சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கி இருக்கும் ஜெயிலர் 2 திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. முதல் நாளே உலகம் முழுவதும் 125 கோடி வசூல் செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. படத்தை பார்த்த பலரும் படத்தின் கதை மற்றும் ரஜினியின் நடிப்பை பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இப்படி படம் ஒரு பக்கம் கொண்டாட்டத்தில் இருக்கும் நேரத்தில் மோகன்லால் தொடர்பான ஒரு சர்ச்சை இப்போது பேசு பொருளாகி இருக்கிறது.
ரஜினி, நெல்சன் கூட்டணியில் வெளியான ஜெயிலர் முதல் பாகத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி என பல மொழிகளை சேர்ந்த பிரபலங்கள் கெஸ்ட் ஆக நடித்திருந்தார்கள். அவர்கள் திரையில் வரும் காட்சிகள் ரசிகர்களுக்கு உற்சாகம் கொடுத்துடன் படத்தின் முக்கிய விஷயமாகவே மாறிவிட்டது. குறிப்பாக மோகன்லால் வரும் காட்சிக்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு அப்போது பெரிய அளவில் பேசப்பட்டது. அதனால்தான் 2வது பாகத்திலும் மோகன்லால் எப்படி வரப்போகிறார் என்று எதிர்பார்ப்பு அவரது ரசிகர்களிடம் அதிகமாக இருந்தது. அந்த எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி ஜெயிலர் 2 படத்தில் அவர் வரும் காட்சிகளும் திரையரங்குகளில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. குறிப்பாக கிளைமாக்ஸ் எஸ்ஜே சூர்யாவின் தனி விமானம் காட்சியில் மோகன்லால் வருவது ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறது. ஆனால் என்னதான் மோகன்லால் இந்த படத்தில் கெஸ்ட் ஆக நடித்திருந்தாலும், அவருடைய ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறதாம். அதிலும் மோகன்லாலின் ஆடை வடிவமைப்பாளர் ஜிஷாத் சம்சுதீன் வெளியிட்ட பதிவு சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. அதில் மோகன்லால் இந்த படத்திற்காக மூன்று கெட்டப் போட்டு இருந்தார். ஆனால் அது எல்லாமே டெலிட் செய்யப்பட்டிருக்கிறது. அது மட்டும் இல்லாமல் இந்த படத்தின் ப்ரோமோவில் வந்திருந்த 2 நொடி காட்சி கூட படத்தில் வரவில்லை. அதனால் அடுத்த பாகம் உருவானால் நான் அந்த படத்தில் பணியாற்ற போவதில்லை. ரசிகர்களுக்காகவும், மோகன்லாலுக்காகவும் தான் நான் நிற்கிறேன் பணம் அல்லது ஸ்டார் வேல்யூக்காக அல்ல என்று அந்த பதிவில் அவர் சொல்லி இருக்கிறார். இந்த பதிவு வெளியானதும் மோகன்லால் ரசிகர்கள் மத்தியில் கேள்விகள் எழ தொடங்கி இருக்கிறது. படத்தில் அவர் வந்த காட்சிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில் அப்படி இன்னும் சில காட்சிகள் இருந்திருந்தால் அதை ஏன் டெலிட் செய்தார்கள்? என்ற கேள்வியை சிலர் கேட்கிறார்கள். அதே நேரத்தில் இன்னும் சிலர் படத்திற்கு எது தேவையோ? எது குறைவாக குறைத்துக் கொண்டால் படம் சுவாரஸ்யமாக இருக்கும் என்று இயக்குனர் நினைக்கிறாரோ அதைத்தானே செய்ய முடியும்? இப்போதைக்கு படம் நல்ல பாசிட்டிவ் ரிவ்யூ பெற்று வருகிறது. அதற்கு முக்கிய காரணம் படத்தின் காட்சி அமைப்புகள் சரியாக இருந்தது தான். ஆனால் ஒருவருக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று கதையில் மாற்றம் செய்திருந்தால் படம் சொதப்பி இருக்குமே? இது ஏன் இவர்களுக்கு புரியவில்லை? என்று சிலர் வாதிட்டு வருகிறார்கள். இதனாலயே சோசியல் மீடியாவில் இப்போது விவாதம் வந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே நான் எந்த படத்தின் இரண்டாவது பாகத்திலும் நடிக்கவே விரும்பவில்லை, ஆனால் ஜெயிலர் படத்தில் பல குறியீடுகள் இருந்ததால்தான் நான் 2வது பாகத்துக்கு சம்மதித்தேன் என்று ரஜினி சொல்லி இருந்தார். இப்போது 2வது பாகம் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் 3வது பாகத்துக்கு இந்த கதை போகுமா? இல்லையா? அப்படி போனால் இதில் மோகன்லால் வர மாட்டாரா? என்ற கேள்வி இப்போ இணையத்தில் வந்து கொண்டிருக்கிறது.ஜெயிலர் 2 விமர்சனம்
ஆடை வடிவமைப்பாளர் பதிவு
ஜெயிலர் 2ல் ரஜினியை தாண்டி கவனம் பெறும் மூர்த்தி! டாப் ஹீரோக்களை ஓவர்டேக் செய்த நமோ நாராயணா
ரசிகர்கள் கேள்வி
ஜெயிலர் 2 எப்படி இருக்கு? படத்தில் இதுதான் பிளஸ்.. ப்ளூ சட்டை மாறன் ஓபன் ரிவ்யூ
ரசிகர்கள் விவாதம்