சென்னை: தளபதி விஜய் சந்திப்பில் வெளியான ஜனநாயகன் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 22 நாட்கள் ஆகின்றது. ஜூலை 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்த படம் விஜய்யின் சினிமா பயணத்தில் மிகவும் முக்கியமான படமாக பார்க்கப்படுகிறது. காரணம் அரசியல் இருந்து முழு நேரமாக களமிறங்கிய விஜய்யின் கடைசி திரைப்படம் இது என்று அவரே அறிவித்திருக்கிறார். இந்த நிலையில் படம் வெளியான முதல் வாரத்தில் வேகமாக வசூலில் முன்னேறிய நிலையில் தற்போது 3வது வாரத்தை கடந்துள்ள நிலையில் இந்த படம் எவ்வளவு வசூல் செய்தது? என்ற தகவல் வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.
ஆகஸ்ட் 12ஆம் தேதி நேற்று படத்தின் 21 வது நாள் வசூல் நிலவரப்படி, இந்தியாவில் மட்டும் 65 லட்சம் நெட் வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதன் மூலம் இந்தியாவில் படத்தின் மொத்த நெட் வசூல் 194.35 கோடியாக உயர்ந்துள்ளது. இந்தியா கிராஸ் வசூல் சுமார் 226.37 கோடி எனவும் வெளிநாட்டு வசூல் உடன் சேர்த்து உலக அளவில் படம் இதுவரை 319.57 கோடி வசூல் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது நேற்று வரை உலக அளவில் சுமார் ₹320 கோடி நெருங்கி விட்டது என்று கூறப்படுகிறது. முதல் 2 வாரங்களில் இருந்த ரசிகர்களின் ஆர்வம் தற்போது கொஞ்சம் குறைந்து இருப்பது வசூலில் தெரிகிறது. குறிப்பாக 3வது வாரத்தில் வார நாட்களில் தினசரி வசூல் ஒரு கோடிக்கு கீழே சென்றுள்ளது. 20 நாளிலும் படம் இந்தியாவில் 65 லட்சம் நெட் வசூல் செய்திருந்த நிலையில் 21 வது நாளிலும் அதே நிலை அளவிலான வசூலை பெற்று இருக்கிறது. இதனால் படத்தின் வேகம் குறைந்தாலும் பெரிய அளவில் வீழ்ச்சி ஏற்படாமல் ஓடிக் கொண்டிருக்கிறது. இதற்கு முன்பு 3வது வார இறுதியில் மட்டும் படம் மீண்டும் வேகம் எடுத்திருந்தது. 18 ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை இந்தியாவில் 3.60 கோடி நெட் வசூல் செய்ததாக தகவல்கள் வெளியாகின. விஜய்யின் கடைசி படம் 300 கோடி வசூலை அடைந்து விடும் என்று ரசிகர்கள் நம்பிக்கொண்டிருந்த நிலையில் இப்போது அந்த சாதனையை கடந்து விட்டது. ஆனாலும் இந்த படம் 100 நாட்கள் ஓடும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் தற்போது இருக்கும் சூழ்நிலையில் அதுபோல 100 நாட்கள் தியேட்டரில் படம் ஓடிக் கொண்டிருக்குமா? என்பதும் பலரின் கேள்வியாக இருந்தது. இந்த நிலையில் இப்போது 22 வது நாளில் படத்தின் வசூல் ஆரம்பத்தை விட குறைய தொடங்கி இருப்பதால் அது ரசிகர்களுக்கு வருத்தத்தை கொடுத்து இருக்கிறது. ஆனாலும் விஜயின் கடைசி படம் ஜனநாயகன் தியேட்டரில் ரிலீஸ் ஆவதற்கு முன்பே ஒரு கோடிக்கும் மேலானோர் படத்தை இணையத்தில் பார்த்துவிட்டனர். இந்த படம் இணையத்தில் லீக் ஆனதால் இனி தியேட்டரில் ரிலீஸ் ஆனாலும் வேஸ்ட் தான் யார் பார்க்கப் போகிறார்கள் என்று பலரும் சொல்லி வந்தனர். ஆனால் அதற்கெல்லாம் பதிலடி கொடுக்கிற மாதிரி வசூல் 300 கோடியை தாண்டி இருப்பது கெத்து தான் என்று விஜய் ரசிகர்கள் கூறி வருகின்றனர். இந்த படம் சென்சார் பிரச்சனை காரணமாக பல மாதங்களாக ரிலீஸில் பிரச்சனை வந்து கொண்டே இருந்தது. கடைசியில் ஒரு வழியாக நடிகராக விஜய் நடித்த இந்த படம் அவர் முதல்வரான பிறகு ரிலீஸ் ஆகி இப்போது வசூலிலும் வேட்டையை நிறுத்தவில்லை.ஜனநாயகன் வசூல் நிலவரம்
3வது வாரம் வசூல்
ரசிகர்கள் எதிர்பார்ப்பு