விஜய் கட்சி ஆரம்பித்தது அவர் பணத்தில் இல்லை! அவருக்கு செலவு செய்வது யார்? ஜேம்ஸ் வசந்தன் போட்ட குண்டு


  • சென்னை: முதல்வர் விஜய்யை ஆதரிப்பவர்களும், விமர்சிப்பவர்களும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து மோதிக்கொண்டிருக்கும் சூழலில், இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கூறிய புது குற்றச்சாட்டு தற்போது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    விஜய் அரசியலுக்கு வந்த நாள் முதல் அவரது அரசியல் முடிவுகள் குறித்து ஓபனாக விமர்சித்து வரும் ஜேம்ஸ் வசந்தன், சமீபத்திய ஒரு பேட்டியில் இன்னும் கடுமையான கருத்துகளை முன்வைத்துள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    Advertisement

    ஜேம்ஸ் வசந்தன் பேட்டி

    அந்த பேட்டியில் ஜேம்ஸ் வசந்தன் பேசும்போது, "விஜய் கட்சி ஆரம்பித்தது அவருடைய சொந்த பணத்தில் இல்லை. ஆரம்பத்திலேயே அவர் தனது சொந்த பணத்தை அரசியலுக்கு செலவழிக்க மாட்டேன் என்று கூறியதாக நான் கேள்விப்பட்டேன். கட்சி தொடங்குவதற்குத் தேவையான முழு நிதியையும் வேறு ஒருவர் கொடுத்ததாகவும், அதற்குப் பின்னால் ஒரு பெரிய உள்நோக்கம் இருப்பதாகவும் நான் விசாரித்த வரையில் தெரிய வந்தது" என்று கூறியுள்ளார்.

    அதோடு, "விஜய்க்கு அந்த பணம் எங்கிருந்து வந்தது, யார் கொடுத்தார்கள் என்ற தகவல்களும் பிறகுதான் எனக்கு தெரிய வந்தது. இதை சாதாரண விஷயமாக பார்க்க முடியாது" என்றும் அவர் அந்த பேட்டியில் பேசி இருக்கிறார். இந்தக் கருத்துகள்தான் தற்போது சமூக வலைதளங்களில் கடும் விவாதமாக மாறியுள்ளன.

    Advertisement

    ஆதாரம் வெளியிடப்படவில்லை

    ஜேம்ஸ் வசந்தன் தனது பேட்டியில் இந்த குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தாலும், அந்தக் கருத்துகளுக்கு ஆதாரமாக எந்த ஆவணத்தையோ, பெயர்களையோ பேட்டியில் காட்டவில்லை. அதனால், அவரது பேச்சுக்கு எதிராகவும், ஆதரவாகவும் பல்வேறு கருத்துகள் பதிவாகி வருகின்றன.

    இதற்கு முன்பும் விஜய்யை விமர்சித்தவர்

    ஜேம்ஸ் வசந்தன் இசையமைப்பாளராக மட்டுமல்ல, சமூக மற்றும் அரசியல் விஷயங்கள் குறித்தும் அடிக்கடி கருத்து தெரிவிப்பவர். குறிப்பாக விஜய் அரசியலுக்கு வந்த பிறகு, அவரது கட்சி, அரசியல் அணுகுமுறை, தேர்தல் வாக்குறுதிகள் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்துள்ளார். அதனால், இந்தப் புதிய பேட்டியும் அந்த வரிசையில் வெளியாகியிருப்பதாக பலர் கூறி வருகின்றனர்.

    Advertisement
    உதயநிதியால் பட்ட அவமானம்.. பழி தீர்க்க தான் விஜய் அரசியலுக்கு வந்தாரா? ஜேம்ஸ் வசந்தன் சொன்ன காரணம்

    விஜய் அரசியல் பயணம்

    விஜய் தொடங்கிய கட்சி குறுகிய காலத்திலேயே தமிழக அரசியலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. தேர்தலில் வெற்றி பெற்று தற்போது முதலமைச்சராக பதவி வகித்து வருகிறார். அரசின் திட்டங்கள், நிர்வாக நடவடிக்கைகள், அதிகாரிகளுடனான ஆலோசனைகள் என அவர் தொடர்ந்து அரசுப் பணிகளில் கவனம் செலுத்தி வரும் நிலையில், அவரைச் சுற்றிய அரசியல் விவாதங்களும் தொடர்ந்து நீடித்து வருகின்றன.

    நம்ம கூடவே ஒரு MGR-ஆக விஜய் இருந்திருக்காரு! கீர்த்தி சுரேஷ் கல்யாணத்தில் சொன்ன விஷயம்.. முதல்வர் பற்றி லிங்குசாமி ஓபன்
    Advertisement

    கருத்து மோதல்

    ஜேம்ஸ் வசந்தனின் இந்தப் பேட்டி வெளியாகிய பிறகு, ஒரு தரப்பு, "இவ்வளவு பெரிய குற்றச்சாட்டை சொல்கிறாரே என்றால் அதற்கு ஆதாரமும் வெளியிட வேண்டும்" என்று கேள்வி எழுப்பி வருகிறது. மற்றொரு தரப்பு, "அவர் பல விஷயங்களை வெளிப்படையாக பேசுபவர். அதனால் அவரது கருத்தையும் கவனிக்க வேண்டும்" என்று பதிவிட்டு வருகிறது.

    மொத்தத்தில், விஜய்யின் அரசியல் பயணத்தைச் சுற்றிய விவாதங்கள் இன்னும் குறையாத நிலையில், ஜேம்ஸ் வசந்தனின் இந்த புதிய பேட்டி சமூக வலைதளங்களில் மீண்டும் அரசியல் சூட்டை கிளப்பியுள்ளது.

    English Summary

    James Vasanthan: With supporters and critics of Chief Minister Vijay constantly clashing on social media, a new allegation made by music composer James Vasanthan has created a sensation again. James Vasanthan, who has been openly criticizing Vijay's political decisions since the day he entered politics, has come out with more harsh comments in a recent interview. The video is currently going viral on social media.