அமெரிக்காவிலும் களைக்கட்டும் “ஜனநாயகன்” ஃபீவர்.. 719 ஷோ, 356 தியேட்டர்... ஆனால் ரசிகர்கள் கேள்வி இதுதான்!

  • சென்னை: முதல்வர் விஜய் நடித்த கடைசி படமான ஜனநாயகன் படம் நாளை வெளியாக போகிறது என்ற எதிர்பார்ப்பில் உலகம் எங்கும் ரசிகர்கள் ஆர்வத்தோடு காத்திருக்கிறார்கள். ஏற்கனவே கடந்த சில மாதங்களாகவே இந்த படம் எப்போ தான் தியேட்டருக்கு வரும் என்று காத்திருந்த ரசிகர்களுக்கு ஒரு வழியாக இப்போ விடை கிடைத்திருக்கிறது. அதே நேரத்தில் இந்த திரைப்படம் தமிழகத்தில் மட்டுமல்லாமல் அமெரிக்காவிலும் சாதனையை செய்து கொண்டிருக்கிறது.

    Advertisement

    ஜனநாயகன் திரைப்படத்தை தன்னுடைய கடைசி படமாக விஜய் அறிவித்ததும் ரசிகர்கள் எமோஷனல் ஆனாலும் இந்த படத்தை நாங்கள் பெரிய கொண்டாட்டமாக கொண்டாடுவோம் என்று எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் பொங்கலுக்கு வெளியாகும் என்று சொன்ன திரைப்படம் கடைசி நேரத்தில் சென்சார் பிரச்சனையால் வெளியாகாமல் போனது எல்லோருக்கும் தெரிந்த சங்கதி தான். அதற்குப் பிறகு படத்தின் காட்சிகள் கூட சோசியல் மீடியாவில் லீக் ஆகிவிட்டது.

    Advertisement

    லீக்கான ஜனநாயகன் காட்சி

    என்னதான் மொத்த படமும் வெளியே வந்தாலும் நாங்கள் எங்க விஜய்க்கு துரோகம் பண்ண மாட்டோம் என்று அந்த படத்தை பலரும் பார்க்காமல் இருந்தனர். ஒரு சிலர் மட்டும் அந்த படத்தை பார்த்து இருந்தனர். ஒரு வழியாக 7 மாதமாக காத்திருந்த ரசிகர்களுக்கு நாளை பெரிய திருவிழா தான் காத்திருக்கிறது. உலகம் முழுவதும் 30 நாடுகளில் ஜனநாயகன் படம் வெளியாக இருக்கிறது. அதிலும் 8000க்கு மேற்பட்ட தியேட்டர்களில் இந்த படம் வெளியாகிறது.

    ஜனநாயகன் ஷோ நிலவரம்

    தமிழகத்தில் ஜூலை 19ஆம் தேதி டிக்கெட் முன்பதிவு தொடங்கியது. ஏற்கனவே இந்த படத்தின் சில காட்சிகள் ஆன்லைனில் லீக் ஆனதால் படத்தில் ஒரு பாடல் காட்சி மற்றும் சில காட்சிகளையும் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தயாரிப்பு நிறுவனம் சார்பில் கூறப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் முதல் காட்சி காலை 9 மணிக்கு திரையிடப்பட அதிக வாய்ப்பு இருக்கிறது. அதே சமயம் கர்நாடகா மற்றும் கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் அதிகாலை காட்சி திறையிடப்படும் என்று கூறப்படுகிறது.

    Advertisement

    ஜனநாயகன் முதல் காட்சி

    இலங்கையில் காலை 6 மணிக்கு முதல் காட்சி திரையிடப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் அதை அரை மணி நேரம் முன்னதாக 5.30 மணிக்கு மாற்றியுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதுபோல 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் ப்ரீ புக்கிங்கில் 40 கோடி வரை வசூலித்ததாகவும் கூறப்படுகிறது. அதுபோல புக் மை ஷோவில் மட்டும் 7 லட்சத்துக்கு மேற்பட்ட டிக்கெட் விற்பனை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

    அமெரிக்காவில் சாதனை

    இந்த நிலையில் அமெரிக்க முன் பதிவு விபரமும் வெளியாகி இருக்கிறது. அதன்படி இதுவரை 2,80,693 டாலர் வசூலித்ததாகவும் 356 தியேட்டர்கள் 719 காட்சிகள் 15,458 டிக்கெட்டுகள் விற்பனை செய்ததாகவும் வெங்கி பாக்ஸ் ஆபீஸ் எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டிருக்கிறது. இது விஜய் ரசிகர்களுக்கு வியப்பை கொடுத்திருக்கிறது. மேலும் இந்த படம் நாளை ரிலீஸ் ஆகுறதுக்கு முன்னாடி என்னவெல்லாம் செய்யப் போகிறதோ என்ற எதிர்பார்ப்பில் திரை உலகமே கவனிக்கிறது.

    Advertisement

    English Summary

    Jana nayagan: Fans all over the world are eagerly waiting for the release of Chief Minister Vijay's last film, Jana nayagan. Fans who have been waiting for the release of this film for the last few months now have an answer. At the same time, this movie is making a record not only in Tamil Nadu but also in America.