ஜெயிலர் 2ல் ரஜினியை தாண்டி கவனம் பெறும் மூர்த்தி! டாப் ஹீரோக்களை ஓவர்டேக் செய்த நமோ நாராயணா

  • சென்னை: ஜெயிலர் 2 படத்தை பார்த்துவிட்டு வெளியே வரும் ரசிகர்கள் ரஜினிகாந்தின் மாஸ் காட்சிகளை பற்றி பேசுவார்கள், அனிருத்தின் இசையை பற்றி கொண்டாடுவார்கள் என்றுதான் எதிர்பார்த்திருப்போம். ஆனால், இப்போது சமூக வலைதளங்களைத் திறந்து பார்த்தால் வேறொரு விஷயம்தான் கண்ணில் படுகிறது. படத்தில் மூர்த்தி கதாபாத்திரத்தில் நடித்த நமோ நாராயணாவைப் பற்றித்தான் பலரும் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

    Advertisement

    இந்த படத்தில் ஹ்ரித்திக் ரோஷன், மோகன்லால் உள்ளிட்ட பிரபலமான நடிகர்கள் கேமியோவாக வந்திருக்கிறார்கள். அவர்கள் ஸ்கிரீனில் வந்ததும் ரசிகர்களை கவர்ந்தார்கள். ஆனால், இப்போது சமூக வலைதளங்களில் ரசிகர்கள் அதிகமாகப் பேசுவது மூர்த்தி கதாபாத்திரத்தை பற்றித்தான். அந்த அளவுக்கு அவருடைய காமெடி காட்சிகள் பலருக்கும் பிடித்திருக்கின்றன.

    Advertisement

    ஜெய்லர் 2 மூர்த்தி

    மூர்த்தி பேச ஆரம்பித்தாலே திரையரங்கில் சிரிப்பு சத்தம் அடங்குவதில்லை என்று ரசிகர்கள் தங்களுடைய அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறார்கள். குறிப்பாக, அவர் பேசும் வசனங்களும், சரியான நேரத்தில் வரும் காமெடியும் படத்தின் கலகலப்பாக மாற்றி இருப்பதாக பலர் கருத்து தெரிவிக்கின்றனர். அதிலும் தோர், ஹாரி பாட்டர் போன்ற குறிப்புகள் இடம்பெறும் இடங்கள் ரசிகர்களுக்கு இன்னும் சுவாரஸ்யமாக இருந்திருக்கின்றன.

    ரசிகர்கள் கருத்து

    மூர்த்திக்காகவே இன்னொரு தடவை ஜெயிலர் 2 பார்க்கலாம் போல! என்றும், ரஜினி சாரை வைத்து படம் எடுத்தது சரி, மூர்த்தியை வைத்து தனியாக ஒரு படமே எடுங்கள் நெல்சன்! என்றும் ரசிகர்கள் ஜாலியாக கமெண்டுகள் பதிவிட்டு வருகின்றனர். இன்னும் சிலர், மூர்த்தி கேரக்டர் இரண்டாம் பாதி முழுவதும் வந்திருந்தால் படம் இன்னும் கலகலப்பாக இருந்திருக்கும் என்றும் கூறுகின்றனர்.

    Advertisement

    நமோ நாராயணா பயோகிராபி

    அப்படியென்றால் இந்த நமோ நாராயணா யார் என்று கேட்பவர்களுக்கு, இவர் தமிழ் சினிமாவில் ரொம்ப வருஷமாகவே பல்வேறு கேரக்டரில் நடித்து வருகிறார். 2009ஆம் ஆண்டு வெளியான நாடோடிகள் படத்தின் மூலம் பிரபலமானார். ஈசன், போராளி, குட்டிப்புலி, கொம்பன், அப்பா, விசுவாசம் என பல படங்களில் நடித்திருக்கிறார். இதுவரை பல படங்களில் குணச்சித்திரம், வில்லன் என வெவ்வேறு வேடங்களில் பார்த்த இவரை, இப்போது ஜெயிலர் 2-வில் முழுக்க முழுக்க காமெடி கலந்த அரசியல்வாதி மூர்த்தி கதாபாத்திரத்தில் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

    Jailer 2 vs Coolie: கூலியை முந்த முடியாத ஜெயிலர் 2 முதல் நாள் வசூல்.. இவ்வளவு வித்தியாசமா?
    அதே நேரத்தில், படத்தில் ஹ்ரித்திக் ரோஷன், மோகன்லால் போன்ற பெரிய நட்சத்திரங்கள் வருவதால் அவர்களுடைய காட்சிகளுக்கு எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், படத்தைப் பார்த்த பிறகு மூர்த்தியின் காமெடியைத் தனியாக பேசும் அளவுக்கு நமோ நாராயணா கவனம் ஈர்த்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    Advertisement
    ஜெயிலர் 2 முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? ரஜினியின் படத்துக்கு உலகம் முழுவதும் இப்படி வரவேற்பா?

    English Summary

    Jailer 2 : One would expect that fans emerging from a screening of *Jailer 2* would be talking about Rajinikanth’s mass moments or celebrating Anirudh’s music. However, a look at social media reveals something quite different—many people are talking about Namo Narayana, who played the character 'Moorthy' in the film.