Jana Nayagan Box Office: 27 நாட்களை கடந்தும் குறையாத ஜனநாயகன் வேகம்.. மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?

  • சென்னை: விஜய்யின் கடைசி படமாக வெளியான ஜனநாயகன் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 27 நாட்கள் முடிவடைந்திருக்கும் நிலையில், உலக அளவில் ₹322 கோடியை கடந்து வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஜனநாயகன் திரைப்படம் நடிகர் விஜய்யின் திரை பயணத்தில் மிக முக்கியமான படமாகவே இருக்கிறது. ஹெச் வினோத் இயக்கத்தில் விஜய் நடித்த இந்த படம் அரசியல் பயணத்திற்கு முன்பாக அவரது கடைசி திரைப்படம் என்பதால் அறிவிக்கப்பட்ட நாள் முதலே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.

    Advertisement

    பலகட்ட தடைகளுக்குப் பிறகு இந்த படம் ஜூலை 23, 2026 அன்று திரையரங்குகளில் வெளியானது. அந்த வகையில் இன்று ஆகஸ்ட் 18ஆம் தேதி கணக்கு படி படம் 27 நாளில் அடி எடுத்து வைத்திருக்கிறது. ஜனநாயகன் படத்திற்கு முதல் நாளில் விஜய் ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு மிகப்பெரியதாக இருந்தது. பல்வேறு பாக்ஸ் ஆபீஸ் கணக்குப்படி முதல் நாளில் இந்தியாவில் ரூ. 40 கோடிக்கு மேல் வசூல் கிடைத்ததாகவும், உலக அளவில் நான் ரூ. 78 கோடி முதல் 80 கோடி வரை வசூல் செய்ததாகவும் ஆரம்ப கட்ட தகவல்கள் வெளியானது.

    Advertisement

    ஜனநாயகன் மொத்த வசூல்

    இந்த படம் ஏற்கனவே இணையத்தில் லீக் ஆகி இருந்தாலும் இந்த படத்தை ரசிகர்கள் தியேட்டரில் கொண்டாடி தீர்த்து விட்டார்கள். விஜய்யின் கடைசி படம் என்ற எமோஷனலுடன் இந்த படத்திற்கு ரசிகர்களின் ஆதரவும் அமோகமாக இருந்தது. ஆனால் படம் வெளியாகிய 27 நாட்கள் ஆன பிறகும் ஆதரவு நீடித்துக் கொண்டிருப்பது தான் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    முதல் வார முடிவில் உலக அளவில் ரூ. 217 கோடியை கடந்ததாக அப்போது தகவல்கள் வெளியாகின. தற்போதைய பாக்ஸ் ஆபீஸ் நிலவரப்படி ஜனநாயகன் திரைப்படம் உலக அளவில் ரூ. 322.56 கோடி வசூல் செய்துள்ளதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. நெட் வசூல் சுமார் 196.68 கோடி என்றும், வெளிநாட்டு வசூல் சுமார் 93.50 கோடி என்றும் கூறப்படுகிறது.

    Advertisement

    ஜனநாயகன் வசூல் நிலவரம்

    அதாவது இந்தியாவில் மட்டும் 200 கோடி வசூல் என்ற மைல் கல்லை நெருங்கி விட்டது ஜனநாயகன். அதே நேரத்தில் படத்தின் 27 வது நாள் வசூல் தற்போது மிகவும் குறைந்து விட்டது. இந்தியாவில் வசூல் அடிப்படையில் செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி 1.61 லட்சம் வசூலாகி உள்ளது. 55 காட்சிகளில் 1,127 டிக்கெட்டுகள் விற்பனையாகி உள்ளதாக டிராக்கர் தெரிவிக்கின்றன. இதற்கு முன்பு ஆகஸ்ட் 17ஆம் தேதி 26வது நாளில் 19. 93 லட்சம் வசூலாகி இருந்த நிலையில் 27 வது நாள் வசூல் மேலும் குறைந்து இருக்கிறது.

    Advertisement

    ஜனநாயகன் ஓடிடி

    இதனால் இதை வைத்து படம் தோல்வி என்று சொல்ல முடியாது. ஏற்கனவே 3 மாதங்களுக்கு மேலாக திரையரங்குகளில் வசூலை பெற்றிருக்கிறது. கணக்குப்படி பார்க்கும்போது 4 வாரங்கள் கழித்து இந்த படம் ஓடிடியில் வெளியாகும் நிலையில், ஜனநாயகம எப்போது வெளியாகும் என்று எதிர்பார்ப்பும் ரசிகர்களுக்கு இருக்கிறது.

    English Summary

    Jana Nayagan: Vijay's last film, Demokraman, has been released for 27 days, and it has collected more than ₹322 crore worldwide. The film Jana Nayagan is the most important film in actor Vijay's screen journey. Directed by H Vinod, this Vijay starrer film was his last film before his political journey and there was huge anticipation among the fans from the day it was announced.