மீண்டும் சாதித்த விஜய்.. ஜனநாயகன் 4 நாளில் எத்தனை கோடி வசூல் தெரியுமா? ஞாயிற்றுக்கிழமை எகிறிய மவுசு

  • சென்னை: விஜய் சினிமாவுக்கு விடை கொடுக்கும் படமாக வெளியான ஜனநாயகன் ரிலீசுக்கு முன்பே சர்ச்சைகளில் சிக்கிய படம். ரிலீஸ் தாமதம் இணையத்தில் முழு படம் லீக் ஆனது என பல தடைகளை சந்தித்தாலும் பாக்ஸ் ஆபிஸில் மட்டும் படம் வேற லெவலில் மாஸ் காட்டுகிறது. ஜூலை 23ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியான இந்த படம் முதல் வார இறுதியில் மாபெரும் வசூல் முன்னேற்றம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

    Advertisement

    ஜனநாயகன் வசூல் நிலவரம்

    பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்களில் வெளியாகியுள்ள தகவலின் படி ஜனநாயகன் திரைப்படம் முதல் 4 நாட்களில் உலகம் முழுவதும் சுமார 217 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை இந்தியாவில் சுமார் 37.17 கோடி வசூலித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றனர். முதல் நாள் வசூல் குறித்து பல்வேறு சந்தேகங்கள் இருந்த நிலையில் 2வது நாளில் இருந்து தொடர்ந்து வசூல் முன்னேறி கொண்டிருப்பது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Advertisement

    ஜனநாயகன் தியேட்டரில் வெளியாகும் முன்பே படத்தின் காட்சிகள் சோசியல்மீடியாவில் லீக் ஆகிவிட்டது. இதனால் வசூல் பாதிக்கப்படும் என்று பலரும் கணித்தனர். ஆனால் அந்த கணிப்புகளை முறியடிக்கும் வகையில் தமிழ்நாட்டு மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் ரசிகர்கள் திரையரங்குகளுக்கு படையெடுத்தனர். பல இடங்களில் அதிகாலை காட்சிகள் ஹவுஸ்புல் ஆனதோடு விஜய்யின் கடைசி படம் என்பதால் ரசிகர்களின் எமோஷனலான காட்சிகளையும் வைரல் ஆனது.

    கண்ணீர் விடும் ரசிகர்கள்

    ஜனநாயகன் வெறும் ஒரு படமாக மட்டுமல்லாமல் விஜய் திரை உலகுக்கு விடைபெறும் படமாக அமைந்துள்ளது. அதனால் தான் பல ரசிகர்கள் ஒரு முறை பார்த்ததும் மீண்டும் டிக்கெட் எடுத்து தியேட்டருக்கு செல்வதாக தியேட்டர் வட்டாரங்கள் கூறுகின்றன. கடைசி காட்சியில் ரசிகர்கள் கண்ணீர் மல்க தளபதி தளபதி என்று கத்தும் வீடியோக்களையும் அதிகமாக சோசியல் மீடியாவில் பார்க்க முடிகிறது.

    Advertisement

    ஜனநாயகனின் சாதனை

    அதே நேரத்தில் இந்த படத்தின் வசூலுக்கு முக்கிய காரணம் விஜய்யின் ஸ்கிரீன் ப்ரெசென்ஸ் மட்டுமில்லாமல் அனிருத் இசை, கிளைமாக்ஸ், அரசியல் வசனங்கள் ஆகியவை ரசிகர்களை பெரிதும் கவர்ந்ததாக பலரும் கருத்து தெரிவிக்கிறார்கள். முதல் 4 நாட்களில் 217 கோடியை கடந்துள்ளதாக தகவல் வெளியேறி உள்ள நிலையில் இந்த வாரத்திலேயே படம் 300 கோடி உலகளாவிய வசூலை எட்டும் என்ற எதிர்பார்ப்பு பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்களில் நிலவுகிறது.

    Jana nayagan Day 3 box office: 3வது நாளில் ஜனநாயகனின் வசூல் எவ்வளவு தெரியுமா? விஜய்க்கு ரெக்கார்டு!
    படத்தை பார்த்த விமர்சனங்கள் அனைவருமே படத்திற்கு ஆகா ஓகோ என்று விமர்சனம் செய்யவில்லை. இது பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் என்பதால் சிலருக்கு இதன் சில காட்சிகள் சினிமா தனமாக இருப்பதால் பிடிக்கவில்லை என்று கருத்து தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் விஜய் ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடி வருகிறார்கள்.

    English Summary

    Jana nayagan box office: Jana nayagan, which was released as a response to Vijay cinema, was mired in controversies even before its release. Despite facing many hurdles like the delay in the release and the full film being leaked on the internet, the film has taken the masses to another level at the box office alone. Released worldwide on July 23, the film has made huge progress in its first weekend.