாட்டார். ரிவியூ செய்யும் போது கூட இந்த படத்தை பார்க்க முடியல.. தலவலிக்குது, தாலிய அறுக்க வந்துட்டாங்க... என்று ஏதேதோ பேசி கொண்டிருப்பார். ஆனால் ஜெயிலர் 2 படத்தை அதிசயமாக பாராட்டி இருப்பது சோசியல் மீடியாவில் அதிக கவனம் பெற்று இருக்கிறது. அதாவது அவர் தன்னுடைய ரிவியூவில், படத்தின் முதல் பாதியை பொருத்தவரை எந்த இடத்திலும் தோய்வு இல்லாமல், விறுவிறுப்பாகவும் கலகலப்பாக நல்ல காமெடியாக போனது.

    Advertisement

    அந்த விறுவிறுப்புக்கு காரணம் என்னவென்றால் படத்தில் இருக்க வேண்டிய தொய்வு எல்லாமே முதல் பாகத்திலேயே போய்விட்டது. ஜெயலர் 2வில் நாம வாங்க வேண்டிய அடியெல்லாம் முதல் பாகத்திலேயே வாங்கி விட்டோம். முதல் பாகத்தில்தான் ஒவ்வொரு கேரக்டருக்கும் இன்றோ கொடுக்க வேண்டியதாக இருந்தது. அதனாலேயே படத்தை ரொம்ப சொதப்பி வைத்திருந்தாங்க. இந்த படத்துக்கு அதெல்லாம் தேவைப்படல. ஒவ்வொரு கேரக்டரையும் நேரடியாக கதைக்குள் இறங்க வைத்து விட்டார்கள்.

    படத்தின் பிளஸ்

    எனவே கதை விறுவிறுப்பாகவே போய்க் கொண்டிருந்தது. படத்தின் கதை விறுவிறுப்பாக போய்க்கொண்டு இருக்கும்போது அதை கலகலப்பாக மாற்றியது நமோ நாராயணா மற்றும் ரஜினிகாந்த் காம்பினேஷன் தான். நமோவின் கேரக்டரான மூர்த்தி இந்த படம் முழுக்க பேசும்படி இருந்தது. குறிப்பாக செஸ் விளையாடும் சீன் அல்டிமேட் காமெடி. இதில் இன்னொரு அதிசயம் என்னவென்றால் இந்த படத்தில் வந்த சின்ன சின்ன ஆர்டிஸ்ட்டுகள் கூட சூப்பராக ஸ்கோர் செய்திருந்தார்கள். ஆனால் நன்றாக ஸ்கோர் செய்ய வேண்டிய கேமியோ செய்த நடிகர்கள் ஏன் வந்தார்கள்? ஏன் போனார்கள்? என்று தெரியவில்லை.

    Advertisement

    கேமியோ ரோல்

    கிருத்திக் ரோஷன் கேமியோ தேவையில்லாதது தான். ஆனால் அவரையும் அவரிடம் இருக்கும் 4 பெண்களையும் வைத்து ஒரு சண்டை காட்சி இருக்கும் அது அருமையாக இருந்தது. எஸ்ஜே சூர்யாக்கு சூப்பராக இன்ரோடக்ஷன் இருந்தது. ஆனால் அதற்குப் பிறகு சொல்ற மாதிரி எதுவுமே இல்லை. ரஜினி சமீப காலமா நடித்த தோல்வி படங்கள் இருக்கிறது. ஆனால் இந்த படம் தான் உண்மையான வெற்றி படமாக இருக்க முடியும். இருந்தாலும் இதில் ஒரு பிரச்சனை இருக்கிறது.

    ஜெயிலர் 2ல் ரஜினியை தாண்டி கவனம் பெறும் மூர்த்தி! டாப் ஹீரோக்களை ஓவர்டேக் செய்த நமோ நாராயணா
    Advertisement

    விஜய் ரசிகர்கள் மீது தாக்கு

    அதாவது இந்த பட கதையை பார்க்க புரிய வேண்டும் என்றால் முதல் பாகத்தை பார்த்தால் தான் இந்த படம் கனெக்ட் ஆகும். ஆனால் அதை பார்ப்பது கஷ்டம். இந்த படம் வந்தால் என்ன அடி அடிக்கிறோம் என்று பலர் கம்ப்யூட்டர் முன்பு கீ போர்டில் கைவைத்தபடியே காத்திருந்தார்கள். ஆனால் அவர்கள் அடிக்கும் அளவுக்கு இந்த படத்தில் எதுவும் இல்லை. படம் நன்றாகவே இருக்கிறது. அது அவர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றம்தான்.

    பாராட்டு

    இரண்டாவது பாதியில் கூட படம் சீரியஸாகத்தான் இருந்தது, போர் அடிக்கவில்லை. ஆனால் முதல் பாதி அளவுக்கு இல்லை. படம் மேக்கிங்காகவும் டெக்னிக்காகவும் கொஞ்சம் ஸ்ட்ராங்காகவே இருந்தது. கேமரா ஒர்க்கும் அற்புதம். முதல் பாதி அளவுக்கு பாடல்கள் இல்லை என்றாலும் பின்னணி இசை எல்லாம் அருமையாக இருந்தது. இந்த படத்தின் முதல் பாதி சூப்பர் என்று சொல்லலாம் இரண்டாம் பாதி மோசம் இல்லை என்றாலும் ஓகே ரகம். மொத்தமாக பார்த்தால் இந்த படம் அதிகமானவர்களுக்கு பிடிக்கும். ரொம்ப வருஷத்துக்கு பிறகு ரஜினிக்கு இது ஒரு சூப்பர் ஹிட் படம் என்று பாராட்டி இருக்கிறார்.

    Advertisement
    Jailer 2 vs Coolie: கூலியை முந்த முடியாத ஜெயிலர் 2 முதல் நாள் வசூல்.. இவ்வளவு வித்தியாசமா?

    English Summary

    Jailer 2 review: Released yesterday, September 15, amidst high expectations, the film *Jailer 2* is receiving a good response in theaters. Interestingly, 'Blue Sattai' Maaran has reviewed the film and offered praise—a fact that has come as a surprise to fans. Given that he is known for frequently poking fun at Rajinikanth (whom he often refers to as "Thalaivar"), his decision to give this film a positive review is quite unexpected.