உண்மையான கிறிஸ்தவன் இப்படி பண்ணுவாரா? முதல்வர் விஜய்யை தொடர்ந்து விமர்சிக்கும் ஜேம்ஸ் வசந்தன்

  • சென்னை: விஜய் அரசியலுக்கு வந்த காலத்தில் இருந்தே அவருடைய அரசியல் செயல்பாடுகளை ஜேம்ஸ் வசந்தன் கடுமையாக விமர்சித்து வருகிறார். இப்போது மீண்டும் விஜய்யின் அதை மத அடையாளம் மற்றும் அரசியல் நடவடிக்கைகள் குறித்து பேசியது இணையத்தில் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    Advertisement

    ஜேம்ஸ் வசந்தன் பேட்டி

    சமீபத்தில் ஒரு பேட்டியில் ஜேம்ஸ் வசந்தன் பேசும்போது, விஜய் ஒரு பித்தலாட்டக்காரர். முட்டுல குஷன் வச்சிட்டு சர்ச்சில் முட்டி போட்டு ஏமாற்றினார். கோவிலுக்கு போய் கட்சி துண்டை மேல போட்டுகிட்டு அரசியல் தான் பண்ணினார். அவர் முதலில் கிறிஸ்தவனே கிடையாது. சர்டிபிகேட்ல இருந்தா மட்டும் கிறிஸ்தவனாகிட முடியாது. கிறிஸ்தவர்கள் ஓட்டை வாங்க சர்ச்சில் முட்டி போட்டார். உடனே திருச்செந்தூரில் போய் சாமி கும்பிட்டு விபூதி, குங்குமம் பூசி கிட்டார்.

    Advertisement

    கிறிஸ்தவர்கள் சப்போர்ட்

    ஒரு உண்மையான கிறிஸ்தவன் அப்படி பண்ண மாட்டான். அவரை ஆதரிக்கும் கிறிஸ்தவர்கள் போலி கிருத்தவர்களாகத்தான் இருப்பார்கள். ஏன்னா எந்த கிறிஸ்தவனும் வேறு கடவுளை வணங்க மாட்டான் என்று ஜேம்ஸ் வசந்தன் பேசி இருக்கிறார். இதற்கு விஜய் ரசிகர்கள், அவர் நான் இந்த மதத்தை சார்ந்தவர் என்று எந்த இடத்திலும் சொல்லவில்லை. அவர் ஜோசப் விஜய் என்று தன்னுடைய பெயரை சொல்லி இருக்கிறாரே தவிர தனது கட்சியிலேயே பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும் என்று சொல்லி இருக்கிறார், அதனால் அவர் எல்லா கடவுளையும் கும்பிடுபவர் என்று விஜய்க்காக சப்போர்ட் செய்கிறார்கள்.

    Advertisement

    தொடர்ந்து விமர்சனம்

    விஜய் பற்றி ஜேம்ஸ் வசந்தன் பேசுவது ஒன்றும் புதிதல்ல. அவர் விஜய் முதல் மாநாடு நடத்தியதில் இருந்தே அவரை விமர்சித்து வருகிறார். கடந்த ஏப்ரல் மாதத்தில் கூட விஜய்க்கு அரசியல் அறிவு போதவில்லை, மக்கள் மத்தியில் பல வருஷங்களாக இருந்து அவருடைய பிரச்சனைகளை புரிந்து கொண்ட பிறகு ஆட்சிக்கு வரவேண்டும் என்று சொல்லி இருந்தார். அது மட்டும் அல்லாமல் கரூர் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்த போதும் அதிகமான விமர்சனங்களை வைத்திருந்தார். விஜய் வெற்றி பெற்ற பிறகும் தொடர்ந்து அவரை விமர்சித்து வருகிறார். இதற்கு விஜய் தரப்பில் இருந்து என்ன பதில் வரப்போகிறது என்பது பலருடைய கேள்வியாக இருக்கிறது.

    Advertisement

    English Summary

    James Vasanthan : James Vasanthan has been a vocal critic of Vijay's political activities ever since the actor entered politics. Now, his recent comments regarding Vijay's religious identity and political actions have sparked a debate online.