ஜனநாயகன் FDFS காட்சி தொடங்கியது.. டைட்டில் கார்டில் ஸ்டாலினை கிண்டல் செய்த விஜய்? ஆரம்பமே பஞ்சாயத்து

  • சென்னை: உலகம் முழுவதும் இன்று அதிகாலை முதல் ரசிகர்கள் கொண்டாட்டத்துடன் வெளியாகி உள்ள ஜனநாயகன் திரைப்படம் முதல் காட்சியிலே புதிய விவாதத்தை கிளப்பி இருக்கிறது. படத்தின் கதை, ஆக்சன், வசனங்கள் மட்டுமல்லாமல் டைட்டில் கார்டில் இடம் பெற்ற ஒரு காட்சி தான் சோசியல் மீடியாவில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.

    Advertisement

    படம் தொடங்கியதும் நடிகர் விஜய்க்கான அறிமுக டைட்டில் காட்டில் "மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்" என்ற வாசகம் இடம் பெற்று இருக்கிறது. இதன் காட்சிகளை சோசியல் மீடியாவில் ரசிகர்கள் அதிகமாக ஷேர் செய்து வருகின்றனர். இதுவரைக்கும் தளபதி, இளையதளபதி என்று விஜய்க்கு டைட்டில் கார்டு போடப்பட்டிருந்தாலும் முதல் முறையாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் என்று டைட்டில் கார்டு வந்த காட்சியின் போது விசில் சத்தம், ஆரவாரம் என கொண்டாட்டம் உச்சத்தை எட்டியதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

    Advertisement

    ஜனநாயகன் டைட்டில் கார்டு சர்ச்சை

    அதுமட்டுமல்லாமல் விஜய் டைட்டில் கார்டு பெயர் முடிந்ததும் வரும் காட்சியில் அவர் செய்த ஒரு கைசெய்கையும் தற்போது விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழகத்தில் சட்டசபை கூட்டத்தின் போது விஜய் செய்த அதே சைகையை இந்த படத்தில் பயன்படுத்தி இருக்கிறார்கள். அந்த சைகை தேர்தலுக்கு முன்பு முதலமைச்சர் மு க ஸ்டாலின் பொதுக்கூட்டத்தில் காட்டிய செய்கைக்கு பதிலடியாக விஜய் சட்டசபையில் அப்போது செய்திருந்தார்.

    இப்போது அதே ஸ்டைல் ஜனநாயகன் படத்தின் அறிமுக காட்சியிலும் இடம் பிடித்திருப்பதால் பலர் வீடியோக்களை ஷேர் செய்கிறார்கள். இதை விஜய் ரசிகர்கள் மாஸ் என்ட்ரி, அரசியலும் சினிமாவும் கலந்த தருணம் என்று கொண்டாடி வருகின்றனர். ஆனால் மற்றொரு தரப்பினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சினிமா படத்திலும் அரசியல் குறியீடுகள் தேவையா? டைட்டில் கார்டிலேயே இப்படிப்பட்ட ரெஃபரன்ஸ் அவசியமா? என்று கேள்வி எழுப்புகின்றனர்.

    Advertisement

    சோசியல் மீடியா விவாதம்

    சில திமுக ஆதரவாளர்களும் சோசியல் மீடியாவில் இந்த காட்சியை விமர்சித்து பதிவிட்டு வருகின்றனர். திரைப்படம் வெளியாகும் முன்பே சென்சார் பிரச்சனை, படம் லீக் ஆனது, அரசியல் விவாதம் என பல காரணங்களால் பேசப்பட்டு கொண்டே இருந்தது. இப்போது படம் வெளியாகி சில மணி நேரங்களிலேயே டைட்டில் கார்டு மற்றும் இண்ட்ரொடக்சன் காட்சிகளில் அரசியல் ரீபரன்ஸ்கள் புதிய விவாதத்தை உருவாக்கி இருக்கிறது.

    ஜனநாயகன் விஜய் செய்கை

    இருந்தாலும் சோசியல் மீடியாவில் பரவி வரும் விளக்கங்கள் மற்றும் அரசியல் தொடர்பான விளக்கங்கள் அனைத்தும் ரசிகர்களின் விளக்கங்களாகவே உள்ளது. படக்குழு இது குறித்து எந்த அதிகாரப்பூர்வமான விளக்கமும் வெளியிடவில்லை. இதனால் சட்டசபைக்குள் விஜய் ஸ்டாலினை கிண்டல் செய்கிறார், அவருடைய கடைசி படத்திலும் கூட இப்படி ஸ்டாலினை அசிங்கப்படுத்தனுமா? என்று சிலர் கமெண்ட்ஸ் கொடுப்பதையும் பார்க்க முடிகிறது.

    English Summary

    Jana nayagan : The film Jana nayagan , which has been released worldwide since early morning with fan celebrations, has sparked a new debate in the first scene. Apart from the film's story, action, dialogues, there is a scene in the title card that is being talked about a lot on social media.