16 வது நாளில் வேகம் குறைந்த ஜெயிலர் 2 வசூல்..ஆனாலும் மொத்த வசூல் எத்தனை கோடி தெரியுமா? கலக்கும் ரஜினி

  • சென்னை: ரஜினிகாந்த் படம்னாலே முதல் நாள் கொண்டாட்டம் எப்படி இருக்கும் என்று சொல்லி தெரிய வேண்டியதில்லை. அதிலும் ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு பிறகு அதன் இரண்டாம் பாகமான ஜெயிலர் 2 மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாகவே இருந்தது. அந்த எதிர்பார்ப்புக்கு ஏற்ற மாதிரி அக்டோபர் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம், ஆரம்பத்திலேயே வசூலில் பெரிய வேட்டையைத் தொடங்கியது. முதல் நாள் மட்டும் இந்தியாவில் ரூ.59.70 கோடி நிகர வசூல், உலகம் முழுவதும் ரூ.125.25 கோடி மொத்த வசூல் என அதிரடியான கணக்குடன் களமிறங்கியது. இப்போது 16 வது நாள் நிலவரமும் வியப்பை ஏற்படுத்துகிறது.

    Advertisement

    முதல் வாரத்தில் படத்தின் வேகம் எப்படி இருந்தது என்பது ரசிகர்களுக்கே தெரியும். வார இறுதி நாட்களில் வசூல் அதிகரித்தது, இடையிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால் இரண்டாவது வாரத்தில் இருந்து தினசரி வசூலில் சரிவு தெரிய ஆரம்பித்தது. இப்போது படம் வெளியாகி 16 நாட்கள் முடிந்துள்ள நிலையில், அக்டோபர் 30-ம் தேதி ஜெயிலர் 2 இந்தியாவில் சுமார் ரூ.5.50 கோடி நெட் வசூல் செய்துள்ளதாக Sacnilk கணித்துள்ளது. இதற்கு முந்தைய நாளான 15-வது நாளில் ரூ.6.25 கோடி வசூல் செய்திருந்தது. அதோடு ஒப்பிடும்போது 16-வது நாளில் வசூல் சற்று குறைந்திருக்கிறது.

    Advertisement

    ஜெயிலர் 2 வசூல் நிலவரம்

    3வது வாரத்தில் படம் இருப்பதால் இந்த சரிவை எதிர்பார்க்கலாம் என்றாலும், முதல் வார வசூலுடன் ஒப்பிட்டு பார்த்தால் இப்போது படத்தின் வேகம் கணிசமாகக் குறைந்திருப்பது தெளிவாக தெரிகிறது. ஆனால் மொத்த வசூலை பார்த்தால் இன்னும் ரசிகர்களுக்கு கொண்டாடுவதற்கு விஷயம் இருக்கிறது. 16 நாட்கள் முடிவில் இந்தியாவில் மட்டும் ரூ.435.40 கோடி நிகர வசூலை ஜெயிலர் 2 கடந்துள்ளதாகவும், இந்திய மொத்த வசூல் ரூ.509.45 கோடியாக இருப்பதாகவும் Sacnilk தெரிவித்துள்ளது.

    மொத்த வசூல் நிலவரம்

    வெளிநாடுகளில் ரூ.267.50 கோடி வசூல் கிடைத்திருப்பதால், உலகம் முழுவதும் படத்தின் மொத்த வசூல் ரூ.776.95 கோடியை எட்டியிருக்கிறது. அதாவது ரூ.800 கோடி என்ற மைல்கல்லை நெருங்க இன்னும் சுமார் ரூ.23 கோடி மட்டுமே தேவைப்படுகிறது. இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இந்த 16-வது நாள் வசூலில் தமிழ் ரிலீஸ் தான் அதிக வசூல் செய்திருக்கிறது.

    Advertisement

    எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

    இங்கே ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். முதல் வாரத்தில் இருந்த அதே வேகத்தில் மூன்றாவது வாரத்திலும் வசூல் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. புதுப்படங்கள் வருவது, ஏற்கெனவே படம் பார்த்தவர்கள் மீண்டும் தியேட்டருக்கு வருவது குறைவது என பல காரணங்களால் வசூல் இயல்பாகவே மாறும். ஜெயிலர் 2 படத்துக்கும் இப்போது அதுதான் நடந்திருக்கிறது. ஆனாலும் 16 நாட்களில் உலகளவில் ரூ.776 கோடியைத் தாண்டியிருப்பது சாதாரணமான விஷயம் கிடையாது. ஆனாலும் இந்த படம் 100 கோடி வசூல் அடிக்குமா என்ற எதிர்பார்ப்பு தான் இப்போ ரசிகர்களுக்கு இருக்கிறது. சரி என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

    English Summary

    Expectations among fans for *Jailer 2* were exceptionally high. Living up to these expectations, the film—which hit theaters on October 15—began its run with a massive haul at the box office. It made a sensational start, raking in a net collection of ₹59.70 crore in India and a gross collection of ₹125.25 crore worldwide on its very first day. Now, the figures from the 16th day are equally astonishing.